Ad Widget

வடக்கு, கிழக்கு வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு அடுத்த மாதம் தீர்வு

வடக்கு, கிழக்கில் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில், அவர்களுக்கு தொழில்வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் மே மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என அமைச்சரும் சுதந்திர கட்சியின் பட்டதாரி சங்கத்தின் தலைவருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்-

“வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக, ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய அரச நிறுவனங்களில் காணப்படும் வெற்றிடங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி இதுவரை 20 ஆயிரத்திற்கும் அதிகமான வெற்றிடங்கள் காணப்படுவதாக உத்தியோகப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைக்கு 11 ஆயிரம் பேர்வரையில் அரச நிறுவனங்களில் இணைத்துக் கொள்ள முடியும்.

வெற்றிடங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு பூரண வெற்றிடங்கள் இனங்காணப்பட்ட பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் ஆரம்பமாகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Posts