யாழில் 3 பிள்ளைகளின் தாய்க்கு நேர்ந்த கொடூரம்!!

யாழில் வீடொன்றின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சிலர் நேற்றிரவு பெட்ரோல் குண்டொன்றை வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றின் மீதே இரவு 09. 30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினத்தன்று கறுப்புத் துணியால் முகங்களை மறைத்தவாறு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேரைக் கொண்ட கும்பலொன்று குறித்த வீட்டுக்குள் நுழைந்து , ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.

பின்னர் அவ்வீட்டில் இருந்த மூன்று பிள்ளைகளின் தாயான 42 வயதான பெண்ணொருவரையும் சரமாரியாகத் தாக்கி விட்டு , அவ்வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் சத்தம் கேட்டு அங்கு அந்த அயலவர்கள் காயமடைந்த பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் அச்சுவேலி பொலிஸாருக்கும் இது குறித்து தெரியப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற அச்சுவேலி பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts