- Saturday
- April 11th, 2026
அதிகளவு போதைப்பொருளைப் பயன்படுத்திய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உடுவில் பகுதியைச் சேர்ந்த 34 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபரின் சகோதரர்கள் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் இவர் தனது தாயாருடன் உடுவில் பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் இன்று காலை கழிப்பறைக்கு சென்று விட்டு நீண்ட நேரம் திரும்பி வரவில்லை. இந்நிலையில்...
காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில் அண்மையில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட தனியார் காணி பெற்றோலிய கூட்டத்தாபனத்திற்கு சொந்தமான காணி என அதிகாரிகள் உரிமை கோரி வந்தமையால், காணி உரிமையாளர்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டது. அது தொடர்பில் தெரிய வருவதாவது, கடந்த 33 வருட காலத்திற்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த மாங்கொல்லை பகுதியில் இருந்து...
அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி 2023ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை விடுமுறை இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கப்படவுள்ளது. மேலும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நவம்பர் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மின்கட்டண அதிகரிப்பிற்கு எதிராக யாழில் தீப்பந்த ஊர்வல போராட்ட பேரணியொன்று நேற்று வியாழக்கிழமை (26) முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் அக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தலைமையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ். நல்லூர் பகுதியிலுள்ள அக் கட்சியின் அலுவலகத்தில் ஆரம்பிக்கப்பட்ட தீப்பந்த ஊர்வல பேரணியானது இளங்கதிர் சனசமூக நிலையம் வரை சென்று...
யாழ்ப்பாணத்தில் கேஸ் சிலிண்டர்களை திருடிய குற்றச்சாட்டில் நேற்று வியாழக்கிழமை (26) இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 10 கேஸ் சிலிண்டர்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். யாழ். நகர் பகுதி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள வீடுகள், உணவகங்களில் கேஸ் சிலிண்டர்கள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்த நிலையில், அது தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடுகள் பதிவு...
பொது மக்களின் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக கட்டப்பட்ட ஐனாதிபதி மாளிகை கட்டடத்தை உரிய நடைமுறைகள் அனுமதிகள் பெறப்படாது எவ்வாறு தனியாருக்கு வழங்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் நேற்று (26.10.2023) உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், ஐனாதிபதியின் இந்தச் செயற்பாடு...
இலங்கையில் 25 வயதுக்கு மேற்பட்ட 4 பேரில் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை பக்கவாதம் தொடர்பான சங்கத்தின் தலைவரும் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் நரம்பியல் நிபுணரான ஹர்ஷ குணசேகர விடுத்துள்ளார். ஒருவருக்கு ஒருமுறை பக்கவாதம் ஏற்பட்டால், அவர்களில் 25 வீதமானவர்களுக்கு மீண்டும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக நரம்பியல் ஹர்ஷ...
யாழில் இயங்கும் சட்டவிரோத மதுபான சாலைகள் மற்றும் அவை குறித்த முழுமையான விபரங்களைச் சமர்ப்பிக்குமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார். இன்று இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “சட்டவிரோத மதுபான சாலைகள் தொடர்பில் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. நீங்கள்...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள எட்டு திட்டங்கள் தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவராக வட மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார். நகர அபிவிருத்தி அதிகார சபையினால் யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள 8 திட்டங்கள் தொடர்பில் இன்றைய தினம் (26) ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது. குறித்த திட்டங்களுக்கான காணிகளை வழங்குவதற்கு ஒருங்கிணைப்பு குழுவின் அனுமதி...
கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாயவனூர் கிராமத்தின் வீதியில் இளம் குடும்பஸ்தரின் சடலமொன்று இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய நவரத்தினராசா மதுஸன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சடலம் நேற்று (25) இரவு 8.30 மணியளவில் பொது மக்களால் அடையாளம் காணப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது....
புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று(26) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. இன்று(26) முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. நாடளாவிய ரீதியில் 434 நிலையங்களில் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் பிரதி ஆணையாளர் நாயகம் லசிக சமரகோன் தெரிவித்தார். இதேவேளை, தவணைப் பரீட்சைகள் நடைபெறுவதனால் மாத்தறை மாவட்டத்தில் மாத்திரம் விடைத்தாள்...
தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு அறவிடப்படும் கட்டணத்தை திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டையின் சான்றளிக்கப்பட்ட பிரதிக்கான கட்டணம் 1,000 ரூபாவாக இருக்க வேண்டும் என இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தேசிய அடையாள அட்டைகளின் உண்மைத்...
இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவருடைய முதுமையினால் செயற்பாட்டு அரசியலில் பங்களிப்பு செய்யமுடியா திருப்பதன் காரணமாக அவர் தனது பதவியை துறக்க வேண்டுமென அந்த கட்சியின் பேச்சாளரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாக கோரியுள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றில் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்....
பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதற்காக கறுப்பு பட்டியலில் கைது செய்யப்பட்ட இருவரை அதிலிருந்து நீக்கி பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்னவினால் இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வவுனியாவைச் சேர்ந்த அந்தோனி எமில் லக்ஷ்மி காந்தன் மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முருகேசு ஸ்ரீ சண்முகராஜா ஆகிய இருவரும் தடை பட்டியலில்...
ஏழு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு விசா இன்றி பிரவேசிப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான், மலேசியா, இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாத அணுகலை பெற்றுக்கொள்ள முடியும். இந்த திட்டம் உடன் அமுலுக்கு வருவதாகவும் 2024 மார்ச் 31 ஆம் திகதி வரை தொடரும்...
யாழில் மாணவி ஒருவர் தனது வீட்டில் குளித்துக்கொண்டிருக்கும் போது அதனை மறைந்திருந்து கையடக்க தொலைபேசியில் வீடியோ எடுத்தார் என சந்தேகிக்கப்படும் நபர் தலைமறைவாகியுள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று ஜன்னல் வழியாக கையடக்க தொலைபேசி ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி உடனே சத்தமிட்டுள்ளதுடன், இது...
சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் லெபனான் நாட்டில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள தனது கணவரை மீட்ட , நாட்டுக்கு அழைத்து வருமாறு அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது , யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வசந்தபுரம் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரன் சயந்தன் எனும் இளைஞன்...
போலி விசாவை பயன்படுத்தி பிரித்தானியா செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே கட்டார் விமான சேவை ஊடாக டோகா நோக்கி செல்ல முற்பட்ட போது விமான நிலைய அதிகாரிகள் அவரது விசா பரிசீலிக்கப்பட்ட போது விசா போலியானது...
இணையத்தள விளையாட்டுக்கள் மூலம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலர் ஏமாற்றப்பட்டு உள்ளதாகவும், அதனூடாக அவர்கள் பல இலட்ச ரூபாய்க்களை இழந்துள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜெகத் விஷாந்த தெரிவித்தார். இணையத்தளங்கள் ஊடாக சூது போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடும் இளைஞர்கள் பல இலட்ச ரூபாய்க்களை முதலீடு செய்து அவற்றை இழந்து வருகின்றனர். விளையாட்டின் அறிமுகத்தின் போது...
கொத்மலை வெவத்தென்ன கிராமத்தை அச்சமூட்டும் வகையில் பூமிக்கு அடியில் இருந்து வரும் மர்ம சத்தம் குறித்து கிராம மக்கள் அச்சம் கொள்ள எந்த காரணமும் இல்லை என பேராதனை பல்கலைக்கழக புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். அப்பகுதியில் கண்காணிப்புப் பயணத்தில் ஈடுபட்டிருந்த மூத்த பேராசிரியர் கூறுகையில், பூமியில் உள்ள ஓட்டை வழியாக...
Loading posts...
All posts loaded
No more posts
