- Friday
- April 10th, 2026
கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சட்டக்கல்வி மும்மொழிகளிலும் கல்வி கற்கும் வாய்ப்பு வழங்கப்படுகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் சட்டத்துறையில் ஆங்கிலமொழி மூலத்தில் மட்டும் கற்கை நடத்தப்பட்டு வருகின்றது, ஏன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மூலத்தில் சட்டக்கற்கையை உட்புகுத்த முடியாதென யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளரும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உறுப்பினருமான மா.இளம்பிறையன் கேள்வி எழுப்பினார். இது தொடர்பில் அவர் மேலும்...
கிளிநொச்சி மாவட்டத்தில் A9 வீதியில் உள்ள ஆபத்தான 46 மரங்கள் முழுமையாக அகற்றும் பணி இன்று ஆம்பமானது. குறித்த வீதியில் ஆபத்தானதாக 57 மரங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அதில் 46 மரங்களை முழுமையாக அகற்றவும், 11 மரங்களின் ஆபத்தான கிளைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தினால் முன்னெடுக்கப்படும் குறித்த நடவடிக்கைக்கு போக்குவரத்து...
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஒரு சிலரால் விரும்பத்தகாத செயற்பாடு தொடர்பில் மூன்று உயர் அதிகாரிகள் அடங்கிய விசாரணை குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள ஜெனரத் தெரிவித்தார். வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகந்தர்கள் சிலரால் சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் கைது...
மாவீரர் வாரம் இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதல் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. அதன்படி இன்று யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவு தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மாவீரர் வாரத்தை முன்னிட்டு, பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதி மாணவர்களால் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது. இதேவேளை...
வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞனை கடந்த 08ஆம் திகதி திருட்டுச் சம்பவம் ஒன்றின் விசாரணைக்காக வட்டுக்கோட்டை பொலிஸார் அழைத்துள்ளனர். இந்நிலையில் தனது நண்பனுடன் குறித்த இளைஞன் பொலிஸ் நிலையம் சென்றிருந்த நிலையில் இருவரையும்...
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட எழுவைதீவு பிரதேச வைத்தியசாலைக்கு வைத்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். ஒழுங்காக வருகை தருவதில்லை என பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது, சுமார் 700 பேர் வசிக்கும் அடிப்படை வசதிகள் அற்ற குடும்பங்கள் வாழ்ந்து வரும் தீவுப் பிரதேசமாக எழுவைதீவு விளங்குகிறது. குறித்த பிரதேசத்தில் வெளிநாட்டில் வசிக்கும்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா இன்னும் உயிருடன் இருப்பதாக கூறப்படுகின்றது. அவர் இன்னும் உயிருடன் இருப்பதைக் குறிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவில் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்று நவம்பர் 27 ஆம் திகதி வெளிவரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு, காணொளி தயாரிப்பு தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை...
”வீதிக்குக் குறுக்காகவும், வீதிக்கு அடியிலும் கூட மனித எச்சங்கள் இருக்க கூடும்” என ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம் .ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நேற்றைய தினம் இடம்பெற்ற கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகளைப் பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”கொக்கு...
சட்டவிரோதமாக பொலிஸாரால் வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. காட்டுமிராண்டித்தனமான கொலை ஒன்று அரங்கேறியிருப்பதை என்னால் உணர முடிகிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் நிலவரங்களை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உயிரிழந்த இளைஞனையும் அவரது...
மனித உரிமைகளை மதிக்காது மிருகத்தனமாக செயற்பட்ட யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையப் பொலிஸார் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்-பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் கண்டனம் வெளியிட்டுள்ளார். வட்டுக்கோட்டைப் பொலிஸாரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில் அது தொடர்பாக வெளியிட்ட கண்டன அறிக்கையிலேயே அவர் மேற்படி...
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வழக்கம்பரை பகுதியில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் என்ற 23 வயது இளைஞன் உயிரிழந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனவும், சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பொலிஸாரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் சிரேஸ்ட சட்டத்தரணியும் யாழ்ப்பாண மாநகர...
தெல்லிப்பளை மற்றும் அச்சுவேலி பொலிஸாரால் மாவீரர் நாள் நினைவேந்தலுக்குத் தடை கோரிய விண்ணப்பம் மல்லாகம் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மாவீரர் நினைவேந்தலை தடை செய்யக் கோரி கடந்த வெள்ளியன்று மல்லாகம் நீதிமன்றத்தில் மானிப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று (21) வழங்கப்படவுள்ளது. மேலும் நினைவேந்தலுக்குத் தடை கோரிய வல்வெட்டித்துறை பொலிஸாரின் கோரிக்கை கடந்த...
அலெக்ஸ் என்ற 26 வயதான நபர் 8ஆம் திகதி கைது செய்யப்பட்டு 10ஆம் திகதி மல்லாகம் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இதன்போது கடுமையாக தாக்கப்பட்ட அவர் நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என சட்ட மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை மதியம் யாழ் போதன வைத்தியசாலையில், சட்டவைத்திய அதிகாரி உ. மயூரதனால் உடற்கூறு...
அண்மையில் பிலிப்பைன்ஸ் இல் நடைபெற்ற நேஷனல் மாஸ்டர்ஸ் என்ட் சீனியர் அத்லடிக்ஸ் (National Masters & Seniors Athletics) போட்டியில் முல்லைதீவை சேர்ந்த வீராங்கனை இரண்டு தங்கப்படக்கங்களை தனதாக்கியுள்ளார். இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முல்லைத்தீவு - முள்ளியவளை, சேர்ந்த அகிலத்திருநாயகி (75 வயது) (ஓய்வு பெற்ற சிறைச்சாலைகள் உத்தியோகத்தர்) என்ற வீராங்கனையே இந்த சாதனையை படைத்துள்ளார்....
இலங்கையின் முதலாவது திருமணமாகாத அழகு ராணியாக காரைதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் காரைதீவைச் சேர்ந்த நிவேதிகா இராசையா என்ற பெண்ணே மிஸ் யுனிவர்ஸ் தமிழ் 2023 பட்டம் வென்றுள்ளார். இலங்கையில் முதன்முதலாக கனேடிய அமைப்பொன்று இந்த போட்டியை மூன்று மாதங்களாக நடத்தியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற இந்த தெரிவில் முதல் சுற்றில் 120...
தங்க நகை அணியாததால் பெண்ணொருவரை கொள்ளையர்கள் தாக்கிவிட்டுச் செற்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுழிபுரம் பகுதியிலேயே நேற்று(19) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று ”தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயம் ஒன்றில் வழிபாட்டை முடித்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த குறித்த பெண்ணை கொள்ளையர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இந்நிலையில் வீதியில் யாரும் அற்றவேளை குறித்த பெண்ணை...
மாவீரர் நாள் நிகழ்வுகளில் விடுதலைப்புலிகளின் சின்னங்கள், அவர்களின் அடையாளர்கள் எவற்றையும் பயன்படுத்தக் கூடாது என கிளிநொச்சி பொலிஸார் அறிவுறுத்தியதாக தமிழ்த்தேசிய இளைஞர் பேரவையின் தலைவர் வ. நகுலன் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (19) கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு தானும் தமிழ்த்தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளரமான ச. கீதனும் அழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது எனத் தெரிவித்த அவர்,...
யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை சந்தியில் இருந்து 100 மீற்றர்கள் தூரத்தில் உள்ள புதர் ஒன்றினுள் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரது சடலம் நேற்றையதினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்றுமுன்தினம் (18.11.2023) மீட்க்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் ஆனைக்கோட்டை - ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி சேகரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கடந்த 14ஆம் திகதி...
மாவீரர் வாரம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஞாயிற்றுக்கிழமை (19) கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக துப்பரவாக்கல் பணிகள் முன்னெடுக்கப்பட்டது. இந்த சிரமதான பணிகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து மேற்கொண்டனர்.
திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த விளக்கமறியல் கைதி உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க யாழ்ப்பாணம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் பொலிஸ் அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. தமது மகன் சந்தேகத்தின் பேரில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு 4 நாள்களுக்கு மேல் தடுத்துவைத்து விசாரணை செய்த பின்னரே...
Loading posts...
All posts loaded
No more posts
