இலங்கையில் தற்போது நிலவும் அதிக வெப்பத்திற்கான காரணம் தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி இந்த வெப்பத்திற்கு சூரியனில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சின் அதிக தாக்கமே முக்கிய காரணம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை குறைந்தளவான மேகங்கள் மற்றும் காற்றானது இலங்கையில் வெப்பம் அதிகரிப்பதற்கான ஏனைய காரணங்களாகும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் தற்போதைய காலப்பகுதியில், இதுபோன்ற நிகழ்வுகள் வழமையானவையாகும் என்பதுடன் மும்பையில் 11 பேர் உயிரிழந்த விடயத்திற்கும், இலங்கையின் நிலைமைக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
என்றபோதும், அதிக வெப்பம் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு மே மாதம் நடுப்பகுதி வரை இலங்கையில் வெப்பம் தொடரலாம் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் ஆய்வுகளின் படி தெரியவருகிறது.