Ad Widget

அஞ்சலிக்கத் தடை ;இலங்கையின் புதிய சட்டமா?-டெனிஸ்வரன் கேள்வி

கடந்த கால இறுதி போரின் போது மக்களின் இருப்புக்கள் மீது கொத்துக் கொத்தாக வீசப்பட்ட குண்டு மழையினால் கொல்லப்பட்ட எமது மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு எமக்கென்ன தடை என வட மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் இன்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,   2009ம் ஆண்டு இறுதி போரின்...

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோருக்கு பிதிர்க்கடன் நிறைவேற்ற ஏற்பாடு

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் பிதிர்கடன்களை நிறைவேற்றலையும் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தில் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சபை வேட்பாளர் தி.துவாரகேஸ்வரன் தெரிவித்தார். (more…)
Ad Widget

வடமாகாண சபையின் அடுத்த அமர்வில் கூட அஞ்சலி செலுத்துவோம் -சிவாஜி

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகமே என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று வெள்ளிக்கிழமை (16) தெரிவித்தர். (more…)

முள்ளிவாய்க்கால் நினைவுதின துண்டுப்பிரசுரம் வைத்திருந்தவர் கைது

முள்ளிவாய்க்கால் நினைவுதின துண்டுப்பிரசுரம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சுன்னாகம் வீதி, நிலாவரைப் பகுதியினைச் சேர்ந்த நபர் ஒருவர் இராணுவத்தினரால் நேற்று வியாழக்கிழமை (15) நள்ளிரவு அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டு அச்சுவேலிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். (more…)

வடமாகாண சபையில் பதற்றம்

வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை, வட மாகாணசபைக்குள் செல்ல பொலிஸார் அனுமதிக்காததை அடுத்து அப்பகுதியில் தற்போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. (more…)

போரில் உயிர் நீத்த உறவுகளுக்காக அஞ்சலி செலுத்த வேண்டுகிறார் மாவை

"போரில் உயிர் நீத்தோரின் நினைவு நாளில் அஞ்சலியும் ஈமக் கடனும் செலுத்துவோம். அது எமது ஆன்ம உரித்து." - இப்படிக் கூறியிருக்கின்றார் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா. (more…)

மே 18ஐ நினைவு நினைவுகூர்ந்தால் கைது

மே 18 நினைவு தினத்தினை பொது இடத்தில் நினைவு கூர்ந்தால் கைது செய்வோம் என யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன இன்று வெள்ளிக்கிழமை (16) தெரிவித்தார். (more…)

வடமாகாண சபையில் நினைவேந்தல்! அனைவரையும் அணி திரளுமாறும் அழைப்பு

பாதுகாப்புத் தரப்பினரால் விதிக்கப்பட்டுள்ள பல்வேறு தடைகளையும் மீறி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தில் நடைபெறவுள்ளன. (more…)

புத்தரின் போதனைகளின்படி அரசாங்கம் ஆட்சி புரிகிறதா? – கஜதீபன்

ஒரு வீட்டுக்குள் வடக்கு அறையில் அழுகுரல்கள் கேட்கின்றன., தெற்குஅறையில் வெற்றிக்கோஷங்கள் கேட்கின்றன (more…)

உறவுகளை இழந்து கண்ணீர் சிந்தும் எங்களுக்கு நினைவு தினம் அனுஸ்டிக்க உரிமையுண்டு -சி.வி.கே

உறவுகளை இழந்து கண்ணீர் சிந்தும் எங்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை அனுஸ்டிக்க உரிமையுண்டு என வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். (more…)

யுத்த வெற்றிவிழாவில் பங்கேற்க கூட்டமைப்புக்கு அழைப்பு

அரசின் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. (more…)

சட்டங்களை மீறாத வகையில் எம்மவர்களை நினைவேந்துவோம் – பல்கலை.ஆசிரியர் சங்கம்

வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரில் கொல்லப்பட்ட எமது உறவுகளின் ஆத்ம சாந்திக்காக எதிர்வரும் 18 ஆம் திகதி அனைவரும் தத்தமது இடங்களிலும், பொது இடங்களிலும் பிரார்த்தனையில் ஈடுபடுங்கள். (more…)

போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர தடை விதிப்பதை கண்டிக்கிறது கூட்டமைப்பு

இலங்கையில் விடுதலைப் புலிகளை நினைவுகூரும் வகையில் எந்தவொரு நிகழ்வையும் நடத்தக்கூடாது என இராணுவம் கூறியுள்ளதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டித்துள்ளது. (more…)

யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த அமைதிப் போராட்டம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. (more…)

மக்களை நினைவுகூர அனுமதி, புலிகளை அஞ்சலிக்கத் தடை

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கோ, ஆலயங்களில் வழிபாடுகள் நடத்துவதற்கோ எந்தத் தடையுமில்லை என்று தெரிவித்துள்ள இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய (more…)

கூட்டமைப்பினரை கைது செய்யவும் – தே.சு.மு

தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் சார்பில் நினைவுகூரல் வைபவங்களை ஏற்பாடு செய்வது, நாட்டின் சட்டத்தை கடுமையாக மீறும் செயல் என்பதனால், நினைவுகூரல் வைபவத்தை ஏற்பாடு செய்துள்ள (more…)

மே 18 ஐ துக்க தினமாக அனுஷ்டிக்கவும் – டெனீஸ்வரன்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் படுகொலை தினத்தினை துக்கதினமாக அனுஷ்டிக்குமாறு தமிழ் மக்களிடம் வடமாகாண போக்குவரத்து, வாணிப மற்றும் மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். (more…)

பல்கலையில் கபட நாடகம் வேண்டாம் – எஸ்.விஜயகாந்

ஆளும் தரப்பினர் சிலரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இன்றைய யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் இவ்வாறு செயற்படுவதை உடனடியாக நிறுத்தி கபட நாடகத்தை மாணவர்களிடையே அரங்கேற்றாமல் அவர்களின் கல்வி சுதந்திரத்திலும், (more…)

யாழ்.பல்கலையில் மௌன எதிர்ப்பு போராட்டம்

யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மௌன எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

யாழ். பல்கலைக்கழகம் மூடப்பட்டமைக்கு ஈ.பி.டி.பி கண்டனம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் எதிர்வரும் 16 ஆம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரையிலும் மூடப்படுவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள நிலையில் அதனைக் கண்டிப்பதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (more…)
Loading posts...

All posts loaded

No more posts