வடக்கு – கிழக்கு நிர்வாகரீதியாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும் பொது வேலைத்திட்டங்களில் நாம் ஒன்றிணைய வேண்டும்! – அமைச்சர் பொ.ஐங்கரநேசன்

இலங்கைத்தீவில் இணைந்த வடக்கு கிழக்கு தமிழர்களின் ©ர்வீகத் தாய்நிலம். இப்போது வடக்கை நிர்வகிப்பதற்குத் தனியாக வடக்கு மாகாணசபை, கிழக்கை நிர்வகிப்பதற்குத் தனியாக கிழக்கு மாகாணசபை என்று எமது தாய்நிலம் இலங்கை அரசாங்கத்தால் நிர்வாகரீதியாக இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும் பொதுவேலைத்திட்டங்களில் நாம் ஒன்றிணைய வேண்டும் என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண விவசாய அமைச்சு...

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று சொல்ல முடியாது -சுமந்திரன்

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று சொல்லமுடியாது என சுவிஸ் அமைதி அமைப்பினால் 18.9.2015 இல் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார் திரு.சுமந்திரன், திரு.சுரேன், சிங்கள வழக்கறிஞர் திரு.நிரன் மற்றும் தமிழ் அமைப்பினர், சுவிஸ் அரசாங்கத்தினர்,மே17 இயக்கம் , மனித உரிமை அமைப்பினர் சிங்கள சிவில் சமூகம் எனப்பலர் கலந்து கொண்ட உள்ளரங்க...
Ad Widget

தீர்மானம் குறித்து அமெரிக்கா, இந்தியாவுடன் கூட்டமைப்பு பேச வேண்டும்! – சுரேஸ்

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணையகத்தில் கொண்டு வரப்படவுள்ள பிரேரணையின் முதலாம் வரைபு இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டிருக்கும் நிலையில், பிரேரணையில் திருத்தங்கள் செய்யப்படாமலிருக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு அமெரிக்கா மற்றும் இந்தியாவுடன் பேசவேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அடுத்துவரும் நாட்களில் இலங்கை தொடர்பான பிரேரணை...

சர்வதேச பங்களிப்புடன் உள்நாட்டு விசாரணை! – நிஷா பிஸ்வால்

இலங்கையின் புதிய அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பதிலளிக்கும் வலுவான நோக்கத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ள, மத்திய மற்றும் தெற்காசியாவுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் பதிலளிக்க சர்வதேச சமூகத்தின் குறிப்பிடத்தக்க பங்களிப்புடன் கூடிய நம்பிக்கையான உள்நாட்டு விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையின் புதிய அரசாங்கத்திடம் மிகவும்...

இலங்கையின் நீதிக்கான தேடல்: மக்ரேயின் ஆவணப்படத்தால் கண்ணீர்க்குளமானது ஐ.நா. சபை!

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆவணப்படம் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 30ஆவது கூட்டத் தொடர் நடைபெறும் கட்டடத்தில் இந்த ஆவணப்படம் நேற்றுக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் நீதிக்கான தேடல் என்ற சனல் 4இன் கெலும் மக்ரேயின் ஆவணப்படமே...

இரகசியத் தடுப்பு முகாம்கள் குறித்து ஜெனிவாவில் ஆராய்வு! – எக்னெலிகொடவின் மனைவியும் பங்கேற்பு

இலங்கையில் இரகசியத் தடுப்பு முகாம்கள் உள்ளன என்றும், அவை தொடர்பான இரகசியங்கள் மறைத்துவைக்கப்பட்டுள்ளன என்றும் ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு சார்பாக இடம்பெற்ற சிறிய கூட்டங்களின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற கடத்தப்பட்டு காணாமல்போனோர் விவகாரம் தொடர்பாக Forum Asia, Franisans Intenational ஆகிய அமைப்புகள் நடத்திய சிறிய கூட்டங்களின்போது இரகசியத் தடுப்பு முகாம்கள் குறித்து...

போர்க் குற்ற விசாரணை: உள்ளூர் பொறிமுறைக்காக புதிய சட்டங்களை உருவாக்கத் தீர்மானம்!

"போர்க் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல் தொடர்பில் விசாரணை நடத்துவதாக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு இலங்கை உறுதியளித்தது. இதற்கான உள்ளூர் பொறிமுறையை உருவாக்க புதிய அரசியல் சட்டங்கள் அவசியம். இதனால் அச்சட்டங்களை உருவாக்குவது தொடர்பில் சகல தரப்புக்களுடனும் அரசாங்கம் பேச்சுக்களை நடத்துகிறது" - இவ்வாறு நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்தார். கொழும்பில் இருந்து...

இலங்கையில் சிறார் மீதான துஷ்பிரயோகம் அதிகரிப்பது குறித்துக் கவலை

இலங்கையில் சிறார் மீதான துஷ்பிரயோகம் அதிகரித்துவருவது குறித்து நாட்டின் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கவலையும் கண்டனமும் வெளியிட்டுள்ளது. இந்த வருடம் செப்டம்பர் வரையிலான காலப் பகுதிக்குள் சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பாக 6500க்கும் அதிகமான புகார்கள் கிடைத்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் நடாஷா பாலேந்திரா பிபிசி தழிழோசையிடம் தெரிவித்தார். கடந்த ஆண்டு...

துருக்கியில் மேலும் ஒரு குழந்தையின் உடல் கரை ஒதுங்கியது

சிரியாவை சேர்ந்த நான்கு வயது சிறுமியின் உடல் ஒன்று ஏஜியன் கடற்கரை ஓரமாக கரை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக துருக்கியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அகதிகளை ஏற்றிக்கொண்டு, கிரேக்கத் தீவு ஒன்றை நோக்கிச் சென்ற படகு ஒன்று கடலில் மூழ்கியிருப்பதாக துருக்கிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது. பல குழந்தைகள் உட்பட 14 சிரிய நாட்டவர் காப்பாற்றப்பட்டுள்னர். இரண்டு வாரங்களுக்கு...

அமைச்சரவைக்கு இணையான மாவட்ட அமைச்சர் பதவி! பெயர் விபரங்கள் வெளியீடு

புதிய தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவைக்கு மேலதிகமாக நியமிக்கப்படும் மாவட்ட அமைச்சர் தொடர்பில் பெயர் விபரங்கள் நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் ஊடாக கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கமைய ஐக்கிய தேசிய கட்சிக்கு 11 மாவட்ட அமைச்சு பதவிகளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 08 பதவிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மூன்று பதவிகளும் கிடைக்கவுள்ளன. பதவிகளை பெற்றுகொள்ளும் மாவட்ட அமைச்சர்களின் பெயர் விபரங்கள்,...

சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் காலி முகத்திடலில்

சர்வதேச கரையோரப் பாதுகாப்பு தினம் இன்று நினைவுகூரப்படுவதை முன்னிட்டு, இலங்கையிலும் கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலி முகத்திடலில் ஆரம்பமாகியுள்ளது. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 55,000 இற்கும் அதிகமான தொண்டர் படையணி இந்த வேலைத்திட்டத்தில் இணைந்துகொண்டுள்ளது. கரையோரம்...

அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள தீர்மானம் வெளியாகியது!34 வது அமர்வு வரை காலக்கெடு!

ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளரினால் வெளியிடப்பட்ட அலங்கை போர்க்குற்ற விசாரணையறிக்கையினை தொடர்ந்து  அமெரிக்காவினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட உள்ள தீர்மானத்தின் உத்தேச நகல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மனித உரிமைகள் தொடர்பிலான சர்வதே பிரகடனங்களுக்கு மதிப்பளிக்க வேண்டுமென வலியுறுத்திப்பட்டுள்ளது.இலங்கையின் சுதந்திரம், இறைமை, பௌதீக ஒருமைப்பாடு, ஐக்கியதன்மை...

சர்வதேச விசாரணையை வலியுறுத்த அனைவரும் அணிதிரளுங்கள் – சத்தியராஜ் அழைப்பு

செம்டம்பர் 21ம் திகதி ஜெனீவாவில் முருகதாசன் திடலில் ஒரு மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது. அப்பேரணியில் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு உங்களில் ஒருவனாக வேண்டிக்கொள்கிறேன். தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை சர்வதேசத்திற்கு உட்படுத்தி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தும் பேரணி. இப்பொழுது அமொிக்கா பின்வாக்கியுள்ளது. இது விரும்பத்தகாதவொன்று. இது வருந்தத்தக்கவொன்று. எனினும் ஐ.நா தலையிட்டு இந்த விசாரணையை...

சுபாஷ் சந்திர போஸ் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட்டது மேற்கு வங்கம்

சுபாஷ் சந்திரபோஸ் குறித்த 64 ரகசிய ஆவணங்களை மேற்குவங்க அரசு வெளியிட்டிருக்கிறது. இதுவரை கொல்கத்தா காவல்துறை வசமிருந்த இந்த ஆவணங்கள் விரைவில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். இருந்தபோதும், அந்த ஆவணங்களில் என்ன இருக்கின்றன என்பது இதுவரை தெளிவாகவில்லை. இந்தியாவிலிருந்து பிரிட்டிஷாரை வெளியேற்றி தனியாக ராணுவமொன்றை நிறுவிய சுபாஷ் சந்திரபோஸை நேச நாட்டுப் படைகள் தேடிவந்தன. அவரது...

“புலிகளை வென்றதற்காக வருந்துகிறேன்” – கோட்டாபய

இலங்கையின் முன்னாள் பாதுகாப்புத்துறை செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, விடுதலைப் புலிகளுக்கெதிரான போரை வென்றது குறித்து தான் வருந்துவதாகத் தெரிவித்திருக்கிறார். அந்தப் போரில் வென்றதால்தான் தன் மீது இப்போது போர்க்குற்றங்கள் சுமத்தப்படுவதாக அவர் கூறியிருக்கிறார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரான கோட்டாபய ராஜபக்ஷ ஐநா மனித உரிமைக் கவுன்சில் இலங்கைப் போரில் இழைக்கப்பட்ட மனித உரிமை...

தேவையற்ற விவாதங்களை தவிர்த்து விரைவில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் – சி.தவராசா

மது மக்களுக்கு நீதி கிடைக்கச் செய்யவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகள் கிடைக்கச் செய்வதற்கு ஏற்றவகையில் சம்பந்தப்பட்டவர்கள் துரிதகதியில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலும் அவரது காரியாலயத்தினால் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்....

இலங்கைக்கு வெளியிலேயே கலப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும்! – சுரேஷ் பிரே­மச்­சந்­திரன்

இலங்­கையில் இடம்­பெற்­றுள்ள குற்­றங்கள் தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்கு ஐ.நா. அறிக்­கையில் கூறப்­பட்­டுள்ள கலப்பு விசேட நீதி­மன்றம் நாட்­டுக்கு வெளியி­லேயே அமைய வேண்­டு­மென்றும், இதில் சர்­வ­தேச தரப்­பி­னரே அதி­க­ளவில் பங்கேற்கவேண்­டு­மெ­னவும் வலி­யு­றுத்­தி­யுள்ளார் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன். இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரி­மைகள் பேரவை ஆணை­யாளர் வெளியிட்­டுள்ள அறிக்கை குறித்து...

சர்வதேச நீதிபதிகள் மூலமே போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும்! – கலம் மக்ரே

எத்தகைய விசாரணைகளை விரும்புகின்றீர்கள் என குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் கேட்பது நியாயமில்லை என்று தெரிவித்துள்ளார் சனல் 4 ஊடகவியலாளர் கலம் மக்ரே. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கை குறித்து கருத்து வெளியிட்டுளள்ள அவர்- ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கையை வரவேற்கிறேன். ஏற்கனவே கூறப்பட்ட விடயங்கள் உறுதியாகியுள்ளன....

26 அலைபேசிகள் பறிமுதல்! : நீதிமன்றத்துக்குள் அலைபேசிகளுடன் நுழைய தடை

பருத்தித்துறை நீதிமன்ற நடவடிக்கைக்கு வந்திருந்தவர்கள் வைத்திருந்த 26 அலைபேசிகளை பறிமுதல் செய்ய உத்தரவிட்ட நீதவான் மா.கணேசராசா, நீதிமன்றத்துக்குள் அலைபேசிகளை கொண்டு வரவேண்டாம் என எச்சரிக்கை செய்த பின்னர் அவற்றை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்ற பொலிஸாருக்கு உத்தரவிட்ட சம்பவம் பருத்தித்துறை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (18) இடம்பெற்றது. நீதிமன்ற நடவடிக்கைகள் நடந்துகொண்டிருந்த போது, நீதிமன்றத்துக்கு வருகை தந்த...

வலி. வடக்கு, கிழக்கு பகுதியில்; மீளக்குடியமர்ந்த மக்களுக்கு உலர் உணவு

வலிகாமம் வடக்கு, வலி, கிழக்கு பகுதியில் அண்மையில் மீளக்குடியமர்ந்த மக்களுக்கு உலர் உணவு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட செயலர் நாகலிங்கம் வேதநாயகன், வெள்ளிக்கிழமை (18) தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வலி, வடக்கு, வலி, கிழக்கு பகுதியில் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட பிரதேசத்தில் நிரந்தரமாக குடியேறியவர்களுக்கு உலர் உணவு வழங்குவதற்கு...
Loading posts...

All posts loaded

No more posts