வடக்கு, கிழக்கைக் கண்காணிக்க மகாநாயக்க தேரர்கள் தீர்மானம்?

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய்வதற்கு, அஸ்கிரி மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதற்காக, பௌத்த பிக்குமார்கள் அடங்கிய குழுவொன்று, குறித்த மாகாணங்களுக்கான விஜயத்தை மேற்கொள்ள எதிர்ப்பார்த்திருப்பதாக, அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் சாஸ்த்ரபதி பேராசிரியர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த பிக்குமார்களின் விஜயத்தின் போது, காடழிப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அரசாங்கத்துக்கு அறிவிக்கப்பட்ட நிலையிலேயே, இந்த விஜயத்தை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாகவும், தம்மானந்த தேரர் மேலும் கூறியுள்ளார்.

Related Posts