Ad Widget

இலத்திரனியல் கழிவு முகாமைத்துவ வாரம், இன்று யாழில் சேகரிப்பு

தேசிய பாவனைக்குதவாத இலத்திரனியல் மற்றும் மின் சாதனங்களின் முகாமைத்துவ வாரத்தை முன்னிட்டு இன்று காலை 9 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை யாழ். மாநகர சபையின் ஏற்பாட்டில் நல்லூர் கோயில் அருகில் இலத்திரனியல் மற்றும் மின்கழிவு சேகரிப்பு நிகழ்வு இடம்பெறுகிறது. (more…)

நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக அச்சுவேலியில் போராட்டம்!

இராணுவத்தினர் முன்னெடுக்கும் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக அச்சுவேலி பொதுமக்கள் இன்று காலை 8 மணியளவில் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். (more…)
Ad Widget

அம்பன் பகுதி தொடர்பில் விசேட கவனம் செலுத்துகிறோம் – டக்ளஸ்

வடமராட்சி கிழக்கு, அம்பன் பகுதி உள்ளிட்ட ஏனைய பகுதிகளினது அபிவிருத்தி தொடர்பில் நாம் விசேட கவனம் செலுத்தி வருகின்றோம்' என பாரம்பறிய மற்றும் சிறுகைதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். (more…)

நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து பேரணி!

இந்தியப் பிரதமராகப் பதவியேற்றிருக்கும் நரேந்திரமோடிக்கு வாழ்த்துத் தெரிவித்து, இந்து சமயப் பேரவை மற்றும் இலங்கை இந்திய இந்து மக்கள் நட்புறவுக் கழகம் என்பன இணைந்து சிறப்பு பூசையை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தின. (more…)

கட்டாய விஞ்ஞான பாடமாக 10 ஆம் தரத்திலிருந்து பாலியல் கல்வி!

பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பிலிருந்து பாலியல் கல்வி இனிமேல் கட்டாய விஞ்ஞான பாடமாகப் போதிக்கப்படும். (more…)

வடக்கில் தமிழ் பெண் பொலிஸாருக்கான நேர்முகத் தேர்வு

இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு தமிழ் பெண் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் தமிழ் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கை யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (01) முன்னெடுக்கப்பட்டது. (more…)

விரைவில் சாவகச்சேரி வரை ரயில் சேவைகள்

கிளிநொச்சியிலிருந்து பளை வரை தற்போது விஸ்தரிக்கப்பட்டுள்ள வடக்கிற்கான ரயில் சேவைகள் இம்மாத இறுதிக்குள் சாவகச்சேரிவரை இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

வலி.மேற்கில் புகைத்தல் விழிப்புணர்வு பதாகை விசமிகளால் கிழிப்பு

வலி. மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட சங்கானை பேரூந்து நிலையத்தில் போடப்பட்ட புகைத்தல் விழிப்புணர்வு பதாகை விசமிகளால் கிழிக்கப்பட்டுள்ளது. (more…)

மாநகர சபை எதிர்க்கட்சி உறுப்பினர் வீட்டின் மீது தாக்குதல்

யாழ். மாநகர சபையின் எதிர்க்கட்சித்தலைவர் இராஜதேவன் வீடு இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளது. (more…)

குழந்தையை கொன்ற தந்தை சடலமாக மீட்பு

மருதங்கேணி கட்டைக்காடு, நித்தியவட்டி காட்டுப்பகுதியில் குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

ஐ.நாவின் விசாரணை இம்மாத நடுப்பகுதியில் ஆரம்பம் – சுமந்திரன்

இலங்கை அரசுக்கு எதிரான ஐ.நாவின் விசாரணை இம் மாத நடுப்பகுதியில் ஆரம்பமாகும் என்றும், இது தமிழரின் அரசியல் தீர்வுக்கான வழி வகையை உறுதி செய்யும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். (more…)

கோதுமை மா விலை அதிகரிப்பு?

பிரிமா கோதுமை மா கிலோவின் விலையில் 2 ரூபா 50 சதத்தினால் அதிகரிப்பதற்கு பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (more…)

மாவை எம்.பி மயங்கிச் சரிந்தார்!

மட்டக்களப்புக் கல்லடியில் பொது நிகழ்வில் உரையாற்றிக் கொண்டிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராஜா எம்.பி. திடீரென மயங்கிச் சரிந்தார். (more…)

ஊடகங்கள் உண்மைத் தன்மையுடன் செயற்பட வேண்டும் – தவராசா

ஊடகங்கள் உண்மைத் தன்மையோடு செய்திகளை வெளியிட வேண்டுமென்பதுடன் ஊடக தர்மம் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தெரிவித்துள்ளார். (more…)

அச்சுறுத்தல் சுவரொட்டிகளை பல்கலையில் ஒட்டியது யார்?  அடுத்தவாரம் பதில்

புலி ஆதரவு துண்டுபிரசுரங்கள் ஒட்டியவர்கள் என்று கூறப்படுபவர்கள், உடனடியாக கைது செய்யப்படும் நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இருமுறை துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டமை தொடர்பில் யாராவது இது வரை கைது செய்யப்பட்டுள்ளனரா? (more…)

யாழில் உலக புகையிலை எதிர்ப்பு தினம்

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு யாழ்.நகர் பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக 'ஏமாற்றத்திற்கு அகப்படாதீர்கள்'எனும் விழிப்புணர்வுத் திரைப்பலகை திரை நீக்கம் செய்யப்பட்டது. (more…)

பன்முகப்படுத்தப்பட்ட நிதியை அதிகரிக்க வடக்கு மாகாண அமைச்சரவை ஒப்புதல்

வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு வடக்கு மாகாண அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று கூறப்படுகின்றது. (more…)

யாழ்.மாநகரம் பாரிய முன்னேற்றம் கண்டு வருகின்றது – யாழ்.மாநகர முதல்வர்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக யாழ்.மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதி பாரிய முன்னேற்றம் கண்டு வருகின்றது என யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார். (more…)

ஒலி பெருக்கிகள் ஒலிக்க அயலவர்களின் ஒப்புதல் வேண்டும்

யாழில் ஆலயங்கள் மற்றும் நிகழ்வுகளில் ஒலிபெருக்கிகளை ஒலிக்கவிடுவதற்கு அயலவர்களின் வாய்மூல ஒப்புதல் வேண்டும் என யாழ். பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியசட்கர் டி.எம்.திலகரட்ண தெரிவித்தார். (more…)

விளக்கமறியல் நீடிப்பு

அச்சுவேலி, கதிரிப்பாய் பகுதியில் கடந்த 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை எதிர்வரும் ஜுன் 13ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஜோய் மகிழ்மகாதேவா உத்தரவிட்டார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts