- Friday
- April 17th, 2026
ஒரு இலட்சம் குரங்குகளை இலங்கையின் எந்த தரப்பினரிடமும் கோரவில்லை என இலங்கைக்கான சீன தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.இவ்விடயம் தொடர்பிலான தௌிவுபடுத்தலை இலங்கைக்கான சீன தூதரகம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.சீனாவில் உள்ள வன விலங்குகள், தாவரங்களின் இறக்குமதி – ஏற்றுமதியை மேற்பார்வை செய்யும் பிரதான அரசாங்கத் திணைக்களமான சீன தேசிய வனவியல் மற்றும் புல்வெளி நிர்வாகத்திடம் இவ்விடயம் தொடர்பில் தாம்...
வினாத்தாள் மதிப்பீட்டு பணிக்கு செல்ல மறுத்தால் கல்விச் சேவை அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கல்வி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். மாணவர்களின் கல்வியை பணயக் கைதிகளாக ஆக்குவதை ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்....
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை உதயபுரம் பகுதியில் இருந்து 25 ஜெலட் நைட் குச்சிகள் புதன்கிழமை (19) மீட்கப்பட்டுள்ளன. ஊர்காவற்துறை கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கடற்கரைக்கு அண்மையாக இருந்த பற்றைக்காடு ஒன்றினுள் அவை மீட்கப்பட்டுள்ளன. கடற்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரால் அவை மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைக்காக அவை கடற்படை முகாமுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரம் இழுபறி நிலையில் உள்ளதால் விடுமுறையில் உள்ள அரச ஊழியர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கட்சி காரியாலயத்தில் நேற்று(19.04.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “தேர்தல்கள் ஆணைக்குழு, நிதியமைச்சு ஆகிய தரப்பினரது...
யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் நேற்றிரவு(19.04.2023) இடம்பெற்ற வீதி விபத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொடிகாமம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு உதவிப் பொலிஸ் அத்தியட்சகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குருணாகலையைச் சேர்ந்த 54 வயதுடைய ஆர்.எம்.குணரத்ன என்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
கனடா- ரொறன்ரோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்யாவின் சரக்கு விமானமொன்றை உக்ரைனுக்கு வழங்க கனடா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை தொடர்ந்து கனடாவின் வான் பரப்பில் ரஷ்ய விமானங்கள் பறக்க ட்ரூடோ நிர்வாகம் தடை விதித்திருந்தது. இந்நிலையில் 2022 பெப்ரவரி மாதம் முதல் ரொறன்ரோவின்...
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் படகு சேவையை ஆரம்பிப்பதற்கு தேவையான அனுமதிகளை வழங்கியுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்த்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை சுங்கம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகளுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் படகு சேவைக்கு நான்கு நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன என்றும் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்குத் தேவையான அனுமதி...
யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு முன்பாக தனிநபர் ஒருவர் இன்று(புதன்கிழமை) காலை முதல் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு உட்பட்ட பருத்தித்துறை வீதியில் வசிக்கும் குறித்த நபரின் வீட்டிற்கு அருகில் அனுமதி பெறப்படாத கட்டிடம் ஒன்றும் உள்ளதாகவும், அந்த கட்டிடத்தின் கழிவு நீர் தன்னுடைய வீட்டிற்குள் வருவதாகவும், இதனை மாநகர சபையிடம் பல்வேறு தடவைகள்...
தமிழர்களுக்காக அகிம்சை வழியில் போராடி தன்னுயிரினை ஈகம் செய்த அன்னை பூபதி அம்மாவின் இறுதி நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம்(புதன்கிழமை) நல்லூரடியில் உள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் நடைபெற்றது. அவர் உயிரிழந்த நேரமான 8.45 மணி முதல் தியாகத்தாயின் உருவப்படத்திற்கு பொதுமக்கள் மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து இறுதி நினைவேந்தல் நிகழ்வு மாலை...
யாழ்.குடாநாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேர் தனிமைப்படுத்தல் விடுதியில் தங்கவைக்கப்பட்டு ஒட்சிசன் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் ஒருவர் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்கு காய்ச்சலுக்கு சிகிச்சைப்பெறச் சென்ற ஒருவருக்கு கொரோனாத் தொற்றுக்குரிய அறிகுறி காணப்பட்டதையடுத்து அவருக்குச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு தொற்று...
யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் , யாழ்.இந்து ஆரம்ப பாடசாலைக்கு அருகில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றின் மீது இனம் தெரியாத நபர்கள் வெடி குண்டு ஒன்றினை நேற்றிரவு வீசியுள்ளனர். குறித்த வெடி குண்டு வாகன திருத்தகத்தில் நின்ற கார் ஒன்றின் மீது விழுந்து வெடித்துள்ளது. அதனால் காரில் சிறு சேதம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண...
மத்திய மாகாணத்தில் உள்ள அலவத்துகொட பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டமை தொடர்பாக புலனாய்வுத் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அலவத்துகொட பொலிஸ் நிலையத்திற்கு சுமார் 2.45 மணியளவில் அழைப்பு கிடைத்தது என்றும் இதனை அடுத்து விரைவான நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி அறிவுறுத்தியுள்ளார். இந்த அச்சுறுத்தல் தொடர்பான தகவல் கிடைப்பதற்கு...
கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் மகனால் தந்தை அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. நேற்று (18) இரவு இடம் பெற்ற குறித்த சம்பவத்தில் 66 வயதுடைய முதியவர் ஒருவரே அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சூரியனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சின் அதிக தாக்கம்! இலங்கையில் அதிக வெப்பம் குறித்து வெளியான தகவல்
இலங்கையில் தற்போது நிலவும் அதிக வெப்பத்திற்கான காரணம் தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்த வெப்பத்திற்கு சூரியனில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சின் அதிக தாக்கமே முக்கிய காரணம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேவேளை குறைந்தளவான மேகங்கள் மற்றும் காற்றானது இலங்கையில் வெப்பம் அதிகரிப்பதற்கான ஏனைய காரணங்களாகும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர்...
ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் கெர்சன் மற்றும் லுகான்ஸ்க் மாகாணங்களுக்கு ஜனாதிபதி விளாடிமிர் புடின் திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்போது புடினின் உதவியாளர்களில் ஒருவர் அணு ஆயுத சூட்கேஸை சுமந்துவரும் வரும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்நிலையில் அங்கு அமைக்கப்பட்டுள்ள ரஷ்ய இராணுவ தலைமையகத்திற்கு சென்ற புடின், கள நிலவரம் குறித்து படைத் தளபதிகளிடம் கேட்டறிந்ததாக...
ஜனாதிபதி அலுவலகம் மற்றும் அமைச்சுக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள “வசத் சிரிய 2023” தமிழ் சிங்கள புத்தாண்டு போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அனைத்து விண்ணப்பங்களையும் www.pmd.gov.lk இணைய பக்கத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அழகன், அழகிப் போட்டி “வசத் சிரிய புத்தாண்டு அழகன் / அழகி (திறந்த சுற்று) போட்டிகளுக்காக 03 மாதங்களுக்குள் எடுக்கப்பட்ட...
யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சிலையை அகற்றுமாறு கோரி பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று (18) விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, இந்து அமைப்புக்கள் சார்பில் சட்டத்தரணி என். சிறிகாந்தா, இந்து அமைப்புக்கள் சார்பில் அகில இலங்கை இந்து மாமன்றம், நல்லூர் ஆதினம்...
இலங்கையில் இருந்து இந்தியா சென்ற இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த இருவரும் தமிழகத்தில் அடையாளம் காணப்பட்டதாக “தி இந்து” நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது, இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது என்பதுக் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரின் வீட்டு வளாகத்தில் தற்கொலைக்கு முயன்ற குடும்ப பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் பணிபுரியும் பாலகிருஷ்ணன் விஜிதா (வயது 36) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, ஏழாலை பகுதியில் உள்ள முன்னாள் தவிசாளரின் வீட்டுக்கு நேற்றுமுன்தினம் (16) இரவு...
எதிர்வரும் 25ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நில ஆக்கிரமிப்பு, தொல்பொருள் சின்னங்கள், மரபுரிமைகள் அழிப்பு, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராக இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது. நில ஆக்கிரமிப்பு மற்றும் தொல்பொருளை பாதுகாக்கும் பெயரில் இடம்பெறும் பௌத்த மயமாக்கலை கண்டித்து கதவடைப்பு போராட்டத்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது....
Loading posts...
All posts loaded
No more posts
