- Saturday
- May 9th, 2026
சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், முகமூடி, யுத்தம் செய் போன்ற படங்களை இயக்கிய மிஸ்கின், தற்போது உருவாகியுள்ள படம் ‘பிசாசு’. இதில் நாகா, பிரயாகா போன்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். ரேவ் ராய் ஒளிப்பதிவு செய்துள்ளார். அரோல் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. டிரைலரை பார்த்தவர்கள் அனைவரும் படம் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து...
தென்னிந்திய சினிமாவில் ஹீரோவிற்கு இணையாக ஒவ்வொரு படத்திலும் வலுவான கதாபாத்திரங்களில் நடிப்பவர் அனுஷ்கா. இவரை பற்றி சமீபத்தில் வெளிவந்த செய்தி ஒன்று ரசிகர்களை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர் நடிப்பில் இன்று லிங்கா, விரைவில் என்னை அறிந்தால், ருத்ரமாதேவி, பாஹுபலி ஆகிய படங்கள் வரவிருக்கின்றது. இப்படங்கள் ரிலிஸ்க்கு பிறகு இவர் திருமணம் செய்து கொண்டு சினிமாவில்...
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னங்களை, தேர்தல்கள் செயலகம், வெளியிட்டுள்ளது. நேற்று (10) வெளியிடப்பட்டுள்ள சின்னங்களே எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணி முதல் 4 மணிவரை நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க பயன்படுத்தப்படும் வாக்கச் சீட்டுக்களில் அச்சடிக்கப்படும் என...
இந்தியாவில் மருத்துவ கல்வியை தொடர தடைவிதிக்கப்பட்ட ஈழ அகதி நந்தினிக்கு சீனா பல்கலைக்கழகத்தில் அனுமதி கிடைத்துள்ளது. 1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழகத்துக்கு அகதியாக குடும்பத்துடன் சென்ற இவர் அரச்சலூர் நவரசம் மெட்ரிக் பாடசாலையில் சென்ற வருடம் உயர்தரப் பரீட்சையில் சித்தியெய்தி மருத்துவ கல்விக்கு தெரிவானார். இருப்பினும் இந்திய மருத்துவ சபையின் சட்டத்திட்டபடி அகதியாக...
வடக்கு, கிழக்கைச் சேர்ந்த 31 தமிழ் இளைஞர்கள் உட்பட 405 பேர் இராணுவத்தில் முதல்கட்ட பயிற்சியை முடித்து நேற்று புதன்கிழமை வெளியேறினர். அத்துடன் அவர்களது அணிவகுப்புகளும் இடம் பெற்றன. இராணுவத்தின் 23ஆவது படைப்பிரிவுத் தலைமையகத்தில் முதலாவது பயிற்சிகளை நிறைவு செய்த 405 தமிழ் சிங்கள, முஸ்லிம் இராணுவ வீரர்களின் பயிற்சி நிறைவு நாள் நிகழ்வுகள் நேற்றுப்...
சுன்னாகம் பிரதேசத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில், அப்பகுதி மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மகஜர் அனுப்பியுள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதியின் இந்து விவகாரங்களுக்கு பொறுப்பான ஆலோசகர் ராமச்சந்திர குருக்களுக்கும் (பாபு சர்மா) பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று, யாழிலுள்ள விருந்தினர் விடுதியில் புதன்கிழமை (10) இரவு...
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அண்மையில் அரசாங்கத்துடன் இணைந்துகொண்ட நிலையில், சுகாதார அமைச்சராக இன்று வியாழக்கிழமை பதவியேற்றுக்கொண்டார். கண்டியிலுள்ள ஜனாதிபதி இல்லத்தில் இந்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
போதைப்பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பேரில் ஐவர் விடுதலை செய்யப்பட்டு அவர்களில் மூவர் தொடர்ந்தும் தண்டனை அனுபவித்து வருகின்றனர் எனவே பொதுமன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதியை இச்சபை கோருகின்றது என்ற பிரேரணை சபையில் எடுக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. வடக்கு மாகாண அவையின் 21 ஆவது அமர்வு இன்று நடைபெற்று...
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு நீண்ட காலமாக நாடாளுமன்றத்தில் தக்கவைத்துவந்த 3/2 எனும் பெரும்பான்மை பலத்தை தற்போது இழந்துள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் வரை 160 எனும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி புரிந்த ஜனாதிபது மகிந்த ராஜபக்ச அரசு தற்போது எதிரணியில் இருந்து அரச பக்கம் சென்ற திஸ்ஸ அதநாயக்க மற்றும் ஜெயந்த கோட்டகொட...
மலையக மக்களின் நலன்கள், குறிப்பாக அவர்களின் வீடமைப்புத் திட்டத்துக்கு முன்னுரிமை, அங்குள்ள மக்களுக்கு கல்வி மற்றும் வேலையில் கூடுதல் வாய்ப்புக்கள் போன்றவற்றில் உரிய கவனம் செலுத்தப்படும் எனும் உறுதிமொழி வங்கப்பட்டதாலேயே எதிரணி பக்கம் தாங்கள் சென்றதாகக் கூறினார் மலையக மக்கள் முன்னணியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சிக் காலத்தில் தோட்டஉட்கட்டமைப்பு...
"ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளரான மைத்திரபாலவோ அல்லது தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோ யாராக இருந்தாலும் மக்களின் பிரச்சினைகளை முன்வைத்துப் போட்டியிடவில்லை. தங்களின் வசதிகளை முன்வைத்தே போட்டியிடுகின்றனர்." - இவ்வாறு கடுமையாக சாடினார் இடதுசாரிகள் கூட்டமைப்பின் பொது வேட்பாளரான துமிந்த நாகடுவ. நேற்றுப் புதன்கிழமை யாழ். ஊடக மையத்தில் ஊடகவியலாளர்களை அவர் சந்தித்த சமயமே...
அமைச்சர் ஹெகலிய, நாடாளுமன்ற உறுப்பினரான ஹெந்துன்நெத்தி ஆகியோருக்கு யாழ். நீதிவான் நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணை விடுத்தது. வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் எனக் கூறப்படும் முன்னிலை சோசலிசக் கட்சியின் லலித், குகன் ஆகியோரின் வழக்கிலேயே இவர்களுக்கு இரண்டாவது தடவையாகவும் அழைப்பாணை அனுப்பப்பட்டது. அத்துடன் வழக்கும் அடுத்த வருடம் மார்ச் 25 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது....
இந்திய அரசாங்கத்தின் 145 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் புனரமைப்பு செய்யப்படும் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கின் புனர்நிர்மாணப் பணிகளை யாழ் - இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலேட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி, புதன்கிழமை (10) நேரில் சென்று பார்வையிட்டார். மைதானத்துக்கான சுற்றுமதில் அமைத்தல், 400 மீற்றர் ஓட்டப்பாதை அமைத்தல், நுழைவாயில்கள் புனரமைப்பு, மலசலகூட கட்டிடத்தொகுதி அமைத்தல், குடிநீர் வசதிகள்...
யுத்தத்தை அப்போது தான் நிறுத்தாமல்விட்டிருந்தால், இப்போதுள்ள தமிழ் இளைஞர், யுவதிகள் இல்லாமல் போயிருப்பார்கள் என்று மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். 'திவிநெகும' திணைக்களத்தின் 'செழிப்பான இல்லம்' எனும் செயற்றிட்டத்தின் கீழ், போரதீவுப்பற்று பிரதேச செயலளர் பிரிவிலுள்ள பயனாளிகள் வீடுகளை திருத்துவதற்கான 2,500 ரூபாய் முதற்கட்ட கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு, திக்கோடை கணேச வித்தியாலயத்தில் புதன்கிழமை...
கொழும்பில் இருந்து 300 சீனி மூடைகளுடன் யாழ்ப்பாணத்திற்கு வந்து கொண்டிருந்த லொறியை இடைநடுவே கடத்துவதற்காக சாரதியும்,நடத்துநரும்,சீனி மூடைகளுக்கு பாதுகாப்புக்காக வந்த தமிழ் இளைஞரைக் காட்டுப் பகுதியில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்து புதைத்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்பின்னர் லொறியில் கொண்டு வந்த பொருள்களை அரைவிலைக்கு விற்றுக்காசாக்கியுள்ளனர். 19வயதுடைய மல்லாவி,வவுனிக்குளத்தைச் சேர்ந்த தி.துசாந்தன் என்ற இளைஞனே...
வடக்கு மாகாண முதலமைச்சரின் வசம் இருந்த சில அமைச்சின் கடமைகள், மேலதிக பொறுப்பக்கள் ஏனைய அமைச்சர்கள் மூவரிடம் மிக இரகசியமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. நேற்று புதன்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் அமைச்சுக்களின் பொறுப்புக்களை குறித்த மூன்று அமைச்சர்களும் பொறுப்போற்றுக்கொண்டுள்ளனர். இந்த நிகழ்வுக்கு ஊடகவியலாளர்களும் அனுமதிக்கப்படவில்லை. முதலமைச்சரின் வசம் இருந்து, கூட்டுறவுதுறை, நீர் வழங்கல் -...
தனுஷிற்கு ஏன் இந்த வேலை என நேற்றிலிருந்தே திரைப்பிரபலங்கள் கூறி வருகின்றனர். ஏனெனில் அவர் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த காக்கி சட்டை படம் பொங்கல் வெளியீடு என சமீபத்தில் விளம்பரம் கொடுத்தனர்.பொங்கல் அன்று ஐ, என்னை அறிந்தால், ஆம்பள ஆகிய படங்கள் வருவதால் இந்த படங்களுக்கே எப்படி தியேட்டர் கிடைக்கும் என்று தெரியவில்லை. இந்நிலையில் காக்கி...
ரஜினியின் லிங்கா படம் நாளையதினம் ரிலீசாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வருகிறது. இப்படத்தின் தெலுங்கு பதிப்பு அறிமுக விழா ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று இரவு நடந்தது. நடிகர் ரஜினிகாந்த், லிங்கா பட நாயகிகள் அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா, டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு, உள்ளிட்ட பலர்...
தென்மராட்சிப் பிரதேசத்தில் உள்ள 5 ரயில் நிலையங்கள் இன்று புதன்கிழமை தொடக்கம் இயங்க ஆரம்பித்துள்ளன. இதன்படி உப ரயில் நிலைய அதிபர்களாக நியமனம் செய்யப்பட்ட 5 உப நிலைய அதிபர்களிடம் நேற்று பதில் ரயில் நிலைய அதிபர் (பயணப் பிரிவு) மொகமட் இஸ்மாயில் ஹாரூம் பொறுப்புக்களைக் கையளித்தார். கடந்த எட்டாம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும்...
வடமராட்சி கிழக்கு, கற்கோவளம் கடற்பகுதியில் நச்சுநீர் (ஜெல்லி மீன் போன்ற நச்சு உயிரினம்) தாக்கியதில் மீனவர்கள் மூவர் பாதிக்கப்பட்ட நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (10) அனுமதிக்கப்பட்டனர். கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த 3 மீனவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். கடலில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, இந்த நச்சுநீர் தாக்கியதில் ஒவ்வாமை, சோர்வு மற்றும் சுவாச பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன....
Loading posts...
All posts loaded
No more posts
