டிசம்பரில் கிராம அலுவலர் போட்டிப் பரீட்சைகள்!

2,763 கிராம அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு 2023 டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்றைய பாராளுமன்ற அமர்வின் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த பிரதமர், "இலங்கையில் 14,022 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன. ஒரு கிராம அலுவலர் பிரிவுக்கு ஒரு...

தமிழர் பிரதேசங்களை சீனாவிடமிருந்து பாதுகாக்குமாறு கோரி போராட்டம்!

வடகிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா தலையிட்டு தமிழர் பிரதேசங்களை சீனாவின் அத்துமீறலில் இருந்து பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று வவுனியாவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீன தூதுவர் கி சென் ஹொங் தலைமையிலான குழுவினர் இரண்டாம் நாளாக இன்று நயினாதீவுக்கு விஜயம் செய்திருந்தனர். இதன்போது...
Ad Widget

யாழில் பார்வைக்குறைபாடினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

யாழில் பார்வைக்குறைபாடினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக கண் சிகிச்சை வைத்திய நிபுணர் மு.மலரவன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ’கண்ணில் பார்வைக் குறைவு ஏற்படுவதற்கு வென்புறை, கண்ணாடி அணிதல், நீரிழிவு நோய், வயது காரணமாக வருகின்ற விழித்திரு நோய்...

பல்கலை மாணவர் மீதான தாக்குதல் பேரினவாதத்தின் அடக்குமுறையை காட்டுகிறது – வேலன் சாமிகள்

கிழக்கு மாகாணத்தில் வாயில்லா ஜீவன்களுக்காக ஜனநாயக வழியில் போராடச் சென்ற வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தமிழர்கள் மீது சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறை தொடர்வதை காட்டி நிற்பதாக பொத்துவில் பொலிகண்டி பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது சிறிலங்கா காவல்துறை மேற்கொண்ட தாக்குதல்...

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! வெளியான அறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75...

கைதிற்கு எதிராக பல்கலைகழக மாணவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

மட்டக்களப்பில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேரும் இன்று சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக மட்டக்களப்பு பண்ணையாளர்கள் சித்தாண்டியில் நடத்தும் தொடர் போராட்டத்துக்கு ஆதரவாக நேற்று யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் இணைந்து போராட்டம் நடத்தினர். இதன் பின்னர், யாழ்ப்பாண பல்கலைகழகத்தை சேர்ந்த 5 மாணவர்களும், கிழக்கு...

மின்னல் எச்சரிக்கை குறித்த அறிவுறுத்தல்!!

நாட்டில் மின்னல் எச்சரிக்கை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, மேல், மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய பலத்த மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் அதிகம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம்...

முதலாம் தவணை எப்போது? – கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். க.பொ.த உயர்தரப் பரீட்சை அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி...

யாழில் பழைய கச்சேரியை பார்வையிட்ட சீன தூதுவர் அடங்கிய குழுவினர் !

யாழ்ப்பாணத்திற்கு இன்று திங்கட்கிழமை (05) விஜயம் மேற்கொண்டுள்ள சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாண பழைய கச்சேரி கட்டட தொகுதியை பார்வையிட்டனர். இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழுவினர் இன்று யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்து பல்வேறு சந்திப்பில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை, யாழ்ப்பாணம் பழைய கச்சேரியை சீன நாட்டு நிறுவனத்திற்கு...

யாழில் தனியார் விடுதியொன்றில் ஆணின் சடலம் மீட்பு!

யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் இருந்து ஆணொருவரின் சடலமொன்று இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிலங்கையைச் சேர்ந்த லால் பெரேரா (வயது 61) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனவும், அவர் கடந்த 3 நாட்களாக அங்கு தங்கியிருந்துள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அவரது சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்,போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் கொள்ளை கும்பலின் அட்டகாசம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் மூன்று பெண்கள் மாத்திரம் இருந்த பெண் தலைமை தாங்கும் குடும்பம் ஒன்றின் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் மகளின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ள நிலையில், குறித்த குடும்பம் செய்வதறியாது தவித்து வருகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில்...

வடக்கு மக்களுக்கு சீன நிதியுதவின் கீழ் வீடுகளை வழங்குவதற்கு திட்டம்!

வடமாகாண மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்திற்கநேற்று பயணித்திருந்த நிலையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள மக்கள் எவ்வாறான பிரச்சனைகளை எதிர் நோக்கினாலும் அதற்கு தீர்வு காணும் வகையில் சீனா அரசாங்கம் கடந்த காலத்திலும், தற்காலத்திலும் செயற்படுவதுடன், எதிர்காலத்திலும் அதற்காக செயற்படும் என்றும்...

ஜனவரி 27, 28ஆம் திகதிகளில் தமிழரசுக் கட்சியின் மாநாடு : சம்பந்தன் விவகாரம் குறித்து சுமந்திரன் நீண்ட விளக்கம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் வருடாந்த மாநாடு எதிர்வரும் ஜனவரி 27, 28ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதற்கு ஒருவாரம் முன்னதாக 21ஆம் திகதி கட்சியின் பதவி நிலைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளது/ இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தலைமையில் நேற்றையதினம் முற்பகல் 11மணிக்கு வவுனியாவில் உள்ள சுற்றுலா ஓய்வு விடுதியில்...

சுமந்திரனின் கருத்து குறித்து மாவையிடம் வருத்தம் வெளியிட்ட சம்பந்தன்!

இரா.சம்பந்தன், பொதுவெளியில் தன்னை பதவி விலகுமாறு எம்.ஏ.சுமந்திரன் கூறிய கருத்தானது மனவருத்தமளிப்பதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜாவிடம் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவுக்கும், அக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான இரு சந்திப்புக்கள் நேற்று நடைபெற்றிருந்தன. இந்த சந்திப்பின் போதே, இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தனது மனவருத்தத்தினை தெரிவித்துள்ளார். மேற்படி சந்திப்புக்கள் தொடர்பில் மாவை.சோ.சேனாதிராஜா...

அமெரிக்காவின் அடுத்த நகர்வு: உக்ரைன் – இஸ்ரேல் தலைவர்களிடையே விசேட சந்திப்பு

உக்ரைன் மற்றும் இஸ்ரேல் தலைவர்களுக்கு இடையே சந்திப்பை நடத்த இரு நாட்டு அதிகாரிகளும் முயற்சித்து வருவதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சந்திப்புக்கு அமெரிக்கா அனுசரணை வழங்கும் என்றும் ஈரான் மற்றும் ரஷ்யாவின் ஆதரவாளர்களுக்கு எதிராக ஐக்கிய முன்னணியை கட்டியெழுப்புவதே இந்த சந்திப்பின் நோக்கம் என்றும் செய்தியில் கூறப்பட்டுள்ளது....

மாணவர்களைக் கண்காணிக்க வருகிறது ‘புதிய சமூகப் புலனாய்வு பிரிவு‘

தேசிய புலனாய்வு பிரிவுடன் இணைந்து, புதிய சமூக புலனாய்வு பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இப்புதிய சமூக புலனாய்வு பிரிவின் செயற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பாடசாலைகளில் இடம்பெற்றுவரும் தவறான செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் விதமாகவே இப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்...

எரிவாயு விலைகளில் மாற்றம்!

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி நாளை (சனிக்கிழமை) முதல் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கமைய 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 75 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு!! அவசர சிகிச்சைகள் தவிர்ந்த ஏனைய சிகிச்சைகள் இடம்பெற மாட்டாது!!

வட மாகாணத்தின் வைத்தியசாலைகளிலுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிப்புறக்கணிப்பு நாளை காலை 8 மணி வரை முன்னெடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வட மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சைகள் தவிர்ந்த ஏனைய...

நல்லூர் கந்தனை தரிசித்தார் நிர்மலா சீதாராமன்!

மூன்று நாட்கள் விஐயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியாவின் நிதி அமைச்சர் ‘நிர்மலா சீதாராமன்‘ இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது இந்திய தூதுவர் கோபால் பாக்லே, இலங்கை வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், யாழ்...

மதுவினால் இலங்கையில் ஒரு நாளில் 40 பேர் அகால மரணம்!!

மதுபான பாவனையால் இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 40 பேர் அகால மரணமடைவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது. மது அருந்துவதால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15,000 பேர் உயிரிழப்பதாக அந்த மையம் தெரிவித்துள்ளது. மதுவின் வருமானத்தை விட மதுவினால் நாட்டுக்கு ஏற்படும் பொருளாதார சேதம் அதிகம் என ஆய்வுகள் கூறுகிறது. கடந்த 2015ம்...
Loading posts...

All posts loaded

No more posts