- Monday
- July 6th, 2026
நிகழாண்டில் மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு ஜப்பானைச் சேர்ந்த உயிரணுவியல் விஞ்ஞானி யோஷினோரி ஓசுமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பழுதடைந்த உயிரணுக்கள் தம்மைத் தாமே அழித்து சுத்தம் செய்துகொள்ளும், "ஆட்டோஃபஜி' என்றழைக்கப்படும் "சுய துப்பரவு' செயல்நுட்பம் குறித்த ஆய்வுகளுக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்தக் குழு திங்கள்கிழமை கூறியதாவது: உயிரிணுக்களின் சுய...
கவர்ச்சியால் மேற்குலக நாடுகளில் அதீத பிரபல்யம் அடைந்துள்ள அமெரிக்காவின் கவர்ச்சி கன்னியான கிம் காடஸ்சியன் வெஸ்ட்டிடம் இருந்து மில்லியன் கணக்கான நகை கொள்ளையிடப்பட்டுள்ளது. பாரிஸ்சிலுள்ள சொகுசு வீட்டில் வைத்து பொலிஸ் சீருடை அணிந்த இருவர் அவரிடம் இருந்த 6 மில்லியன் யூரோ பெறுமதியான நகை பெட்டி கொள்ளையிடப்பட்டுள்ளதாக பாரிஸ் பொலிஸார் கூறியுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில்...
எதிர்கால தலைமுறைகளை பாதுகாப்பதற்காக போதை மருந்துக்கு அடிமையான 3 மில்லியன் பேரை கொன்றுவிட தயார் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டோ தெரிவித்திருக்கிறார். ஈவிரக்கமில்லாத பிலிப்பைன்ஸ் அதிபரின் இந்தக் கருத்துக்கு பல நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இவர் பதவியேற்ற பின்னர் காவல்துறையினராலும், கண்காணிப்பாளர்களாலும் இதுவரை 3,000பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவரின் கருத்துக்கு பல நாடுகளிலிருந்து எதிர்ப்புக்கள்...
எதிர்வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தானின் இஸ்லாமபாத்தில் இடம்பெற இருந்த 19வது சார்க் மாநாட்டை பிற்போடுவதாக பாகிஸ்தான் வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. அந்த மாநாடு இடம்பெறும் புதிய திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பாகிஸ்தான் வௌிவிவகார அமைச்சு கூறியுள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதையடுத்து, மாநாட்டை புறக்கணிக்க போவதாக இந்தியா முன்னதாக அறிவித்திருந்தது. இந்த...
தென் அவுஸ்திரேலிய இலங்கை தமிழ் சங்கத்தின் 33 ஆவது வருடாந்த இரவு விருந்து நிகழ்வு கடந்த சனிக்கிழமை (24.09.2016) குட்வூட் சமுக மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் திரு. ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மதிப்புக்குரிய பல்லின கலாச்சார அமைச்சர், சோய் பெட்டிசன், பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வின் மூலம் திரட்டப்பட...
காஷ்மீரில் உரி ராணுவ முகாமில் வீரர்கள் அதிகாலை நேரத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தபோது, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 4 பேர் புகுந்து கோழைத்தனமான தாக்குதல்கள் நடத்தினர். இதில் 18 வீரர்கள் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய சதிகாரர்களும் சுட்டு வீழ்த்தப்பட்டனர். உரி ராணுவ முகாமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 4 பேரை வழி நடத்தியவர்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த...
சிங்கப்பூரின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு ஈழத் தமிழ் பூர்வீகத்தைக் கொண்ட தமிழர் ஒருவருக்கு அதிகம் இருப்பதாக இணையத் தேடுதளமான யாகூ சிங்கப்பூர் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் துணைப் பிரதமரான தர்மன் சண்முகரத்னம் அடுத்த பிரதமராக தெரிவுசெய்யப்பட வேண்டும் என்பதை கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டவர்களில் 69 வீதமானோர் விரும்புவதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. சிங்கப்பூரின்...
குவைத் நாட்டில் சாரதியாக பணியாற்றுகின்ற இலங்கை பிரஜை ஒருவர், அந்நாட்டு பெண் ஒருவருக்கு கை குலுக்குவது போல் அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதால் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தனது பக்கத்து வீட்டுக்காரரான குறித்த இலங்கை பிரஜை, கை குலுக்குவது போல் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக, சாத் அல்-அப்துல்லா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...
தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றின் சட்ட மா அதிபர் Eleanor Sharpston பரிந்துரை செய்துள்ளார். பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டமைக்கான உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால், அவ்வமைப்பினை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். ஆலோசகரின் இந்த பரிந்துரை கட்டாயம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதில்லை. எவ்வாறெனினும், மிக நீண்ட...
புதன்கிழமை அன்று, எகிப்து கடற்பகுதிக்கு அப்பால் ஒரு படகு மூழ்கியதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் நீரில் மூழ்கியுள்ளதாக நம்பப்படுகிறது. படகில் சுமார் 550 பேர் இருந்ததாகவும், இத்தாலிக்கு செல்ல ரோஸெட்டா துறைமுகத்திலிருந்து வெளியேற காத்திருந்த போது மேலும் பலர் படகிற்குள் திணிக்கப்பட்டதாகவும் தப்பிப்பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர். அதில் பயணம் செய்த பெரும்பாலனாவர்கள் எகிப்தியர்கள், ஆனால் மற்றவர்கள் கிழக்கு ஆஃப்ரிக்கா...
இலங்கையில் தற்போது ஏற்பட்டுவரும் மாற்றங்கள் உலகுக்கு ஒரு முன்மாதிரியாகும் எனக் குறிப்பிட்டுள்ள ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இலங்கையின் எதிர்காலப் பயணத்துக்குத் தேவையான முழுமையான உதவிகளை வழங்க, தாம் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் 71ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றும் அரச தலைவர்களுக்காக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விசேட பகல் போசன...
ஐக்கிய அமெரிக்காவின் நியுயோர்க் நகரத்தில் இடம்பெற்ற வெடிப்பில், குறைந்தது 29 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செல்சியா மாவட்டத்தின் மன்ஹற்றன் பகுதியிலேயே, இலங்கை நேரப்படி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கே பாரிய சத்தத்துடன் வெடிப்பு நிகழ்ந்துள்ளது. நியூஜெர்சியில் குழாய் குண்டு வெடித்து சில மணித்தியாலங்களிலேயே, மேற்குறித்த வெடிப்பு இடம்பெற்றுள்ளது. எவ்வாறெனினும், எந்தவொரு காயங்களும், உயிருக்கு...
பங்களாதேஷ் பிரஜைகளுக்கான ஒன் எரைவல் வீசா முறையை இலங்கை அரசாங்கம், அந்த நாட்டுக்கு அறிவிக்காமலேயே நிறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பங்களாதேஷூம் இலங்கைப் பிரஜைகளுக்கு வழங்கி வந்த ஒன் எரைவல் வீசா முறையை நிறுத்தியுள்ளதாக, வௌிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது. மேலும், இலங்கை உயர்ஸ்தானிகர் யசோஜா குணசேகரவை அழைத்து இது குறித்து அந்நாட்டு வெளிவிவகார...
சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் தொடர்ந்தும் இலங்கை, இந்தோனேஷியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் இயங்கி வருவதால், புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பிலான கொள்கையில் எந்த வித மென்மையான போக்கையும் கடைப்பிடிக்கப் போவதில்லை என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பீட்டர் டொட்டன் (Peter Dutton) பாராளுமன்றத்தில் கருத்து வௌியிட்ட போதே இதனை குறிப்பிட்டுள்ளார். படகு வழியாக தமது...
மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் சகீப் அன்சாரி மற்றும் அந்நாட்டிலுள்ள பௌத்த விகாரையின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களுடனோ, அல்லது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, அந்நாட்டில் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பு சம்பவத்துடனோ, இலங்கையர்கள் எவரும் தொடர்புப்படவில்லை என்று, தகவல்கள் வெளியாகியுள்ளன. மலேஷியப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்துள்ள தகவல்களின் பிரகாரம், அவர்கள் அனைவரும், தென்னிந்தியாவிலிருந்து மலேஷியாவுக்குச் சென்றவர்கள்...
பேஸ்புக் நிறுவனமானது வியட்நாம் போரின் உக்கிரத்தை எடுத்துச் சொல்லும் பிரபல புகைப்படம் ஒன்றை தொடர்ந்து நீக்கி அதன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளது. அந்த புகைப்படத்தில், கொத்துக்குண்டு வீச்சிலிருந்து தப்பிக்க நேபாள சிறுமி ஒருவர் ஆடைகளின்றி ஓடி வரும் காட்சி உள்ளது. பேஸ்புக் நிறுவனத்திற்கு, குழந்தைகளின் நிர்வாண புகைப்படங்களுக்கும், வரலாற்று புகைப்படங்களுக்கும் உள்ள...
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் கடந்த எட்டு வருடங்களாக ஒரு பெண்ணை அடிமை போல நடத்தி வந்ததாக இலங்கை தம்பதியினருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 48 வயதான குமுதினி கண்ணன், 52 வயதான கந்தசாமி கண்ணன் இருவருமே இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். ஜூலை 2007 தொடக்கம் ஜூலை 2015 வரையிலான...
ரஷ்யாவின் சைபீரியாவில் அமைந்துள்ள நோரில்ஸ்க் பகுதியில் செல்லும் டால்டிகான் ஆறு திடீரென ரத்த சிவப்பு நிறத்தில் மாறியதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். இதுதொடர்பாக சுற்று சூழல் துறை அதிகாரிகள் அந்த பகுதியில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ரஷ்யாவின் முக்கிய தொழில்மயமான மாசுபட்ட நகரங்களில் ஒன்று நோரில்ஸ்க் நகரம். இந்த நகரத்தை கடந்து செல்லும் டால்டிகான் ஆறு திடீரென...
இங்கிலாந்தின் பேர்க்ஷையர் பிராந்தியத்தின் ஸ்லவ்(Slough) பகுதியைச் சேர்ந்த மொடல் அழகி ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவர் தனது முகத்தில் ஆறு அங்குலத்திற்கு தாடி வளர்த்து சாதனை சொந்தமாக்கியுள்ளார். ஹார்னாம் கௌர் என்ற 24 வயதான இளம் மொடல் அழகியே இந்த சாதனையை தனதாக்கியுள்ளார். இவரின் உடலில் ஆண்களில் சுரக்கும் ஓமோன்கள் அதிகம் சுரக்கின்றமையால் இவ்வாறு...
Loading posts...
All posts loaded
No more posts
