. சுன்னாகம் – Jaffna Journal

சுன்னாகம் நிலத்தடி நீர் பிரச்சனை முறையான அறிக்கையின்றி ஒத்திவைப்பு!

சுன்னாகம் நிலத்தடி நீர் அருந்தக்கூடியதா? இல்லையா? என்பது தொடர்பாக இதுவரை முறையான அறிக்கையெதுவும் சமர்ப்பிக்காததால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் நிலத்தடி நீர் பிரச்சனை தொடர்பான வழக்கு விசாரணை நேற்றையதினம் நீதிமன்றில் நடைபெற்றது. இதன்போது, பிரதேச வைத்திய அதிகாரிகள், சுகாதார பரிசோதகர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ... Read more »

சுன்னாகத்தில் காற்றாலை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்!

சுன்னாகத்தில் இரண்டு காற்றாலை மின் திட்டங்களை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. தலா 10 வாற்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் குறித்த காற்றாலைகள் அமைக்கப்படவுள்ளன. சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவையில் இந்த திட்டங்களை சமர்ப்பித்திருந்தார். இதற்கு... Read more »

கழிவு எண்ணெய் கலந்த நீரை குடிக்கலாமா கூடாதா? மக்கள் கேள்வி

நிலத்தடி நீரில் மாசு தொடர்பில், இன்று காலை சுன்னாகம் சந்திக்கருகில் கவனயீப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை சமூக நீதிக்கான பொதுசன அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள மின் நிலையத்திலிருந்து பாதுகாப்பற்ற முறையில், வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய் நிலத்தடி நீரில் கலந்துள்ளமையால்,... Read more »

யாழ்.குடாநாட்டு குடிநீரில் மலக்கிருமி, நைத்திரேற்று அச்சுறுத்தலே அதிகம்

யாழ்.குடாநாட்டு குடிநீரில் எண்ணை நச்சுக்கள் மற்றும் பார உலோகங்களின் தாக்கம் இல்லை. ஆனால் மலக் கிருமிகளும், நைத்திரேற்றும் அச்சுறுத்தும் வகையில் உள்ளதாக வடமாகாண சபையினால் உருவாக்கப்பட்ட நிலத்தடி நீர் தொடர்பான நிபுணர் குழு தனது இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. சுன்னாகம் பகுதியில் ஆரம்பமாகி தெல்லிப்பளை... Read more »

கட்டுவனில் மற்றுமொரு கிணற்றிலும் எண்ணெய் கசிவு

சுன்னாகம் பகுதியில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு தற்போது கட்டுவன் பகுதியிலுள்ள வள்ளுவன் சனசமூக நிலைய பொதுக்கிணற்றுக்கும் பரவியுள்ளதாக பாதிக்கப்பட்ட சனசமூக நிலைய அங்கத்தவர்கள், தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி பணிமனைக்கு செவ்வாய்க்கிழமை (02) தெரியப்படுத்தியுள்ளனர். சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள இலங்கை மின்சார சபையின் மின்பிறப்பாக்கியிலிருந்து வெளியேற்றப்படும்... Read more »

சுன்னாகம் குடிநீரில் கழிவு எண்ணெய்,வடக்கு முதல்வர் தலைமையில் கலந்துரையாடல்

சுன்னாகம் பிரதேசத்தில் உள்ள கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்துள்ள விவகாரம் தொடர்பாக வடக்கு மாகாண முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (28.11.2014) வலிதெற்குப் பிரதேசசபை மண்டபத்தில் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினர்கள் த.சித்தார்த்தன், பா.கஜதீபன்,வலிதெற்குப் பிரதேசசபைத் தவிசாளர்... Read more »