Ad Widget

உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படமாட்டாது – மகிந்த

வடக்கில் தற்போது காணப்படும் உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படமாட்டாது என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மக்கள் பேஸ்புக் போலிப் பரப்புரைக்கு ஏமாந்துவிடக் கூடாது. பேஸ்புக் சமூக வலையத்தளத்தின் ஊடாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டு வருகிறது. வெறுமனே மாற்றம் அவசியம் தேவை என்பதனை விடவும் எதற்காக மாற்றம் தேவை என்பது முக்கியமானது. முன்னாள் லிபிய அதிபர்...

இடி அமீனைப் போல் ஆட்சி நடத்துகின்றார் மஹிந்த! – மைத்திரி

இடி அமீனைப் போல் ஆட்சி நடத்தும் மஹிந்தவின் ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும் என்றும், அதற்கான சிறந்த சந்தர்ப்பம் தற்போது உதயமாகியுள்ளது என்றும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஏறாவூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:- மஹிந்தவின் ஆட்சியை ஒழிக்க வேண்டும்...
Ad Widget

வடக்கில் இன்று மைத்திரியின் பிரசாரக் கூட்டங்கள்! – ரணில், சந்திரிகா, ஹக்கீம், ரிஷாத், மனோ, பொன்சேகாவும் பங்கேற்பு

ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று செவ்வாய்க்கிழமை வடக்குக்கு வருகின்றார். இவருடன் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ...

தமிழர்கள் தேர்தலை பகிஸ்கரிக்கக் கூடாது – ஆனந்தசங்கரி

எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை தமிழ்மக்கள் பகிஸ்கரிக்கக்கூடாது எனவும், அவ்வாறு பகிஸ்தரித்தால் 2004ஆம் ஆண்டு நடந்தவையே மீண்டும் நடைபெற வைப்பதாக அமையும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆனந்தசங்கரி திங்கட்கிழமை (29) அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த...

முப்படையினரும் களத்தில், அவசர இலக்கங்களும் அறிவிப்பு

கடந்த சில நாட்களாக தொடர்ந்த சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் மீட்பு பணிகளில் மூப்படையினரும் ஈடுபட்டு வருவதுடன் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள 409 நிவாரண முகாம்களில் படையினர் தமது உதவிகளை வழங்கி வருவதாக இராணுவ பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மைய பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன்...

நீதியான தேர்தல் நடைபெறும் என எதிர்ப்பார்க்கின்றேன் – மூன்

இலங்கையில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்று நடைபெறுமென தான் எதிர்ப்பார்ப்பதாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். இலங்கையின் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸூடன் கடந்த வாரம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட மூன், இலங்கையின் நல்லிணக்கத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை என்றும் துணையிருக்கும் என்று உறுதியளித்துள்ளார். இதன்போது...

தாக்குதல்தாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் – சந்திரிகா

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமரதுங்கவின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்திய தாக்குதல்தாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவரது சட்டத்தரணிகள், பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளனர். சந்திரிகாவின் வாகனத்தின் மீது கடந்த 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை பேருவளையில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்த மைத்திரி

பொது எதிரணியுடன் இணைந்து நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு ஒன்றுபடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுப்பதாக மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பொறியியலாளர் சிப்லி பாறூக்கின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதான வீதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,...

எதிர்க்கட்சி தேர்தல் பிரச்சார அலுவலகங்கள் மீது தாக்குதல்

இலங்கையில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவின் மூன்று தேர்தல் பிரச்சார அலுவலகங்கள் திங்களன்று அதிகாலை தாக்கப்பட்டுள்ளதாக போலிசார் தெரிவித்துள்ளனர். மஹியங்கனைய, தெனியாய மற்றும் வெலிகம ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் பிரச்சார் காரியாலயங்கள் இவ்வாறு தாக்கப்பட்டுள்ளதாக போலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோகன தெரிவித்தார். அதிகாலை வாகனங்களில் வந்த சிலர் மஹியங்கனையவில் அமைந்துள்ள எதிர்க்கட்சிகளின் பொது...

மீண்டும் தொடங்குகிறது மருதநாயகம், அறிவித்தார் கமல்!

கமல்ஹாசன் தமிழ் சினிமாவிற்கு புதிதுபுதிதாக பல அறிய படைப்புகளை தந்தவர். இவரின் கனவுப்படமான மருதநாயகம் 1997ம் ஆண்டு பூஜை போட்டு தொடங்கப்பட்டது. சில வருடங்கள் படப்பிடிப்பு சென்ற நிலையில் நிதி பற்றாக்குறை காரணமாக அந்த படம் நின்றது. ஆனால், தற்போது இது குறித்த கேள்வி ஒன்றிற்கு சுவையான பதிலை கூறியுள்ளார். இப்படத்தை மீண்டும் எடுக்கவிருப்பதாகவும், லண்டனில்...

பிகே ரீமேக்கில் விஜய்?

விஜய் சில வருடங்களுக்கு முன் அமீர் கான் நடித்த 3 இடியட்ஸ் படத்தை ரீமேக் செய்து நடித்தார். அந்த படம் அவருக்கு மாபெரும் வெற்றியை தந்தது. அந்த வகையில் தற்போது வெளிவந்த பிகே திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்தை சமீபத்தில் விஜய் பார்த்து ரசித்தார். மேலும் பிகே படத்தை தமிழில்...

பக்கச்சார்பாக நடக்க வேண்டாம்; யாழ்.பல்கலை துணைவேந்தருக்கு அறிவித்தல்

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவிக்குமாறு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்திடம் கோரியமை போன்று மீண்டும் செயற்படவேண்டாம் என துணைவேந்தருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் பொ.குகநாதன், திங்கட்கிழமை (29) தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்துத் தெரிவிக்க வேண்டும் என பல்கலைக்கழக பேராசிரியர்கள்...

நடிகர் சல்மான், ஜனாதிபதி மஹிந்தவுடன் பிரசார கூட்டத்தில் இணைந்தார்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பொலிவூட் நடிகர் சல்மான் கான், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். பொரளையில் நடைபெறும் கூட்டத்திலேயே சல்மான் கான் இணைந்துகொண்டுள்ளார். இதேவேளை, இலங்கையுடன் தொடர்பை வைத்திருக்கின்ற பொலிவூட் நடிகையான ஜெகலின் பெர்னாண்டஸூம் அவர்களுடன் இணைந்து கொண்டுள்ளார். பொலிவூட் நடிகர் சல்மான் கானுடன் ஆறுபேர் அடங்கிய குழுவினர் இலங்கையை...

வவுனியாவில் வடக்கு மாகாணசபையின் வெள்ள நிவாரணப் பணிகள்

நாட்டில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும்மழை காரணமாக மேன்மேலும் மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். இவ்வாறு இடம்பெயர்ந்து ஆலயங்களிலும் பாடசாலைகளிலும் பொதுமண்டபங்களிலும் தங்கியிருப்பவர்களுக்கு வடக்கு மாகாணசபையால் மாவட்டம்தோறும் துரிதகதியில் நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வவுனியாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28.12.2014) வடக்குமாகாண விவசாய அமைச்சின் உணவு வழங்கும் துறையும் சுகாதார அமைச்சும் இணைந்து உலர்உணவுப் பொதிகளையும் குழந்தைப்பிள்ளைகள் மற்றும் கர்ப்பிணித்தாய்மார்களுக்கான...

ஏயார் ஏசியா விமானம் கிழக்கு பெலிடங் தீவுப்பகுதி கடலில் விழுந்து நொறுங்கியதாக தகவல்?

இந்தோனேசியாவில் உள்ள சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏயார் ஏசியா (Air Asia) விமானம் கிழக்கு பெலிடங் தீவுப்பகுதியில் கடலில் விழுந்து நொறுங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசிய தேசிய தேடுதல் மற்றும் மீட்பு அமைப்பை (பசார்னஸ்) சேர்ந்தவர்கள், பங்கா பெலிடங் பகுதியிலிருந்து விமானம் விழுந்து கிடக்கும் கிழக்கு பெலிடங் கடற்பகுதிக்கு விரைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பசார்னஸ்...

தாய் சேய் உறவை அதிகரிக்கும் கூகுள் கிளாஸ்

கூகுள் கிளாஸ் இன்றைய நவீன ஸ்மார்ட்ஃபோன்கள் என்னென்ன வசதிகளைத் தருகின்றனவோ, அந்த வசதிகள் அனைத்தையும் ஒரு கண்ணசைவில் தரும். நாம் பார்ப்பது, கேட்பது, படிப்பது அனைத்தையும் பதிவு செய்யக்கூடிய, நினைவின் பாய்ச்சலுக்கு ஈடுகொடுத்து செயல்படக் கூடிய கருவி இது. இதில் இருக்கும் கண்ணாடிப் பகுதி நமது 25 இஞ்ச் கம்ப்யூட்டர் ஸ்கிரீனுக்கு இணையானது, அத்துடன் 16...

யாழ். இந்தியத் தூதரகத்தின் கற்கைகளை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ்கள்

யாழ். இந்திய துணைத்தூதரக கலைக்கூடத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கற்கைநெறிகளை பூர்த்தி செய்து வெளியேறிய 66 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தினர் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்றது. கர்நாடக சங்கீதம், வயலின், ஹிந்திமொழி மற்றும் யோகா கற்கைநெறிகளை பூர்த்திசெய்தவர்களுக்கே சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. யாழ். இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற...

ஜனாதிபதி மீது வழக்கு தாக்கல் செய்யும் அரசியல் யாப்பு திருத்தம் செய்யப்படும் – மைத்திரி

நாட்டின் ஜனாதிபதி மீது வழக்கு தாக்கல் செய்யக்கூடிய அளவிற்கு அரசியல் யாப்புத் திருத்தம் கொண்டுவரவுள்ளதாக ஜனாதிபதித் தேர்தல் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மொனராகலையில் நேற்று (28) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 2010ம் ஆண்டுக்குப் பின் ஜனாதிபதி மோசடியான ஆட்சி ஒன்றை...

இலங்கை அணியை இலகுவாக வென்றது நியூசிலாந்து!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியுள்ளது. கிரிஸ்சேர்ச்சில் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 441 ஓட்டங்களை பெற்றது. பதில் அளித்த இலங்கை 138 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. பின்னர் பொலோன் முறையில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 407 ஓட்டங்களைப்...

சல்மான கான் தலைமையிலான குழு வந்தடைந்தது

பொலிவூட் நடிகர் சல்மான் கான் மற்றும் இலங்கையுடன் தொடர்பை வைத்திருக்கின்ற பொலிவூட் நடிகையான ஜெகலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட ஆறுபேர் அடங்கிய குழுவினர் இலங்கையை வந்தடைந்தனர். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாகவே அக்குழுவினர் இன்று அதிகாலை நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெட் விமான சேவைக்கு சொந்தமான 9W256 என்ற இலக்கத்தைகொண்ட விமானத்திலேயே...
Loading posts...

All posts loaded

No more posts