Ad Widget

திடீரென உக்ரைனுக்கு சென்ற புடின்!

ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் கெர்சன் மற்றும் லுகான்ஸ்க் மாகாணங்களுக்கு ஜனாதிபதி விளாடிமிர் புடின் திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது புடினின் உதவியாளர்களில் ஒருவர் அணு ஆயுத சூட்கேஸை சுமந்துவரும் வரும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அங்கு அமைக்கப்பட்டுள்ள ரஷ்ய இராணுவ தலைமையகத்திற்கு சென்ற புடின், கள நிலவரம் குறித்து படைத் தளபதிகளிடம் கேட்டறிந்ததாக கூறப்படுகின்றது.

அமெரிக்காவின் அணு ஆயுத கால்பந்து என்னும் அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தும் சூட்கேஸைப் போன்று, இந்த சூட்கேஸ் ரஷ்யாவின் அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் விடயமாகும்.

இந்நிலையில் புடின், ரஷ்யாவின் அணு ஆயுதங்கள் தாங்கி செல்லும் திறன்கொண்ட Tu-95MS ரக போர் விமானங்களுடன் திடீர் போர் ஒத்திகையும் நடத்தியுள்ளார்.

இதேவேளை புடினின் வருகைகள் பற்றிய செய்திகளுக்கு பதிலளித்த உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் அலுவலகத்தின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக், ரஷ்ய தலைவர் உக்ரைனின் “ஆக்கிரமிக்கப்பட்ட மற்றும் பாழடைந்த பிரதேசங்களுக்கு கடைசி முறையாக தனது கூட்டாளிகளின் குற்றங்களை அனுபவிக்க” சுற்றுப்பயணம் செய்கிறார் என்று ட்வீட் செய்துள்ளார்.

Related Posts