அமெரிக்காவின் அடுத்த நகர்வு: உக்ரைன் – இஸ்ரேல் தலைவர்களிடையே விசேட சந்திப்பு

உக்ரைன் மற்றும் இஸ்ரேல் தலைவர்களுக்கு இடையே சந்திப்பை நடத்த இரு நாட்டு அதிகாரிகளும் முயற்சித்து வருவதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சந்திப்புக்கு அமெரிக்கா அனுசரணை வழங்கும் என்றும் ஈரான் மற்றும் ரஷ்யாவின் ஆதரவாளர்களுக்கு எதிராக ஐக்கிய முன்னணியை கட்டியெழுப்புவதே இந்த சந்திப்பின் நோக்கம் என்றும் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இந்த வாரத்தில் உறுதி செய்யப்படும் என இரு நாட்டு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சந்திப்பு நடந்தால், ரஷ்ய – உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் உக்ரைன் ஜனாதிபதி விலாடிமிர் ஜெலென்ஸ்கி இஸ்ரேலுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும் என்று கூறப்படுகிறது.

Related Posts