Ad Widget

சிறுமி வன்புணர்வு; அடையாள அணிவகுப்பில் எவரும் அடையாளம் காட்டப்படவில்லை

காரைநகர் சிறுமிகள் இருவரை வல்லுறவுக்கு உட்படுத்தினர் என சந்தேகிக்கப்படும் கடற்படைச் சிற்பாய்கள் 37பேர் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் எவரும் அடையாளம் காட்டப்படவில்லை. (more…)

கணிதம் சித்தியெய்தாத போதும் உயர்தரத்தை பயில அமைச்சரவை அங்கீகாரம்!

கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் கணிதம் பாடத்தில் சித்தியெய்தாத நிலையில் கபொத உயர்தரத்தில் கற்கும் போது இரண்டு வருடத்துக்குள் கணிதப் பாடத்தில் சித்தியெய்தும் முறைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அமைச்சரவை கூட்டம் இன்று காலை ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன இதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்தார். இதனை ஆராய்ந்த அமைச்சரவை அதற்கு அங்கீகாரம்...
Ad Widget

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆதரவாக காரைநகரில் போராட்டம்

காரைநகர் ஊரிப் பகுதியினைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமியினை கடற்படைச் சிப்பாய் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து காரைநகர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கண்டனப் போராட்டம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்றது. (more…)

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்க நிபுணர்கள் குழு நியமனம்!

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மூன்று நிபுணர்களை நியமித்துள்ளார். (more…)

இழந்த பழமைகளை பாதுகாக்க வேண்டும் – சரவணபவன்

வடமாகாண மக்கள் யுத்தத்தில் எல்லாவறையும் இழந்துவிட்டார்கள். ஆனால், அவர்கள் இழந்த பழமையானவற்றை மீண்டும் சேர்த்து பாதுகாக்க வேண்டிய கடைப்பாடு உடையவர்களாக இருக்க வேண்டும் என (more…)

இந்தியாவில் 1,02,241 இலங்கை அகதிகள்

இந்தியாவில் ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 241 இலங்கை அகதிகள் வசிப்பதாக மக்களவையில் இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. (more…)

மலேசிய விமானம் தவறுதலாக சுடப்பட்டதாக உக்ரைன் ராணுவம் அறிவிப்பு

எம்.ஹச்.17 மலேசிய பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பாக உடனடி விசாரணைக்கு மலேசிய பிரதமர் உத்தரவிட்டுள்ளார். (more…)

வடபகுதியில் கடமையாற்ற வைத்தியர்கள் முன்வரவேண்டும்: சுரேஷ்

வடபகுதி வைத்தியசாலைகளில் சேவை செய்ய வைத்தியர்கள் முன்வரவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் நேற்று வியாழக்கிழமை (17) கோரிக்கை விடுத்துள்ளார். (more…)

தம் அடிக்காததால்தான் தம் பிடித்து நிற்கிறேன்! – டி.ராஜேந்தர்

சினிமாவில் இந்த மாதிரியான படங்களை மட்டும்தான் இயக்குவேன் என்ற கொள்கையோடு படங்கள் இயக்கி வருபவர் டி.ராஜேந்தர். 34 வருடங்களுக்கு முன்பு ஒரு தலை ராகம் படத்தை இயக்கியவர், இப்போது ஒருதலைக்காதல் என்ற படத்தை இயக்கி நடித்துக்கொண்டிருக்கிறார். (more…)

திருநெல்வேலியில் ஆணின் சடலம் மீட்பு

திருநெல்வேலி, பனிக்கர் வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலமொன்று, நேற்று வியாழக்கிழமை (17) மீட்கப்பட்டுள்ளது. (more…)

மண்டைதீவு சட்ட நிர்வாக பொறுப்புக்களை யாழ்ப்பாணத்துக்கு மாற்ற வேண்டும்

மண்டைதீவு மக்களின் சட்ட நிர்வாக பொறுப்புகளை யாழ்ப்பாணத்திற்கு மாற்றித்தர ஆவண செய்யுமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம், மண்டைதீவு மக்களின் சார்பாக உரையாற்றிய திருநெல்வேலி பரமேஸ்வரா வித்தியாலய அதிபர் ந.விஜயசுந்தரம் கோரிக்கை விடுத்தார். (more…)

முச்சக்கரவண்டி குடைசாய்ந்ததில் நால்வர் படுகாயம்

பருத்தித்துறை, முள்ளிவெளிச் சந்தியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டியொன்று குடைசாய்ந்ததால், இதில் பயணித்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று வியாழக்கிழமை மாலை அனுமதிக்கப்பட்டதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். (more…)

ஜனாதிபதியின் மருமகள் என்று கூறி பண மோசடி!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மருமகள் என்று கூறி ரஷ்ய பிரஜையிடம் பணமோசடியில் ஈடுப்பட்டதாக கூறப்படும் இலங்கை பெண்ணொருவரை கைதுசெய்வதற்கு குற்றப் புலனாய்வு பிரிவினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். (more…)

கணிதம் சித்தியடையாதவர்களும் இரண்டு வருடம் உயர்தரம் பயில அனுமதி

கணித பாடத்தில் சாதாரண தரத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கு உயர்தரத்தில் இரண்டு வருடம் கல்வி கற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் குறித்த காலத்தில் கட்டாயமாக சித்தியடைய வேண்டும் என்ற நிபந்தனையுடன் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. (more…)

புலம்பெயரிகளின் உதவியைப் பெற அரசு முட்டுக்கட்டை – மாவை எம்.பி

வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யவென புலம்பெயர் நாடுகளில் இருக்கும் பலர் எமக்கு பணத்தை அனுப்ப முன்வந்துள்ள போதும் அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. (more…)

வட மாகாண சபையின் சேவையை பொறுத்திருந்து பாருங்கள் – சத்தியலிங்கம்

2014 ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் படி இலங்கையின் ஏனைய மாகாணங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 0.42 வீதமான நிதியே வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. (more…)

வடக்கு மாகாண ஆளுநர் மீள் நியமனம்; மக்கள் ஆணையை மீறும் செயல்! முஸ்லிம் காங்கிரஸ் கண்டனம்!!

சிறுபான்மையினரின் எதிர்பார்ப்புக்களை அடக்கும் செயல்களையே எப்போதும் அரசாங்கம் செய்கின்றது. வடக்கு மாகாண ஆளுநராக சந்திரசிறி மீண்டும் நியமிக்கப்பட்டதன் மூலம் இது மேலும் பிரதிபலிக்கின்றது." இவ்வாறு தெரிவித்துள்ளார் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி. (more…)

அகதிகள் வழக்கு மீண்டும் அவுஸ்திரேலிய மேல் நீதிமன்றில்

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரி சென்ற 153 இலங்கை அகதிகள் தொடர்பான வழக்கு இன்று அவுஸ்திரேலிய மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (more…)

ஆசிரியர் நலன் குறித்த நடவடிக்கைக்கு ஜனாதிபதி உத்தரவு

ஆசிரியர்களின் நலன் தொடர்பான வேலைத்திட்டங்களை அதிகரிக்குமாறு ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ கல்வி அமைச்சருக்கும், மாகாண முதலமைச்சர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். (more…)

295 பேருடன் மலேஷிய விமானம் யுக்ரெய்னில் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதா?

மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று யுக்ரெய்னில் விழுந்து நொறுங்கியிருக்கிறது. அந்த விமானத்தில் 295 பயணிகள் இருந்தனர். இந்த விமானம் ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூருக்கு வந்துகொண்டிருந்த வழியில் இப்படி நடந்திருக்கிறது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts