Ad Widget

த.தே.கூ வை பதிவு செய்ய இணக்கம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படாமல் கூட்டம் முடிவடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது

TNA-logo

திருகோணமலையில் கடந்த வாரம் இடம்பெற்ற கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக கொழும்பில் உள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று கூட்டம் நடைபெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு மாகாண முதலமைச்சர், மாகாண அவைத் தலைவர், மாகாண சபையின் நான்கு அமைச்சர்கள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

இதன்போது கூட்டமைப்பைப் பதிவு செய்தல், கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள், மாகாண சபையின் தற்போதைய செயற்பாடுகள், அவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் அவற்றில் ஏற்படுகின்ற தடைகள், சிவாஜிலிங்கத்தால் சமர்பிக்கப்பட்ட பிரேரணை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டன.

அதன்போது கூட்டமைப்பினை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கு கடந்த காலங்களில் கட்சிக்களுக்குள் குழப்ப நிலை இருந்து வந்தது. எனினும் நேற்று தலைவர் உட்பட அனைவரும் கூட்டமைப்பினை பதிவு செய்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பில் இறுதி முடிவுகள் எவையும் எடுக்கப்படாமலேயே கூட்டம் நிறைவு பெற்றதாகவும் தெரியவருகின்றது.

வடக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளும்போது இரண்டு தரப்பினரும் இணக்கப்பாட்டுடன் செயற்படுவதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாகாண அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்கும் ஆலோசனை வழங்குவதற்கும் அபிவிருத்தி ஆலோசனைக் குழுவொன்றினை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,

Related Posts