- Saturday
- August 16th, 2025

வடமாகாணத்தில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக தீ விபத்துக்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடுமையான வெப்பம் மற்றும் வறண்ட காலநிலை காரணமாக ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல தீ விபத்துக்கள் வடக்கின் பல்வேறு பகுதிகளில் அண்மைய நாட்களில் பதிவாகியுள்ளன. வவுனியா இரட்டைப்பெரியகுளத்தில் அமைந்துள்ள தென்னை நார் ஆலை ஒன்றில் சனிக்கிழமை (22)...

போக்குவரத்து விதிமீறல்களுக்கான தகைமை இழப்பு புள்ளி செயல்முறை அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த முறையின் கீழ், 24 புள்ளிகளைபெறும் சாரதியின் அனுமதிப்பத்திரம் உடனடியாக இரத்து செய்யப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். இதற்கிடையில், வீதிகளில் இடம்பெறும் தவறுகளுக்கு குறித்த வீதியிலே...

யாழ்.ஊர்காவற்துறை - காரைநகர் பாதை சேவையில் அரை நிர்வாணமாக மதுபோதையில் நின்ற அரச பணியாளரொருவர் பொது இடத்தில் அரச ஊழியரொருவரை கொட்டனினால் தாக்கி அட்டகாசம் புரிந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. ஊர்காவற்துறையில் இருந்து காரைநகர் நோக்கி பயணித்த பாதையில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கடல்...

இலங்கைக்கான பாப்பரசரின் பிரதிநிதியுடன் யாழ் மறை மாவட்ட முதல்வரும் மேலும் ஒரு குருவும் நல்லூர் கந்தனை வழிபடுவதற்கு சென்றிருந்தனர். அவர்கள் ஆலயத்தின் முன்றலில் நின்று வணங்கி விட்டு வெளியேறிய போது நல்லூர் கந்தசாமி ஆலய நிர்வாகத்தினர் அவர்களை மதகுருவின் ஆடையுடன் உள்ளே சென்று வழிபட முடியும் என அழைத்திருந்தார்கள் அந்த அழைப்பை ஏற்று ஆலயத்திற்குள் கத்தோலிக்க...

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28.07.2023) நடைபெறவுள்ள போராட்டத்திற்கும் வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கடையடைப்பு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று (25.07.2023) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது. குறித்த ஊடக...

வவுனியாவில் கும்பல் ஒன்றினால் கடுமையாக தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளைஞன் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்த இனந்தெரியாத சிலர், வீட்டை எரித்ததோடு, அங்கிருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டனர். இந்தத் தாக்குதலில் ஏற்கனவே இளம் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் எரிகாயங்களுடன் வவுனியா...

குருந்தூர் மலை ஆதி சிவன் கோவிலின் தொன்மம் வழிபாட்டுரிமை பாதுகாக்க அனைவரும் முன்வாருங்கள் என தென்கயிலை ஆதீன குரு முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், அண்மைகாலமாக ஆதிசிவன் திருக்கோவில்களின் வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டு சைவத்தமிழ் தொன்மங்கள் பௌத்த சிங்கள தொன்மங்களாக மாற்றியமைக்கப்பட்டு...

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 323.03 ஆகவும் விற்பனை விலை 336.16 ஆகவும் பதிவாகியுள்ளது. மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்ட நடுத்தர மாற்று வீதம் 329 ரூபாவாகும் அதேவேளை பெப்ரவரி 24ஆம் திகதி டொலருக்கு...

ஒன்லைன் மூலம் கடவுசீட்டினைப் பெற்றுக்கொள்பவர்கள் , கைவிரல் அடையாளம் வைப்பதற்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் , சாவகச்சேரி பிரதேச செயலகம் மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலகத்திலையே அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் உள்ள இயந்திரம் கடந்த இரு வாரங்களாகப் பழுதடைந்துள்ளதால் மக்கள்அலைச்சல், நேரவிரயம் போன்ற பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இரண்டாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படவிருந்த கடற்படைக்கு காணி அளவிடும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை கடற்படைக்கு சுபீகரிப்பதற்காக நில அளவைத் திணைக்களம் யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்திருந்தது. அவர்களை வழிமறித்த காணி உரிமையாளர், கிராம மக்கள், அரசியல்வாதிகள் இது எங்களுடைய சொந்த காணி என்றும் இதனை அளவீடு செய்வதற்கு அனுமதிக்க...

குழந்தையின் சடலத்துடன் தாயை அலைக்கழித்த சம்பவம் தொடர்பில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார். நெடுந்தீவில் உயிரிழந்த தன் குழந்தையின் சடலத்துடன் தாயார் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பட்ட போது ,அவர் நோயாளர் காவு வண்டியில் சடலத்துடன் நீண்ட நேரம் நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி தொடர்பில் தான் ஊடகங்கள்...

கர்ணன் படைப்பகம் நடாத்திய குறும்படப்போட்டியில் கிஷாந்தின் இயக்கத்தில் உருவான “கேளன்” குறும்படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இக்குறும்படப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இடம்பெற்றது. குவியம் மீடியா நிர்வாக இயக்குனர் கனகநாயகம் வரோதயன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர்...

யாழில் சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உடனடியான நடவடிக்கைகளை எடுக்க வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் வீட்டுப்பணி புரிந்த சிறுமி கேதீஸ்வரன் தர்மிகா (வயது 17) சடலமாக மீட்கப்பட்ட விடயம் தொடர்பாக தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்ட வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட...

வவுனியா தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இனந்தெரியாத சிலர் வீடொன்றுக்குள் நுழைந்து வாளால் வெட்டி, தீ வைத்த சம்பவத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது. இந்த கும்பலுக்கு அவசியமான பிரபல குண்டர் ஒருவரையே தேடி வந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆனால் இந்த கும்பல் அந்த பிறந்த நாள் வீட்டிற்கு வந்த போது, அவர்கள்...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் சனிக்கிழமை பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் இந்த அழைப்பினை விடுத்துள்ளது. அன்றையதினம் வட்டுவாகல் பாலத்தில் ஆரம்பித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை...

பச்சை குத்தும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தாததாலும், பல நிறுவனங்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாததாலும் எயிட்ஸ் உள்ளிட்ட சமூக நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக இலங்கை பச்சை குத்துவோர் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கிட்டத்தட்ட ஐயாயிரம் பச்சை குத்தும் நிறுவனங்கள் உள்ளன, அவற்றில் 140 மட்டுமே சங்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று...

வவுனியாவில் பெண் ஒருவர் உயிாிழந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வௌியாகியுள்ளன. நேற்று அதிகாலை வவுனியா தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இனந்தெரியாத சிலர் வீடொன்றுக்குள் நுழைந்து வாளால் வெட்டி, தீ வைத்ததில் 21 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் சிறுவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 119...

ஈழத் தமிழர்கள் மீதான அரசின் இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தி கறுப்பு யூலை நினைவேந்தல் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ் பொது நூலகத்திற்கு அருகாமையில் நேற்று மாலை இவ் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது கறுப்பு யூலை நினைவேந்தல் பொதுச் சுடரினை மாவீரரின் தந்தையொருவர் ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து...

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்த சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் மன அழுத்தம் காரணமாகவே குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சிறுமி வீட்டார்களுடன் கதைப்பதை வீட்டு உரிமையாளர் தடுத்ததுடன் பல்வேறு நெருக்கடிகளை வழங்கியதால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் அறியமுடிகிறது. வட்டுக்கோட்டை முதலி...

நீர்கொழும்பு கடலில் நீராடிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உட்பட மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் - சுன்னாகத்தைச் சேர்ந்த ஜெயதீஸ்வரன் ஜெயலக்ஸ்மன் (வயது 23), கொஸ்லாந்தையைச் சேர்ந்த சத்தியமூர்த்தி சிறிவிந்த் (வயது 21), டயகமவைச் சேர்ந்த வடிவேல் ஆனந்தகுமார் (வயது 23) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நேற்றுப் பிற்பகல்(23.07.2023) ஒரு மணியளவில்...

All posts loaded
No more posts