Ad Widget

பண்ணைக் கடலுக்கு கடலணை

பண்ணைப்பகுதிலியிருந்து ஊர்காவற்றுறை வரையான பகுதிக் கடற்கரையோரத்திற்கு கடலணை அமைக்கப்படுகிறது.

கடல் நீர் வீதிகளுக்கு செல்லாமல் தடுப்பதற்காகவே கடலணை அமைக்கப்படுகிறது.

வடமாகாண போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரனின் வழிகாட்டலில் இந்த வேலைத்திட்டம் நகர அபிவிருத்தி சபையினால் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

கடந்த ஆண்டில் யாழ். மாவட்டத்தில் இவ்வாறான நகரை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் மண்டைதீவு அரியாலை,பொன்னாலை,மாதகல்,மந்துவில்,அடம்பன்,நயினாதீவு,தொண்டமனாறு,பருத்தித்துறை ஆகிய பகுதிகளில் கடலணைகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அவற்றின் 10 வது திட்டம் யாழ் பண்ணைப்பகுதியிலிருந்து ஊர்காவற்றுறை வரையான கடற்கரைக்கு கடலணை அமைத்தலாகும். இதனூடாக 20 கிலோ மீற்றர் தூரமுடைய பகுதியில் இப் பணிகள் நடைபெற்றுவருகிறது.

இதற்காக நகர அபிவிருத்தி அமைச்சினால் 875 மில்லியன் ரூபா செலவில் ஆழமாக்கும் பணிகள்,மற்றும் கற்களைபரப்பும் பணிகளும் தற்போது இடம்பெற்றுவருகின்றன.

Related Posts