- Thursday
- May 14th, 2026
இனவழிப்பு நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தமிழ் மக்கள் பேரவை தலைமையேற்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்... எதிர்வரும் மே 18ஆம் நாள் தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனவழிப்பின் 8ஆவது ஆண்டு நினைவுநாளாகும். இவ் இனவழிப்பு நாளை நினைவு கூர...
இலங்கையில், இசையமைப்பாளர் இளையராஜா பங்கேற்கும் இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் அவரது இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று, தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. இந்தப் போராட்டம் நாளை (14) நடைபெறும் என்று, இது குறித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகம், வடக்கு மண்டல அமைப்பாளர் கரு அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது....
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமான மே 18ஆம் திகதி, டெங்கு ஒழிப்பு எனும் போர்வையில் வீடு வீடாக சென்று பொலிஸாரும், இராணுவத்தினரும் எமது தமிழ் மக்களை அச்சுறுவதை அனுமதிக்க முடியாது என வட. மாகாண உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். மே மாதம் 18ஆம் திகதி மத்திய அரசினால் டெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில்...
வட மாகாண சபையின் கோரிக்கையை புறந்தள்ளி மத்திய அரசாங்கத்தினால் வடக்கில் 6 ஆயிரம் பொருத்து வீடுகள் கட்டப்படுவதற்கு, வட மாகாண சபை எதிர்ப்பு வெளியிடவுள்ளதாக, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை (12) முதலமைச்சர் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், “வடக்கு மாகாண மக்களுக்கு என 6 ஆயிரம் பொருத்து...
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று சனிக்கிழமை 83வது நாளாகவும் தீர்வின்றி தொடர்கிறது. கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த பெப்ரவரி 20 ஆம் திகதி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு போராட்டமே...
அவுஸ்திரேலியாவுக்கான வீசாக் கட்டணம் எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு திணைக்களத்தினால் புதிய வீசா கட்டணம் தொடர்பான பட்டியல் அறிவிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது. கடந்த 2017ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி அறிவிக்கப்பட்ட 2017/18 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு...
இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பானது மிகவும் ஆரோக்கியமான வகையில் இடம்பெற்றுள்ளது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினர்....
ஈழத்தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் இரண்டாம் நாள் அஞ்சலி நிகழ்வுகள் வரமராட்சி, பொலிகண்டி- ஊறணி பிரதேசத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. 1985ஆம் ஆண்டு இராணுவத்தினரின் சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டு, குண்டு வீசி படுகொலை செய்யப்பட்ட 50இற்கும் மேற்பட்ட பொதுமக்களின் நினைவாக இன்றைய அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. மே 12ஆம் திகதிமுதல் எதிர்வரும் 18ஆம் திகதிவரை முள்ளிவாய்க்கால்...
இலங்கைக்கான இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு, நேற்றுமுன்தினம் மாலை வருகை தந்த, இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்றுமாலை 6மணியளவில் கட்டுநாயக்கவில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன்,...
உலகளாவிய ரீதியில் மிகவும் மோசமானதொரு இணையத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரிட்டன், ஸ்பெய்ன், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளின் முன்னணி நிறுவனங்களின் இணையச் சேவைகள் மீது இந்தத் தாக்குதல் நடந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகிவருகின்றன. இவையெல்லாம் தனித்தனி தாக்குதல்களா அல்லது ஒன்றோடொன்று தொடர்புடையவையா என்பது தெளிவாகவில்லை. பிரிட்டனின் தேசிய...
தமிழ் மக்கள் வேதனையிலுள்ள நிலையில், இன அழிப்பிற்கு துணை போனவர்களுடன் இணைந்து அரசாங்கம் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றது என வட. மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றம் சாட்டியுள்ளார். முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த தமிழ் மக்களுக்கான நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான நேற்ற (வெள்ளிக்கிழமை) செம்மணி மண்ணில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே...
ஊர்காவற்றுறை கர்ப்பிணி படுகொலை வழக்கு தொடர்பாக, இருவரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் ஆர்.சபேசன் முன்னிலையில் தெரிவித்துள்ளனர். குறித்த வழக்கு, வெள்ளிக்கிழமை (12) ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் ஆர்.சபேசன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, சந்தேக நபர்கள் இருவரும் மன்றில் முற்படுத்தப்பட்டனர். கடந்த மாதம் 26 ஆம் திகதி,...
தரப்படுத்தப்படாத, கட்டுப்படுத்தப்படாத நச்சுப் பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்களால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்படுவதால் பெற்றோர் இது குறித்து அவதானமாக இருக்குமாறு நுகர்வோர் உரிமைகள் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது வெளிநாடுகளில் இருந்து பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் விளையாட்டுப் பொருட்கள்,...
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை நிறைவு செய்து நேற்று மாலை 6.30 மணியளவில் நாடு திரும்பினார். நேற்று கொழும்பில் ஆரம்பமான ஐக்கியநாடுகள் வெசாக் வைபத்தில் கலந்துகொள்வதற்காக இந்திய பிரதமர் நேற்று முன்தினம் மாலை கொழும்பை வந்தடைந்தார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில்...
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நான் வேண்டாதவர் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார். இதனால் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடலுக்கு தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அவுஸ்திரேலியவின் சர்வதேச நீர் மையத்தின் அதிகாரிகளுடனான சந்திப்பின் பின்னர்,...
ஹட்டன்- நோர்வூட் விளையாட்டரங்கு அருகில் மதில்சுவர் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று (12) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி பயணித்த உலங்கு வானூர்தி நோர்வூட் மைதானத்தில் தரையிறங்கிய போது ஏற்பட்ட அதிக காற்று காரணமாக குறித்த மதில்சுவர் உடைந்து வீழ்ந்துள்ளது. காயமடைந்த பெண்மணி டிக்கோயா...
சய்டம் நிறுவனத்தை பாதுகாப்பதற்கு சுகாதார அமைச்சர் மேற்கொள்ளும் முயற்சிகளை டெங்கு ஒழிக்கும் நடவடிக்கைக்கு பயன்படுத்தாமை நாட்டினுள் அழிவு நிலையை தோற்றியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தொடர்ந்து கருத்து வௌியிட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், இலங்கை மருத்துவ சபையின் ஒழுங்குமுறைக்கு அடிபணியாமல் செயற்படும் சய்டம் நிறுவனத்தை...
எதிர்வரும் இரண்டு வருடங்களில் மலையக மக்களின் காணி மற்றும் வீட்டு பிரச்சினைகள் பெருமளவில் நிவர்த்தி செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்கரமசிங்க தெரிவித்தார் 7 பேர்ச் காணி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் அம்மக்களது வீட்டு பிரச்சினைகளுக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். பாரத பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் நிகழ்வு நேற்று (12)...
தென்மராட்சி வலயக் கல்விப் பணிமனையின் ஏற்பாட்டில் ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் 'தென்னவன்' வர்த்தகத் துறைக் கண்காட்சி இம்முறை சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் நேற்று வெள்ளிக்கிழமை (12.05.2017) ஆரம்பமாகியுள்ளது. இக்கண்காட்சியை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். மாணவர்களிடையே சுயதொழில் மீதான நாட்டத்தை ஏற்படுத்தும் வகையிலும், சுயதொழில் உற்பத்திகளின் சந்தைப்படுத்தலை...
காங்கேசன்துறை கடலில் வீசப்பட்டிருந்த நிலையில் 9 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடற்படையினர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் கடலில் மிதந்து கொண்டிருந்த நிலையில், குறித்த பொதி மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி இலங்கை மதிப்பீட்டில் 9 கோடி ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது. குறித்த ஹெரோயின் பொதியை வடக்கு...
Loading posts...
All posts loaded
No more posts
