Ad Widget

13 நீக்கப்பட்டால் அதனை எமது கட்சி எதிர்க்கும்: டக்ளஸ்

daklaus13 ஆவது திருத்தச் சட்டம் நீக்கப்பட்டால் அதனை எமது கட்சி எதிர்க்கும் என்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ். ரில்கோ விருந்தினர் விடுதியில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இச்சந்திப்பில், ’13 ஆவது திருத்தச் சட்டத்தினை நீக்குமாறு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புக்கள் அரசாங்கத்தினை கோரி வரும் நிலையில் 13 ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்படுமா?’ என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர்,

’13 ஆவது திருத்தத்தினை நீக்குமாறு பல்வேறு அரசியல் கட்சிகள் போராடங்களை நடத்தி வருகின்றன.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் நாளை புதன்கிழமை அமைச்சரவையில் சமர்பிக்கப்படவுள்ளது. இவ்வாறு 13 ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்பட்டால் எமது கட்சி அதனை எதிர்க்கும்.

அத்துடன் வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்படக் கூடாது என்று எதிர்ப்புக்கள் எழுந்தவண்ணம் உள்ளன. எவ்வாறான எதிர்ப்புக்கள் வந்தாலும் வடமாகாண சபைத் தேர்தல் நடைபெறும்.

இந்த தேர்தலில் அரசாங்கத்துடன் சேர்ந்தோ அல்லது தனித்தோ போட்டியிடுவதென்று இன்னமும் முடிவாகவில்லை.

பலர் தனித்து போட்டியிடுமாறு கோரி வருகின்றனர். இருந்தாலும் வடமாகாண சபைத் தேர்தல் எனது கனவு. தனித்தோ அல்லது இணைந்தோ போட்டியிட்டாலும் முதலமைச்சர் வேட்பாளர் நானே’ என்றும் அவர் தெரிவித்தார்.

Related Posts