அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல்: சிவாஜிலிங்கம் எச்சரிக்கை

வடக்கு மாகாண முதலமைச்சர் நிதியத்தினை வழங்காவிட்டால், ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமரது செயலகத்தினை முடக்கி முற்றுகைப் போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதுடன், அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வோம் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த சந்திப்பில் அவர் மேலும்...

ஏழு இந்திய மீனவர்கள் கைது!

கச்சதீவு பகுதியை அண்மித்த நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ஏழு இந்திய மீனவர்கள் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஏழு இந்திய மீனவர்களுடன் இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு கடற்படையினரால் பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் யாழ். கடற்தொழில் நீரியல்...
Ad Widget

ஐநா குழு தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்தது!

இலங்கைக்கு ஐந்து நாள் பயணமாக வருகை தந்துள்ள ஐநாவின் மனித உரிமைகளுக்கும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்குமான சிறப்பு பிரதிநிதி பென் எமர்ஸன் நேற்று புதன்கிழமை மாலை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையிலான நீதிபதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பயங்கரவாதத் தடைச்சட்ட நடைமுறையில் மனித உரிமை நிலைமைகள் எவ்வாறு இருக்கின்றது என்பதை நேரடியாகக் கண்டறிவதற்காகவே...

யாழ்ப்பாணத்தில் உலக தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் 13 ஆவது சர்வதேச மாநாடு

இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்னனின் கோரிக்கைக்கு அமைவாக உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் 13 ஆவது சர்வதேச மாநாடானது இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் நடாத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த உலக தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராஜசூரியன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும்...

வடக்கு, கிழக்கைக் கண்காணிக்க மகாநாயக்க தேரர்கள் தீர்மானம்?

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய்வதற்கு, அஸ்கிரி மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்கள் தீர்மானித்துள்ளனர். இதற்காக, பௌத்த பிக்குமார்கள் அடங்கிய குழுவொன்று, குறித்த மாகாணங்களுக்கான விஜயத்தை மேற்கொள்ள எதிர்ப்பார்த்திருப்பதாக, அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் சாஸ்த்ரபதி பேராசிரியர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார். இந்த பிக்குமார்களின் விஜயத்தின் போது, காடழிப்பு தொடர்பில் விசேட...

அநுராதபுரம் இராணுவ முகாமில் ஆயுதங்கள் மாயம்

அநுராதபுரம், கலத்தேவ பகுதியில் அமைந்துள்ள இராணுவத்தின் கவசப் படைப்பிரிவிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலையிலிருந்து, ஆயுதங்கள் சில மாயமாகியுள்ள நிலையில், இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த முகாம் அதிகாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, அநுராதபுரம் பொலிஸ் தலைமையகத்தின் குற்ற விசாரணைப் பிரிவினர் மற்றும் பொலிஸ் மோப்பநாய்ப் பிரிவினர் இணைந்து, இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை, குறித்த முகாமின்...

உணவு பொதி செய்யும் பொலித்தீன், ரெஜிபோர்ம் என்பனவற்றுக்கு தடை!

உணவை பொதி செய்வதற்காக பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்றும் ரெஜிபோர்ம் என்பனவற்றை உடன் அமுலுக்கு வரும் வகையில், தடை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.பொலிஸ்ரயின் மூலப்பொருட்களாக பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களை பொதிசெய்வதற்கான பெட்டி, பிளாஸ்டிக் பீங்காண் கோப்பைகள் மற்றும்...

ஒரு வருட பயிற்சியுடன் பட்டதாரிகளுக்கு தொழில்!

பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே, இதற்கான அங்கீகாரம் கிடைத்தது. மாவட்ட மட்டத்தில், ஒரு வருட பயிற்சிக் காலத்தை அடிப்படையாகக் கொண்டு, முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் இந்த வேலை வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரவையில் இதற்கான முன்மொழிவினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்தார்....

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பழிவாங்குவதற்காகவே அந்த அறிவிப்பு! : பா.அரியநேத்திரன்

“தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பழிவாங்குவதற்காகவே தான் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகக் கூறி வருகின்றார். இதன் மூலம் கிழக்கு மாகாணசபைக்கு பெரும்பான்மையாகத் த.தே.கூலிருந்து எவரும் தெரிவு செய்யப்படக்கூடாது என்ற வக்கிரப் போக்கு மாத்திரமே கோடிட்டுக் காட்டப்படுகின்றது” என, இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத்தொகுதி தலைவர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்....

எதிர்காலத்தில் ஆசிரியர் உதவியாளர்கள் பதவிக்கான நியமனம் வழங்கப்படாது

எதிர்காலத்தில் ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைக்கப்படுகின்ற போது எந்த காரணம் கொண்டும் ஆசிரியர் உதவியாளர்கள் என்ற ஒரு பதவிக்காக நியமனம் வழங்கப்படமாட்டாது என கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். பெருந்தோட்டங்களை அண்மித்த தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கான உதவி ஆசிரியர்கள் 113...

சுமந்திரனை கொலை செய்ய முயற்சி: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சித்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களின் விளக்கமறியல் வரும் 26 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு, கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் முன்னிலையில் நேற்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த, சந்தேக நபர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள...

வடமராட்சி ஊடாக யாழ்ப்பாணத்திற்கு குடிநீர்!

யாழ்.வடமராட்சி கடலேரி நீர் வளத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் யாழ்ப்பாண மக்களுக்கு குடிநீரை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான கயந்த கருணாதிலக இதனைத் தெரிவித்தார். இதற்கான அமைச்சரவை பத்திரத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ளார். தேசிய...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் புலிகளின் பங்களிப்பு இருந்தது: சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களால் இயன்றளவு பங்களிப்புக்களை செய்திருக்கின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி கிளையினருடனான சந்திப்பு நேற்று (புதன்கிழமை) கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் கலந்து கொண்டு, கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு...

முல்லைத்தீவில் தென்னிலங்கை மீனவர்களுக்கே முன்னுரிமை: எ.மரியராசா குற்றச்சாட்டு

முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னிலங்கை மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டும் சட்டவிரோத தொழில்கள் அனைத்திற்கும் மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்களம் உறுதுணையாக இருக்கின்றது என வடமாகாண கடற்றொழிலாளர் இணையகத்தின் பொருளாளரும், முல்லைத் தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாசத்தின் முன்னாள் தலைவருமான எ.மரியராசா குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டமூலம் தொடர்பாக நேற்று (புதன்கிழமை) யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

எதிர்காலத்தில் கிளிநொச்சி முக்கியம் ஒரு மாவட்டமாக திகழும்: சம்பந்தன்

கிளிநொச்சி மாவட்டம் எதிர்காலத்தில் ஓர் முக்கியம் இடம்பெற்ற மாவட்டமாக திகழும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி வட்டக்கச்சி மத்திய கல்லூரி வைர விழாவும், வருடாந்த பரிசளிப்பு விழாவும் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சியில் பாரிய தொழில் பயிற்சி...

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு மூன்று வருடத்திற்குள் தீர்வு: சுவாமிநாதன்

இன்னும் மூன்று வருடத்திற்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு கிடைத்துவிடுமென சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். யாழ்.காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரியில் புனரமைக்கப்பட்ட கட்டடத்தை நேற்று (புதன்கிழமை) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது, அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களாக இருந்து சமூதாயத்திற்கு கடமை செய்ய வேண்டும்....

வடக்கு கிழக்கில் காலூன்ற தென்னிலங்கை கட்சிகள் முயற்சி! : செல்வம் எம்.பி

தென்னிலங்கை கட்சிகள் இன்று வடக்கு – கிழக்கில் காலூன்றி தமது கட்சியின் வளர்ச்சியை எதிர்பார்த்து காத்திருக்கின்ற நிலையில், தமிழ் தலைமைகள் வேறுபாடுகளை கலைந்து ஒற்றுமையுடன் செயற்படுவது அவசியமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். தற்கால அரசியல் நிலைமைகள் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்....

காணாமல் போனவர்கள் விடயத்தில் நாங்கள் கடுமையாக நிற்போம்!: கிளிநொச்சியில் சம்மந்தன்

காணாமல் போனவர்கள் விடயத்தில் நாங்கள் இனி அரசுடன் கடுமையாக நிற்போம், எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயம் மற்றும் மக்களின் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் நாங்கள் எல்லோரும் கடவுளை கூம்பிடுவோம் எனவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர் கட்சி தலைவருமான இரா. சம்மந்தன் தெரிவித்துள்ளார் கிளிநொச்சிக்கு இன்று புதன் கிழமை பயணம் செய்த அவர் கிளிநொச்சி கந்தசுவாமி...

கிளிநொச்சி தமிழரசுக்கட்சி உறுப்பினர்களை எதிர்க்கட்சித் தலைவர் சந்தித்தார்

கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பொன்று கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது. கொள்கைபரப்புச் செயலாளர் வேளமாளிதன் தலைமையில் ஆரம்பமான இக் கலந்துரையாடலில் கிளிநொச்சியின் அரசியல் மற்றும் அபிவிருத்தி சம்பந்தமான பல்வேறு கருத்துக்கள் கலந்துரையாடப்பட்டன. இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், மாகாணசபை உறுப்பினர்கள் கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள்...

புலித்தொப்பி வழக்கு; சந்தேகநபர்கள் விடுவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குரிய இலட்சினை பொறிக்கப்பட்ட தொப்பியொன்றை, இலண்டனுக்கு அனுப்புவதற்கான முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், 15 மாதச் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த, இராணுவத்தின் முன்னாள் வீரர் உள்ளிட்ட மூவரை, சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம், இன்று (12) விடுவித்தது. இது தொடர்பான வழக்கு, கொழும்பு மேலதிக...
Loading posts...

All posts loaded

No more posts