- Friday
- April 10th, 2026
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் ஆட்டோ சாரதி ஒருவர் மீது தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி அச்சுறுத்தல் விடுத்ததுடன் தாக்குதலும் நடத்தியுள்ளனர்.குறித்த சம்பவம் பலாலி வீதியில், திருநெல்வேலி நொதேன் வைத்தியசாலை அருகில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. தாக்குதல் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்றபோதும் பொலிஸாரும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில்...
புட்டு புரைக்கேறியதால் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் வீட்டில் புட்டு உண்டுகொண்டிருந்தவேளை திடீரென அவருக்கு புரைக்கேறியுள்ளதாகவும், இதனையடுத்து தனக்கு நெஞ்சு அடைப்பதாக அவர் தெரிவித்தவாறே மயங்கிவிழுந்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு...
2023 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (16) இரவு வௌியாகி இருந்தன. www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு பரீட்சைக்கு 332,949 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர், அவர்களில் 50,664 பேர் வெட்டுப்புள்ளிகளில் சித்தியடைந்துள்ளனர். அத்துடன் புலமைப்பரிசில் பரீட்சையின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும்...
யாழ். நகரத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய நான்கு உணவகங்கள் பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் சீல் வைக்கப்பட்டுள்ளன. யாழ் மாநகர சபையின் வண்ணார்பண்ணை பகுதி பொது சுகாதார பரிசோதகர் தி. கிருபன் தலைமையிலான குழுவினரால் கே.கே.எஸ் வீதி, மற்றும் இராமநாதன் வீதியில் உள்ள உணவகங்கள், பேக்கரி என்பன திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. ஏற்கனவே பல தடவைகள்...
லியோனிட் விண்கல் மழையின் உச்சத்தை இலங்கையர்களும் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையர்கள் நாளை (18.11.2023) மற்றும் நாளை மறுதினம் இதனை காண முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் பிரிவின் வானியலாளர் ஜானக அதாசூரிய தெரிவித்துள்ளார். அதற்கமைய, இந்த இரண்டு நாட்களிலும் அதிகாலை 2.00 மணிக்குப் பிறகு, கிழக்கு அடிவானத்தில் இந்த விண்கல் மழை தென்பட...
வடமாகாணத்தில் ஊழியர் சேமலாப நிதியம் பெறும் பெறுவோரது பிள்ளைகள் கடந்த 2022 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றி உயர்கல்வியை தொடரமுடியாது இருப்பின் அவர்கள் தேசிய தொழில் தகைமை சான்றிதழ் கற்கை நெறியை தொடர ரூபாய் 25,000 வழங்கப்படும் என” வடமாகாண பிரதம செயலர் சமன்பந்துலசேன தெரிவித்துள்ளார். இன்று காலை சாவகச்சேரி நகரசபை மண்டபத்தில்,...
முல்லைத்தீவு நெட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டியன்குளம் பகுதியல் தனியார் வகுப்பு நடத்தி வரும் ஆசிரியரொருவர் ஆண்மாணவர்களுடன் நீண்டகாலமாக ஓரின பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் பாண்டியன்குளம் பிரதேசத்தில் கணிதபாடத்தில் சிறப்புதேர்ச்சி பெற்ற ஆசிரியர் மாணவர்கள் மத்தியில் கணிதபாடம் கற்பிப்பதில் சிறப்பான பெயர் பெற்றுள்ளார். இந்த நிலையில்...
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வட மாகாணத்தில் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் பிற்பகல்...
நாட்டில் உள்ள 22 மில்லியன் மக்களுக்கும் இழப்பீடு வழங்குவதற்கு தேவையான பணம் ராஜபக்ச குடும்பத்தினரிடம் இருப்பதாக தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் உரிய...
தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ஆம் திகதி தமிழ்மக்களால் அனுஸ்டிக்கப்படவுள்ளது. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தமது உறவுகளை நினைந்து வருடம் தோறும் கார்த்திகை 27 மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் அனுஸ்டிக்கப்படுவது வழமை, அந்த...
சிறுவர்களின் திறன் மேம்பாடு, பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தல் போன்ற செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் முன்வர வேண்டும் என வடமாகாண ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதிய பிரதிநிதிகளுக்கும், வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸுக்கும் இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மாணவர்களின் கற்றல்...
சீரற்ற காலநிலை காரனமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 15 குடும்பங்களை சேர்ந்த 47 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அத்தோடு சீரற்ற காலநிலையால் 8 வீடுகள் பகுதியளவில் சேதமாக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் சொகுசு பேரூந்துகளில் பயணம் செய்பவர்களை இலக்கு வைத்து கொள்ளைக் கும்பலொன்று தமது கைவரிசைகளைக் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகளை விழிப்பாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மூளைக் காய்ச்சல் காரணமாக நேற்று செவ்வாய்க்கிழமை (14) யாழ்ப்பாணத்தில் கிராம சேவகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் உடுப்பிட்டி வடக்கு ஜே/353 கிராம சேவகர் பிரிவில் கடமையாற்றி வந்தவர். குமாரசாமி வீதி, புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த குமாரன் குகதாசன் (வயது 48) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,...
வரவு செலவு திட்ட முன்வைப்பில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு எதிர்வரும் வருடம் ஏப்ரல் மாதம்(2024.04) முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் தொடக்கம் இந்த 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் 2024...
தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகள் இவ்வாறு வெளியிடப்பட உள்ளது. குறித்த தகவலை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறு பட்டியலிடும் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இம்முறை தரம் ஐந்து புலமை...
யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டிகள் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 8ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளன. “யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி 2023” என்ற தலைப்பில், யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனத்தினால் நடத்தப்படும் இப்போட்டித் தொடரில் 800க்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையின் சகல...
யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பாக முகநூலில் பதிவிட்ட பல்கலைக்கழக ஊழியர் ஒருவருக்கு எதிராக பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவந்தவரும், தற்பொழுது கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் கடமையாற்றிவரும் நபருக்கு எதிராகவே இணைய வழி ஊடாக பொலிஸ் மா அதிபருக்கும்( Tell To IGP), யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலும்...
வடக்கு மற்றும் கிழக்கில் காணாமற் போனவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதற்காக மேலும்1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்தபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது யாழ்ப்பாணம் பூநகரி நகர் அபிவிருத்திக்கு 500 மில்லியன் ரூபாய்...
Loading posts...
All posts loaded
No more posts
