பாடசாலை விடுமுறை! கல்வி அமைச்சின் புதிய அறிவிப்பு

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளின் முதற்கட்ட பணிகள் இன்று(24.07.2023) முதல் ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி வரை இடம்பெறும் எனவும் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி முதல்...

எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு!

வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த மாதம் மேலும் அதிகரிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தேவையான மதிப்பீட்டின் பின்னர் அனைத்து வாகனங்களுக்கான வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Ad Widget

மதுரைக்கும் யாழ்ப்பாணத்துக்கு இடையிலான விமான சேவை விரைவில் ஆரம்பம்!!

மதுரை மற்றும் யாழ்ப்பாணத்துக்கு இடையில் விரைவில் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்காக இந்தியாவிலுள்ள தனியார் விமான சேவை நிறுவனங்களுடன் இலங்கையின் விமானப் போக்குவரத்து அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த விமான சேவையை வாரத்திற்கு 7 நாட்களும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது....

வவுனியாவில் கடுகதி புகையிரதம் விபத்து : சேவைகள் பாதிப்பு?

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கடுகதி புகையிரதம் தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இயந்திரப்பகுதி பழுதடைந்து பயணத்தை தொடராது சில மணித்தியாலங்கள் நிறுத்தப்பட்டது. கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற புகையிரதம் நேற்றுமாலை தாண்டிக்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது மாட்டுடன் மோதுண்டது. இதன் போது மாடு பலியான நிலையில் புகையிரதத்தின் இயந்திரப்பகுதியில் விபத்தினால் ஏற்பட்ட கோளாறு...

குருந்தூர் மலையில் வன்முறையை தூண்டியதற்காக பொலிசார் தண்டிக்கப்பட வேண்டும்: கஜேந்திரன்

குருந்தூர் மலையில் வன்முறையை தூண்டியதற்காக பொலிசார் தண்டிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர்...

காணிகளை விடுவிப்பதற்கான வடக்கு , கிழக்கு மக்களின் கோரிக்கை நியாயமானது – பவித்திரா

வடக்கு , கிழக்கிலுள்ள மக்கள் காணிகளை விடுவிக்குமாறு முன்வைக்கும் கோரிக்கைகள் நியாயமானவையாகும். அப்பகுதிகளில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் வன வள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் அவை நிச்சயம் விடுக்கப்படும் என வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி உறுதியளித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் புதன்கிழமை...

உயர்தர பரீட்சை விண்ணப்ப முடிவு திகதி அறிவிப்பு!!

2023 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலம் எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதேவேளை, 2022 கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள்...

வடக்கில் அதிகரித்துவரும் மது பாவனையின் காரணமாக நரம்பியல் சார் நோய்கள் அதிகரிப்பு!!

அண்மைக்காலமாக அதிகரித்துவரும் மது பாவனையின் காரணமாக வடக்கில் நரம்பியல் சார் நோய்கள் அதிகரித்துள்ளதாக நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் , அதிகரித்த மது பாவனையின் காரணமாக வடக்கு மாகாணத்தில் நரம்பியல்...

‘யாழ்ப்பாணப் பொது நூலகம்‘ நூல் வெளியீடு

இங்கிலாந்தை சேர்ந்த நூலாசிரியர் என். செல்வராஜா அவர்களின் யாழ்ப்பாண பொதுநூலகத்தின் வரலாறு தொடர்பிலான பல்வேறு அரிய தகவல்களைக் கொண்ட “Rising from the Ashes” என்ற ஆங்கில நூலினதும், ‘யாழ்ப்பாணப் பொது நூலகம்‘ என்கிற தமிழ் நூலினதும் வெளியீட்டு விழா நேற்றைய தினம் யாழ் பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வுக்கு ஏராளமானோர்...

யாழில் 3 பிள்ளைகளின் தாய்க்கு நேர்ந்த கொடூரம்!!

யாழில் வீடொன்றின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சிலர் நேற்றிரவு பெட்ரோல் குண்டொன்றை வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றின் மீதே இரவு 09. 30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று கறுப்புத் துணியால் முகங்களை மறைத்தவாறு இரண்டு மோட்டார்...

யாழ்.போதனா வைத்தியசாலை விடுதியில் இளைஞனின் சடலம்! அளவுக்கதிகமான போதையால் உயிரிழப்பு??

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான இணுவில் பகுதியில் உள்ள விடுதியில் போதை ஊசி ஏற்றிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான விடுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு பழக்கமான குறித்த இளைஞன் நேற்று இரவு விடுதிக்கு வந்துள்ளார். எனினும் பின்னர் அவரை காணாத நிலையில் தேடிச் சென்றபோது விடுதியின் ஒரு பக்கத்தில்...

யாழில் சுமார் 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு வலைவீசும் பொலிஸார் !!

யாழில் சுமார் 60 க்கும் மேற்பட்டவர்களுக்கு போலி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்களையும் அவர்களுக்கு போலி சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கிய வலையமைப்பை சேர்ந்தவர்களையும் கைது செய்வதற்கு நீதிமன்ற அனுமதியை கோரவுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் போலி சாரதி அனுமதி பத்திரத்துடன் கடந்த 08 ஆம் திகதி இருவர் கைது செய்யப்பட்டனர். அதனை அடுத்து யாழ்.மாவட்ட...

யாழ்.பல்கலை மாணவர்கள் மீது தாக்குதல் : 07 மாணவர்கள் காயம்

யாழ்ப்பாண பல்கலைக்காக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 07 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் குருநகர், சிறுத்தீவு பகுதிக்கு பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை சென்று சந்தோஷமாக பொழுதை கழித்துள்ளனர். ஒரு கட்டத்தில் கடலில் இறங்கி நீராடும் போது, அருகில் இருந்த கடலட்டை பண்ணைக்குள்ளும் நுழைந்துள்ளனர். அதனால் , கடலட்டை பண்ணையில் காவலில் இருந்தவர்களுக்கும்...

யாழ். பல்கலைக்கழகத்தின் 37வது பொதுப் பட்டமளிப்பு விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதி, இன்று (19) ஆரம்பமாகி தொடர்ந்து 20 மற்றும் 21ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் எட்டு அமர்வுகளாக நடைபெறவுள்ள இப் பட்டமளிப்பு விழாவை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர், வாழ்நாள் பேராசிரியர் சி.பத்மநாதன் தலைமை தாங்கி, பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும், தங்கப் பதக்கங்களையும், புலமைப்...

தமிழ் மக்களுக்கு மீண்டும் துரோகமிழைத்திருக்கிறது தமிழரசுக்கட்சி – கஜேந்திரகுமார்

இலங்கைத் தமிழரசுக்கட்சி இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு வெளிப்படையாகக்கூறாமல், மறைமுகமாக அதனை வலியுறுத்தியிருப்பதன் மூலம் மீண்டும் தமிழ்மக்களுக்கு துரோகம் இழைத்திருக்கின்றது என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 20 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை...

கனேடிய உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயம்

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இன்றைய தினம் (18) யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார். இதன் போது நூலகத்தில் யாழ். மாநகர ஆணையாளர் இ.த. ஜெயசீலன் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸை வரவேற்று கலந்துரையாடினார். குறித்த சந்திப்பில் யாழ். பொதுசன நூலக நூலகர் உள்ளிட்ட சில உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கோதுமை மா விலைகளில் மாற்றம்!

செரண்டிப் மற்றும் பிரிமா கோதுமை மாவின் விலைகளை இன்று (செவ்வாய்கிழமை) முதல் திருத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

மாணவியைத் தாக்கியமைக்கு இதுவே காரணம்: நீதிமன்றத்தில் அதிபர் பரபரப்பு வாக்குமூலம்

யாழ். தீவக வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 9 வயதான மாணவியை பிளாஸ்ரிக் குழாயினால் 20 தடவைகள் தாக்கியதாகப் பாடசாலை அதிபருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது. இதனை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை பாடசாலை அதிபர் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , நேற்றைய தினம் திங்கட்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். நீதிமன்றில்...

குருந்தூர்மலை விவகாரம் : மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

குருந்தூர்மலையில் சைவ வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டமைக்கு எதிராக பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் கடந்த 14 ஆம் திகதி வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டதுடன், ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் மனிதஉரிமை ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர்களான து.ரவிகரன், ஆலய பரிபாலன சபையினர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களான அன்ரனிஜெயநாதன் பீற்றர்...

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான செய்தி!!

அரச மற்றும் அரச அனுமதிப்பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணை ஜூலை 21ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரண்டாம் தவணைக்கான முதல் கட்டம் எதிர்வரும் ஜூலை 24ஆம் திகதி (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
Loading posts...

All posts loaded

No more posts