Ad Widget

மே 18 இல் உறவுகளை நினைவுகூருங்கள்! – தமிழர்களின் கடமைக்கு தடை ஏதுமில்லை!!

"வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டில் எந்தப் பகுதியிலும் தமிழர்கள் போரின்போது இறந்த தமது உறவுகளை நினைவுகூரலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை. எனவே, எதிர்வரும் 18 ஆம் திகதி தமது உறவுகளை தமிழ் மக்கள் நினைவுகூரலாம். அது அவர்களது உரிமையாகும், கடமையாகும்." - இவ்வாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர...

இறந்த தமிழர்களே நினைவுகூரப்படுகின்றனர்: இராணுவ வீரர்களும் நினைவுகூரப்படுவர்!

யுத்தத்தில் உயிரிழந்த மக்களே வடக்கில் நினைவுகூரப்படுவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். எனினும் ஊடகங்களில் செய்தி வெளியிடும்போது அவை திரிபுபடுத்தப்பட்டே வெளியிடப்படுவதாக அவர் குறிப்பிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களுடன் இணைந்திருப்பதால் பிரிவினைவாதத்திற்கு இடமளிக்காது என்ற நம்புவதாக அமைச்சர் தெரிவித்தார். எதிர்வரும் 19ம் திகதி இராணுவ வீரர்கள் நினைவுகூரப்படுவர் என அமைச்சர் குறிப்பிட்டார்....
Ad Widget

போர் வெற்றி தின பெயர் மாற்றம் வரவேற்கத்தக்கது – இரா சம்பந்தன்

இலங்கை அரசு விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த மே 18ஆம் தேதியை, யுத்த வெற்றி தினமாகக் கொண்டாடி வந்ததை நிறுத்தி, புதிய அரசு, அதை நாட்டைப் பிரிவினைவாதத்திலிருந்து காத்த தினமாக அனுசரிப்பது என்று முடிவெடுத்திருப்பதைப் பற்றி தமிழர்கள் தரப்பில் இருவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. தமிழர்களை நாடாளுமன்றத்தில் பெரிதும் பிரதிநிதித்துவப்படுத்தும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்...

யாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுக்கு பிரமாண்டமான ஏற்பாடு!

யாழ்.பல்கலைக்கழகத்தில் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து மே 18 திகதி முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை பிரமாண்டமான முறையில் அனுஸ்ரிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர் ஆர்.இராசகுமாரன் தெரிவித்தார். தமிழீழ வரலாற்றில் மறக்க முடியாத முள்ளிவாய்க்கால் படுகொலையில் கொடூரமாகக் கொல்லப்பட்ட அப்பாவி பொது மக்கள், போராளிகளை அன்நாளில் ஒவ்வொரு தமிழ் மகனும், உணர்வுபூர்வமாக அனுஸ்ரிக்க வேண்டும் என்றும் அவர்...

மது வெறியில் நினைவஞ்சலியைக் குழப்பிய குண்டர்கள்

நேற்று மாலை யாழ். நகரினில் தேவாலயங்கள் மற்றும் ஆலயங்களினில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களிற்கு அஞ்சலி செலுத்த பிரார்த்தனைகளினில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் பரவலாக முற்பட்டிருந்தனர்.அவர்களுடன் பொதுமக்களும் திரண்டிருந்தனர். இந்நிலையினில் நல்லூர் வீரமாகாளி அம்மன் ஆலயத்தினில் வெளியே நின்று அவர்கள் பிரார்த்தனையினில் ஈடுபட முற்பட்ட வேளை அங்கு இராணுவப் புலனாய்வாளர்களினால் தயார் நிலையினில் வைக்கப்பட்டிருந்த...

தடைகளையும் மீறி பல இடங்களில் உயிர் நீத்த மக்களுக்கான நினைவஞ்சலிகள்

யாழ்.குடாநாட்டில் படையினரின் அதி உச்சக்கட்ட பாதுகாப்பிற்குள் கட்சி அலுவலகங்கள் கோவில்கள் தேவாலயங்கள் கடந் த 3தினங்களாக வைக்கப்பட்டிருக்கும் நிலையிலும் முள்ளிவாய்க்கால் மண்ணில் கொல்லப்பட்ட மக்களுக்கான ஆத்மசாந்திப் பிரார்த்தனைகள் மற்றும் நினைவேந்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. முள்ளிவாய்க்கால் பகுதில் இறுதி யுத்தத்தில் இறந்த  மக்களுக்கான ஆத்மசாந்தி பிரார்த்தனை நிகழ்வுகள் நடத்துவதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஆகியன...

யாழ்.தினக்குரல் அலுவலகமும் முற்றுகை

யாழ்ப்பாணத்திலுள்ள தினக்குரல் அலுவலகமும் இராணுவத்தினரால் சற்று நேரத்திற்கு முன்னர் முற்றுகையிடப்பட்டுள்ளது. (more…)

ஐக்கியத்தை பாதுகாப்போம்! யுத்த வெற்றி கொண்டாட்டங்கள் தொடரும்: ஜனாதிபதி

சிங்கள,தமிழ்,முஸ்லிம் மக்களை மட்டுமல்ல தமிழ்த்தலைவர்களையும் பயங்கரவாதிகள் கொன்றொழித்தனர். அவ்வாறான பயங்கரவாதிகளிடமிருந்து படையினர் உயிர்துறந்து பெற்றுக்கொண்ட ஐக்கியத்தை நாம் பாதுக்காக்கவேண்டும். அதனை பறித்தெடுப்பதற்கும் யாருக்கும் இடமளிக்கக்கூடாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.என்றுமே மரணிக்க முடியாதது இன ஐக்கியமாகும். அந்த ஐக்கியத்தை அபகரிப்பதற்கு ஒரு சிறு பிரிவினர் முயற்சிக்கின்றனர் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.யுத்தவெற்றியின் ஐந்து ஆண்டுகள்...

சிங்கள சுற்றுலா பயணிகளுக்கே கீரிமலை செல்லும் வீதி அனுமதி; ஏனையோருக்கு தடை

தெல்லிப்பழை சந்தியில் இருந்து கீரிமலை செல்லும் வீதிப்பாவனைக்கு இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. தெல்லிப்பழை சந்தியில் இருந்து கீரிமலை செல்லும் வீதி சிங்கள சுற்றுலா  பயணிகளைத் தவிர ஏனையவர்களுக்கு இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. மே - 18 ஆம் நாளான இன்று முள்ளிவாய்க்காலில் இறுதிப்போரில் உயிரிழந்த உறவுகளுக்கு கீரிமலையில் ஆத்ம சாந்திப்பூஜை மற்றும் பிதிர்க்கடன் செய்ய செல்லக்...

அனந்திக்கும் தடை

கீரிமலைக்கு சென்ற வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இராணுவத்தினரால் இடை மறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். யுத்தத்தில் உயிரிழந்த உறவகளின் ஆத்மா சாந்தியடைய வேண்டி கீரிமலையில் பிதிர்க்கடன் களித்து வழிபடச் சென்ற வடக்கு மாகாண சபை உறுப்பினர் இராணுவத்தினரால் தெல்லிப்பழை சந்தியில் மறிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். மேலும் நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்...

முற்றுகைக்குள் உதயன் பணிமனை

உதயன் பணிமனை இன்று மதியம் முதல்  இராணுவத்தினரால் திடீரெனச் சுற்றிவளைக்கப்பட்டு, போக்குவரத்தும் தடை  செய்யப்பட்டுள்ளளது. இன்று காலை முதலே உதயன் பணிமனையைச் சூழ சிவில் உடையில் ஏராளமான புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.வாகனமொன்றை உதயனுக்கு அருகில் நிறுத்தி விட்டு, அதிலிருந்து இறங்கிய சிலர், ஆயுதங்களுடனும் காணப்பட்டனர்.உதயன் பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் அவர்களின் செயற்பாடுகள் அமைந்ததால், அது குறித்து அந்த...

நினைவுக்கல்லிருந்த படத்தினையும் இராணுவத்தினர் எடுத்துசென்றுள்ளனர்

தொல்புரம் பகுதியில் புதிததாக அமைக்கப்பட்ட வயோதிபர் இல்லத்தின் திறப்பு விழா நேற்று சனிக்கிழமை (17) இடம்பெற்றது, (more…)

கட்சி அலுவலகங்களும் முற்றுகை

யாழ்.மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் அலுவலகம் மற்றும் 3 ஆம் குறுக்குத் தெருவுக்கு அண்மையில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் என்பன (more…)

கஜேந்திரனின் வீடு முற்றுகை

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரனின் திருநெல்வெலியில் அமைந்துள்ள வீட்டிக்கு அருகில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். (more…)

யாழ்.பல்கலை, நல்லூர் ஆலய சூழலில் இராணுவம் குவிப்பு

யாழ்.பல்கலைக்கழக வாளகத்தினைச் சுற்றியுள்ள வீதிகள் மற்றும் இடங்களில் இராணுவத்தினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். (more…)

அஞ்சலிக்கத் தடை ;இலங்கையின் புதிய சட்டமா?-டெனிஸ்வரன் கேள்வி

கடந்த கால இறுதி போரின் போது மக்களின் இருப்புக்கள் மீது கொத்துக் கொத்தாக வீசப்பட்ட குண்டு மழையினால் கொல்லப்பட்ட எமது மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு எமக்கென்ன தடை என வட மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் இன்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,   2009ம் ஆண்டு இறுதி போரின்...

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோருக்கு பிதிர்க்கடன் நிறைவேற்ற ஏற்பாடு

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் பிதிர்கடன்களை நிறைவேற்றலையும் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தில் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சபை வேட்பாளர் தி.துவாரகேஸ்வரன் தெரிவித்தார். (more…)

வடமாகாண சபையின் அடுத்த அமர்வில் கூட அஞ்சலி செலுத்துவோம் -சிவாஜி

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகமே என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று வெள்ளிக்கிழமை (16) தெரிவித்தர். (more…)

முள்ளிவாய்க்கால் நினைவுதின துண்டுப்பிரசுரம் வைத்திருந்தவர் கைது

முள்ளிவாய்க்கால் நினைவுதின துண்டுப்பிரசுரம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சுன்னாகம் வீதி, நிலாவரைப் பகுதியினைச் சேர்ந்த நபர் ஒருவர் இராணுவத்தினரால் நேற்று வியாழக்கிழமை (15) நள்ளிரவு அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டு அச்சுவேலிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். (more…)

வடமாகாண சபையில் பதற்றம்

வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை, வட மாகாணசபைக்குள் செல்ல பொலிஸார் அனுமதிக்காததை அடுத்து அப்பகுதியில் தற்போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts