- Wednesday
- May 20th, 2026
வவுனியா போகஸ்வெல பிரதேசத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவருக்கு, வவுனியா மேல் நீதிமன்றம் 27 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பாக, மதவாச்சி மாமா என அழைக்கப்படும் முத்துபண்டாகே செனரத் அநுர சாந்த சரத்குமார என்பவருக்கு,...
யாழ். மாவட்டத்தில் கடமையாற்றும் அனைத்துப் பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் உத்தரவுக்கமையவே பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கட்டுப்படுத்தும் நோக்குடனும், நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் திருவிழாவையும் முன்னிட்டே பொலிஸாரின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டிருக்கலாம் என...
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள போதிலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். யாழ் பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) சிவில் சமூகத்தினருடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம்...
மேற்கத்திய நாடுகள் தெரிவிப்பது போன்று வடக்கில் இராணுவ முகாம்களை அகற்ற முடியாது என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். மேலும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட புனர்வாழ்வு சரியானதா என்பது தொடர்பிலும் ஆராய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் இவ்வாறு...
கூட்டுப் பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு ட்ரயல் அட்பார் தீர்ப்பாயம் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகின்றது. இந்த விசாரணைகள் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது. வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலசிங்கம் சசி மகேந்திரன் தலைமையில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் மற்றும்...
கிளிநொச்சி நகரத்தில் இயங்குகின்ற இணையத் தள நிலையங்களை நாடுகின்ற சிறுவர்கள் தொடர்பாக பெற்றோர்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகளினால் அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. 2010ம் ஆண்டின் பின்னர் கிளிநொச்சி நகரத்திலே பல இணையத் தள நிலையங்கள் இயங்குகின்றன. இவ் இணையத் தள நிலையங்களை நோக்கி சிறுவர்கள் கூடுதலாக செல்வதாகவும் இதன் காரணமாக பெற்றோர்கள் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்டச்...
கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் இரண்டு சந்தேகநபர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். 20 வயது மற்றும் 22 வயதுடைய இரண்டு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்தவாரம் கொக்குவில் பகுதியில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸார் மீது ஆவாகுழுவினைச் சேர்ந்த...
கிளிநொச்சியில் தனியார் பேரூந்து ஒன்றும் பிக்கப் ரக வாகனம் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி தெரேசா ஆலயம் முன்பாக நேற்று (திங்கட்கிழமை) மாலை இந்த விபத்து நேர்ந்துள்ளது. தெரேசா ஆலயத்திற்கு முன்பாக வீதியினை கடக்க முற்பட்ட துவிச்சக்கர வண்டி ஒன்றினால் கிளிநொச்சி டிப்போ சந்தியிலிருந்து...
“இன்று பலரும், நுண் நிதிக் கடன்களைப் பெற்று, வீட்டில் தொலைக்காட்சிகளையும் டிஸ் அன்டனாக்களையும் பொருத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனை விட, வீட்டுக்கொரு வடிகட்டும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களைப் பொருத்துவதன்மூலம், சுத்தமான குடிநீரைப் பருகமுடியும்” என்று, வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். வவுனியா தாலிக்குளம் அ.த.க பாடசாலையில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை, மாணவர்களின்...
ஊடகவியலாளர்களின் தொழில்வான்மையை மேம்படுத்தும் நோக்கில் அமுல்படுத்தப்படும் மாத்திய அருண என்ற கடன் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஊடக உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக உயர்ந்த பட்சம் மூன்று இலட்சம் ரூபா வரை வட்டியின்றி கடன் வழங்கப்படவுள்ளது. இதேவேளை தம்மிடம் காணப்படும் ஊடக உபகரணங்களை திருத்துவதற்காக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரையிலான கடனை 50 சதவீத...
இலங்கை உற்பத்திகளுக்கு ஜேர்மனியிலும், ஜேர்மன் உற்பத்திகளுக்கு இலங்கையிலும் சிறந்த கிராக்கி நிலவுவதாக ஜேர்மன் தூதுவர் ஜோன் ரொவாட தெரிவித்தார். எதிர்காலத்தில் வடமாகாணத்திலும் பயிற்சி நிலையம் ஒன்றை அமைப்பதற்கு ஜேர்மன் எதிர்பார்த்துள்ளதாகவும் தூதுவர் தெரிவித்தார். ஜேர்மன் இலங்கையில் பயிற்சி நிலையம் ஒன்றை நடத்தி வருகிள்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை வர்த்தக சமூகம் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் ஒன்றில் ஜேர்மன்...
கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை என்பனவற்றுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை என்பனவற்றுக்கான சகல ஏற்பாடுகள் குறித்து பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவிக்கையில், உயர்தர பரீட்சை எட்டாம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் மாதம் இரண்டாம் திகதி...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் தலைமறைவாகியுள்ள உதவிப்பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜனைக் கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார். யாழ்.பொலிஸ் தலைமையத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”வித்தியாவின் படுகொலை வழக்கில் சிரேஸ்ட பிரதிப்...
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் நிரந்தரமாகத் தீர்க்கப்பட்டால் மட்டுமே நாட்டில் சமாதானம் ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தேசிய நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”உண்மையான சமாதானம் ஏற்பட வேண்டுமாக...
நிலவிவரும் வறட்சியான காலநிலை காரணமாக குடிநீர்ப் பிரச்சினைகளை எதிர்நோக்குபவர்கள் 117 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்தல் விடுத்துள்ளது. நாட்டின் பல பிரதேசங்களில் குடிநீர் விநியோகிக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், எதாவது குறைபாடுகள் காணப்படின் மேற்குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்துக்கு அறியத்தருமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடகப்...
யாழ். குடாநாட்டில் இராணுவம், கடற்படை, விமானப்படையினருடன் பொலிஸ் அதிரடிப் படையினரையும் இணைத்து இறுக்கமான பாதுகாப்பு கட்டமைப்பை செயற்படுத்தவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலைத் தொடர்ந்து அங்கு விஜயம் மேற்கொண்டிருந்த பொலிஸ்மா அதிபர் ஊடகங்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்படி தெரிவித்துள்ளார்....
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதல் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் இன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ஹபீர் ஹாசிம் மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ‘வாள்வெட்டு...
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதானவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ அடிப்படையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. பயங்கரவாத தடைச் சட்டம் அல்லது அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்படாத தடுத்து வைக்கப்பட்டுள்ள 84 பேரின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. லயன் எயார் விமானத்தை சுட்டு வீழ்த்தியமை, எம்.ஐ.-24 ரக ஹெலிகொப்டரை சுட்டு வீழ்த்தியமை,...
ஊர்காவற்றுறைக் கடற்பரப்பில், கடந்த 28ஆம் திகதி கரை ஒதுங்கிய ஆணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்டவர், யாழ்ப்பாணம் - நாவாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த ஆனந்தராசா யெயந்தன் (44 வயது) என, அவரது மனைவி யெயந்தன் திருச்செல்வி என்பவரால் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், அதற்கு யாழ்ப்பாணம் வைத்தியாசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்...
நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபருக்கு, அவரது மனைவி டெஸ்டர் (மின்சாரம் பரிசோதிக்கும் கருவி) ஒன்றை, பொதிக்குள் வைத்துக் கொடுக்க முயன்ற வேளை, சிறைச்சாலைக் காவலர்களால் அது கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ். சிறைச்சாலையில், தனிச் சிறைக்கூடத்திலேயே சந்தேகநபர், தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சந்தேகநபரின் மனைவி, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவருக்கு உடைகளை வழங்கப் பொதி செய்து, சிறைச்சாலை...
Loading posts...
All posts loaded
No more posts
