- Sunday
- July 27th, 2025

தெல்லிப்பளை மற்றும் அச்சுவேலி பொலிஸாரால் மாவீரர் நாள் நினைவேந்தலுக்குத் தடை கோரிய விண்ணப்பம் மல்லாகம் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மாவீரர் நினைவேந்தலை தடை செய்யக் கோரி கடந்த வெள்ளியன்று மல்லாகம் நீதிமன்றத்தில் மானிப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று (21) வழங்கப்படவுள்ளது. மேலும் நினைவேந்தலுக்குத் தடை கோரிய வல்வெட்டித்துறை பொலிஸாரின் கோரிக்கை கடந்த...

இலங்கையின் முதலாவது திருமணமாகாத அழகு ராணியாக காரைதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் காரைதீவைச் சேர்ந்த நிவேதிகா இராசையா என்ற பெண்ணே மிஸ் யுனிவர்ஸ் தமிழ் 2023 பட்டம் வென்றுள்ளார். இலங்கையில் முதன்முதலாக கனேடிய அமைப்பொன்று இந்த போட்டியை மூன்று மாதங்களாக நடத்தியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற இந்த தெரிவில் முதல் சுற்றில் 120...

தங்க நகை அணியாததால் பெண்ணொருவரை கொள்ளையர்கள் தாக்கிவிட்டுச் செற்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுழிபுரம் பகுதியிலேயே நேற்று(19) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று ”தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயம் ஒன்றில் வழிபாட்டை முடித்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த குறித்த பெண்ணை கொள்ளையர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இந்நிலையில் வீதியில் யாரும் அற்றவேளை குறித்த பெண்ணை...

மாவீரர் நாள் நிகழ்வுகளில் விடுதலைப்புலிகளின் சின்னங்கள், அவர்களின் அடையாளர்கள் எவற்றையும் பயன்படுத்தக் கூடாது என கிளிநொச்சி பொலிஸார் அறிவுறுத்தியதாக தமிழ்த்தேசிய இளைஞர் பேரவையின் தலைவர் வ. நகுலன் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (19) கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு தானும் தமிழ்த்தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளரமான ச. கீதனும் அழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது எனத் தெரிவித்த அவர்,...

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை சந்தியில் இருந்து 100 மீற்றர்கள் தூரத்தில் உள்ள புதர் ஒன்றினுள் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரது சடலம் நேற்றையதினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்றுமுன்தினம் (18.11.2023) மீட்க்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் ஆனைக்கோட்டை - ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி சேகரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கடந்த 14ஆம் திகதி...

மாவீரர் வாரம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஞாயிற்றுக்கிழமை (19) கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக துப்பரவாக்கல் பணிகள் முன்னெடுக்கப்பட்டது. இந்த சிரமதான பணிகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து மேற்கொண்டனர்.

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் ஆட்டோ சாரதி ஒருவர் மீது தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி அச்சுறுத்தல் விடுத்ததுடன் தாக்குதலும் நடத்தியுள்ளனர்.குறித்த சம்பவம் பலாலி வீதியில், திருநெல்வேலி நொதேன் வைத்தியசாலை அருகில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. தாக்குதல் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்றபோதும் பொலிஸாரும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில்...

புட்டு புரைக்கேறியதால் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் வீட்டில் புட்டு உண்டுகொண்டிருந்தவேளை திடீரென அவருக்கு புரைக்கேறியுள்ளதாகவும், இதனையடுத்து தனக்கு நெஞ்சு அடைப்பதாக அவர் தெரிவித்தவாறே மயங்கிவிழுந்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு...

2023 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (16) இரவு வௌியாகி இருந்தன. www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு சென்று பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு பரீட்சைக்கு 332,949 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர், அவர்களில் 50,664 பேர் வெட்டுப்புள்ளிகளில் சித்தியடைந்துள்ளனர். அத்துடன் புலமைப்பரிசில் பரீட்சையின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும்...

யாழ். நகரத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய நான்கு உணவகங்கள் பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் சீல் வைக்கப்பட்டுள்ளன. யாழ் மாநகர சபையின் வண்ணார்பண்ணை பகுதி பொது சுகாதார பரிசோதகர் தி. கிருபன் தலைமையிலான குழுவினரால் கே.கே.எஸ் வீதி, மற்றும் இராமநாதன் வீதியில் உள்ள உணவகங்கள், பேக்கரி என்பன திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. ஏற்கனவே பல தடவைகள்...

லியோனிட் விண்கல் மழையின் உச்சத்தை இலங்கையர்களும் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையர்கள் நாளை (18.11.2023) மற்றும் நாளை மறுதினம் இதனை காண முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் பிரிவின் வானியலாளர் ஜானக அதாசூரிய தெரிவித்துள்ளார். அதற்கமைய, இந்த இரண்டு நாட்களிலும் அதிகாலை 2.00 மணிக்குப் பிறகு, கிழக்கு அடிவானத்தில் இந்த விண்கல் மழை தென்பட...

வடமாகாணத்தில் ஊழியர் சேமலாப நிதியம் பெறும் பெறுவோரது பிள்ளைகள் கடந்த 2022 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றி உயர்கல்வியை தொடரமுடியாது இருப்பின் அவர்கள் தேசிய தொழில் தகைமை சான்றிதழ் கற்கை நெறியை தொடர ரூபாய் 25,000 வழங்கப்படும் என” வடமாகாண பிரதம செயலர் சமன்பந்துலசேன தெரிவித்துள்ளார். இன்று காலை சாவகச்சேரி நகரசபை மண்டபத்தில்,...

முல்லைத்தீவு நெட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டியன்குளம் பகுதியல் தனியார் வகுப்பு நடத்தி வரும் ஆசிரியரொருவர் ஆண்மாணவர்களுடன் நீண்டகாலமாக ஓரின பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் பாண்டியன்குளம் பிரதேசத்தில் கணிதபாடத்தில் சிறப்புதேர்ச்சி பெற்ற ஆசிரியர் மாணவர்கள் மத்தியில் கணிதபாடம் கற்பிப்பதில் சிறப்பான பெயர் பெற்றுள்ளார். இந்த நிலையில்...

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வட மாகாணத்தில் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகளவான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் பிற்பகல்...

நாட்டில் உள்ள 22 மில்லியன் மக்களுக்கும் இழப்பீடு வழங்குவதற்கு தேவையான பணம் ராஜபக்ச குடும்பத்தினரிடம் இருப்பதாக தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் உரிய...

தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ஆம் திகதி தமிழ்மக்களால் அனுஸ்டிக்கப்படவுள்ளது. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த தமது உறவுகளை நினைந்து வருடம் தோறும் கார்த்திகை 27 மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் அனுஸ்டிக்கப்படுவது வழமை, அந்த...

சிறுவர்களின் திறன் மேம்பாடு, பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தல் போன்ற செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் முன்வர வேண்டும் என வடமாகாண ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதிய பிரதிநிதிகளுக்கும், வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸுக்கும் இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மாணவர்களின் கற்றல்...

சீரற்ற காலநிலை காரனமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 15 குடும்பங்களை சேர்ந்த 47 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அத்தோடு சீரற்ற காலநிலையால் 8 வீடுகள் பகுதியளவில் சேதமாக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் சொகுசு பேரூந்துகளில் பயணம் செய்பவர்களை இலக்கு வைத்து கொள்ளைக் கும்பலொன்று தமது கைவரிசைகளைக் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகளை விழிப்பாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

மூளைக் காய்ச்சல் காரணமாக நேற்று செவ்வாய்க்கிழமை (14) யாழ்ப்பாணத்தில் கிராம சேவகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் உடுப்பிட்டி வடக்கு ஜே/353 கிராம சேவகர் பிரிவில் கடமையாற்றி வந்தவர். குமாரசாமி வீதி, புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த குமாரன் குகதாசன் (வயது 48) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,...

All posts loaded
No more posts