Ad Widget

ரஷ்ய விமானத்தை உக்ரைனுக்கு வழங்கும் கனடா! கடும் கோபத்தில் புடின்

கனடா- ரொறன்ரோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்யாவின் சரக்கு விமானமொன்றை உக்ரைனுக்கு வழங்க கனடா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை தொடர்ந்து கனடாவின் வான் பரப்பில் ரஷ்ய விமானங்கள் பறக்க ட்ரூடோ நிர்வாகம் தடை விதித்திருந்தது.

இந்நிலையில் 2022 பெப்ரவரி மாதம் முதல் ரொறன்ரோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட தயாரான ரஷ்யாவின் சரக்கு விமானம் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஷ்யாவின் Volga-Dnepr விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான Antonov An-124 என்ற சரக்கு விமானத்தினை தற்போது உக்ரைன் அரசாங்கத்திடம் ஒப்படைக்க கனடா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை உக்ரைன் பிரதமரும் தமது முகப்புத்தக பக்கத்தில் உறுதி செய்துள்ளதுடன்,விமானம் கைமாறப்படும் திகதி வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts