- Thursday
- May 14th, 2026
யாழ்ப்பாணம் – சுன்னாகத்தில் தனியார் வைத்தியசாலை வைத்தியர் ஒருவரின் வீட்டில் பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் உடுவில் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நடந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்தவர்களே இந்த பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதலை நடத்தியுள்ளனர். இதன்போது பெற்றோல் குண்டு பாரிய சத்தத்துடன் வெடித்துள்ளது. இந்த சம்பவத்தில்...
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த யாழ் தேவி ரயிலுடன் மோதுண்டு குடும்பஸ்தர் ஒருவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று, வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா, நொச்சி மோட்டைப் பகுதியிலுள்ள புகையிரதக் கடவையின் ஊடாக, பண்டாரிக்குளம் வீதியை மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்றபோதே, அவர் விபத்துக்குள்ளாகியுள்ளார். வவுனியா நகரசபை விடுதியில் வசிக்கும் நவலிங்கம் ஜீவராஜ் (வயது...
இலங்கையில் அதிகூடிய உயரத்தை கொண்ட கட்டடத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பு 7ல் அமைந்துள்ள கொற்றன் பிளேசில் ( Horton Place ) அமைக்கப்படும் இந்த கட்டட நிர்மாணப்பணிகள் பாரிய நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த கட்டடம் 75 மாடிகளைக்கொண்டதாக இது அமையவுள்ளது. இதற்காக 250 மில்லியன்...
சர்ச்சைக்குரிய தனியார் மருத்துவக்கல்லூரியான சைட்டம் (South Asian Institute of Technology and Medicine ) தொடர்பான பிரச்சினைக்கு தீர்வாக நிர்வாக சபையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. தனிநபர் உரிமையிலிருந்து இதனை விடுவிப்பது நோக்கமாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் ஊடக நிறுவனங்களின் முக்கியஸ்தர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி இவ்வாறு கருத்து வெளியிட்டார். ஜனாதிபதி...
தமது கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கும் நோக்கிலேயே இராணுவம் தற்போது செயற்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது. காணி விடுவிப்பு தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த கலந்துரையாடலின் பிரகாரம் படிபடியேனும் காணிகள் விடுவிக்கப்படும்...
தென்மராட்சி பிரதேச கிராம அலுவலர்கள், நேற்று முதல் மறு அறிவித்தல் வரை தமது பிரிவுக்குக் கடமைக்குச் செல்வதில்லை என தெரிவித்துள்ளனர். அல்லாரை கிராம அலுவலர் பிரிவில் உள்ள ஒரு வீட்டில் உள்ளவர்கள், புதுவருட தினத்தில் இருந்து 3 நாட்களாக, ஒலிபெருக்கி மூலம் பாடல்கள் ஒலித்ததுடன், இரவு- பகலாக தாமும் பாடி அயலவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியுள்ளனர். இதுதொடர்பில்...
கடவுச் சீட்டுக்களை இணையத்தின் மூலம் அனுப்பி வைக்கும் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த குடிவரவு குடியகல்வு திணைக்களம் தயாராகி வருகிறது. குடிவரவு குடியகல்வு திணைக்களத்தை நவீனப்படுத்தும் வேலைத் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்குத் தேவையான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதன் முதற்கட்ட நடவடிக்கையாக கடவுச் சீட்டுக்களை...
விசாரியுங்கள் அறிந்துகொள்ளுங்கள் – அது உங்களது உரிமையாகும்’ எனும் தொனிப்பொருளில் பொதுமக்களுக்கு பொறுப்பு கூறும் வகையில் கல்வி அமைச்சில் தகவல் அறியும் நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிலையத்திற்கான இணையதளம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் ஆகியோர் இணைந்து நேற்று (புதன்கிழமை) வைபவ...
தமிழ் தேசிய கூட்டமைப்பினை சிதைக்கும் எண்ணம் தனக்கில்லை எனவும் எவ்வாறான எதிர்ப்புக்கள் வந்தாலும் அதனை கூட்டமைப்பிற்குள் இருந்தவாறே சமாளிக்க தயார் என்றும் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் சில அரசியல் தலைமைகளினால் புதிய அரசியல் கட்சி உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியான தகவல்கள்...
அரசாங்கத்தின் உயர் பதவிகளில் இன்னும் இரண்டு வார காலத்தில் முக்கிய மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்விடயத்தைத் தெரிவித்துள்ளார். இதன்போது பல புதிய முகங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அரச அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு...
வடக்கு, கிழக்கில் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில், அவர்களுக்கு தொழில்வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் மே மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என அமைச்சரும் சுதந்திர கட்சியின் பட்டதாரி சங்கத்தின் தலைவருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே...
கிளிநொச்சி முகமாலை பகுதியில் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட ரி56 ரக துப்பாக்கிகள் 82 மீட்கப்பட்டுள்ளன. நேற்று புதன் கிழமை முகமாலை பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த டாஸ் நிறுவனத்தினரால் இவை கண்டுப்பிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளன. பரல் ஒன்றினுள் வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட துப்பாக்கிகளில் அனைத்தும் முழுமையாக காணப்படவில்லை . இவை அனைத்தும் பளை காவல்துறையினரிடம்...
இன்று போதைப்பொருட்களே நாட்டில் மலிவாக கிடைப்பதாக முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டார். தமிழ் சிங்கள் புத்தாண்டை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி தலைமையில் குருநாகலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். எமது ஆட்சி காலத்தில் தமிழ் சிங்கள புத்தாண்டு காலங்களில் அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு சலுகைவிலையில் வழங்கினோம். ஆனால் இம்முறை அரசாங்கம்...
கேப்பாப்பிலவு மக்களின் காணிகளுக்கு பதிலாக மாற்றுக் காணிகள் அல்லது நஷ்டஈட்டுத்தொகையே வழங்கப்படும் என இராணுவத்தினர் உறுதியாக கூறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். கேப்பாப்பிலவு மக்களின் காணியிலுள்ள முல்லைத்தீவு இராணுவ கட்டளைத் தலைமையகத்தை அகற்றி அந்த காணிகளை மக்களிடம் மீளக் கையளிப்பது தொடர்பாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) அரசாங்க அதிபர் மற்றும்...
கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழையினால் பல வீடுகள் சேதமடைந்துள்ளது. அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பொன்னகர், பாரதிபுரம், செல்வபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள வீடுகளே இவ்வாறு சேதமடைந்துள்ளதுடன், பயன்தரும் மரங்களும் சேதமடைந்துள்ளது. திடீரென மழையுடன் கூடிய பலத்த காற்று வீசியமையால் குறித்த பாதிப்பை மக்கள் எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வீடுகள்...
கடல் நீரை நன்னீர் ஆக்கும் திட்டத்தால் மீன் வளங்கள் அதிகரிக்குமே தவிர மீன் வளங்கள் அழியாது என இலங்கை கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள கடலடி ஆய்வுபிரிவான நராவின் தலைமை அதிகாரி கலாநிதி கே.அருளானந்தனம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , வடமராட்சி, மருதங்கேணி...
பாடசாலைகள் இருக்கும் இடத்திலிருந்து 500 மீற்றர் தூரத்துக்குள், புகைப்பொருட்களை விற்பனை செய்வதற்கும் தனி சிகரெட்டை விற்பனை செய்வதற்கும் தடைவிதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது” என, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். புகைத்தல் காரணமாக ஏற்படுகின்ற நோய்களுக்காக, அரசாங்கம் வருடாந்தம் 72 பில்லியன் ரூபாயைச்...
Z புள்ளிகளை அடுத்த மாதநடுப்பகுதியில் வெளியிட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் சில்வா தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்களில் 2016/2017 கல்வியாண்டுகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகவும் அவர் குறுப்பிட்டார். இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 29 ஆயிரம் மாணவர்களை இணைத்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் , எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் மாணவர்களை இணைத்துக்...
அன்பின் வெளிப்பாடான முத்தம் விலைமதிப்பற்றது. எனவே, விலைமதிப்பற்ற முத்தத்தை மூலதனமாக வைத்து, கிஸ் எப்.எம். வானொலி நிலையம் வித்தியாசமான போட்டி ஒன்றை நடத்தியது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், ஆஸ்டின் நகரின் பிரபலமான இந்த வானொலி நிலையம், ‘கிஸ் ஏ கியா’ என்ற பெயரில், பிரபல கியா கார் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ‘கியா ஆப்டிமா’ காரை...
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்காலை அண்டிய வட்டுவாகல் பகுதி ஸ்ரீலங்கா ஆயுதப்படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்க கோரி மக்களால் நேற்று 19-04-2017 ஆரம்பிக்கப்பட்டுள்ள தொடர்போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்டு ஆதரவு வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து கேப்பாபிலவு சென்று அங்க தொடர்ச்சியாக காணி விடுவிப்பிற்காகப் போராவரும்...
Loading posts...
All posts loaded
No more posts
