இதயசுத்தியுடன் கூடிய அதிகாரப் பங்கீடு வேண்டும் : சம்பந்தன்

நாடு பிரிக்கப்படுவதை விரும்பவில்லை எனவும், மாறாக நாட்டில் வாழும் அனைத்து சிறுபான்மை இனத்தவரும் சுயகௌரவத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு என கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் நாட்டுக்கு வருகை தந்துள்ள ஐக்கிய அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலக தூதுவர் அலிஸ் வெல்ஸ்க்கும் இடையிலான...

இலங்கைத் தமிழர்களின் தீர்வில் இந்தியா உறுதி: சுஷ்மா சுவராஜ்

இலங்கைத் தமிழர்களின் நிரந்தரத் தீர்விற்கு இந்தியா உதவுவதுடன், அவர்களை இந்தியா ஒருபோதும் கைவிடாது என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு அலரி மாளிகையில் நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்தபோதே சுஷ்மா சுவராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது...
Ad Widget

வல்வெட்டித்துறையில் மீனவரை காணவில்லை

யாழ். வல்வெட்டித்துறைக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மீனவரின் உறவினர்களால் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த நிலையில் காணாமல் போன மீனவரைத் தேடி சக மீனவர்கள் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் இந்த...

தமிழ் பெண்களை அவதானிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறை!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் (எல்.ரீ.ரீ.ஈ) புலனாய்வுத் துறை என்ற பெயரில், அந்த இயக்கத்தின் இலட்சினையுடன் அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள், வவுனியாவில் உள்ள வீதிகள் சிலவற்றில், வீசப்பட்டு கிடந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. வவுனியா, குருமன்காடு பிரதேசத்தில் உள்ள வீதிகள் மற்றும் சிறி டெலோ கட்சியின் காரியாலயத்துக்கு அண்மையில், வீசப்பட்டுக் கிடந்த நிலையிலேயே அந்தத் துண்டுப் பிரசுரங்களை...

யாழில் புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதில் 53 வயதுடைய வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், புங்கன்குளம் புகையிரத நிலையத்தில் இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ஆசீர்வாதப்பர் வீதிப் பகுதியைச் சேர்ந்த ஆர். அருள்நேசன் (வயது 53) என்ற வயோதிபரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் யாழ்....

அதிரடிப்படை பாதுகாப்பின் மத்தியில் கிரிக்கெட் போட்டி!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று(வியாழக்கிழமை) இடம்பெறவுள்ள நிலையில், மைதானத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ள போட்டியின் போது 1,000 பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. 5 போட்டிகள் கொண்ட போட்டியில் 3 போட்டிகள் நிறைவடைந்த...

யாழில் சிங்கள பாடசாலையினை மீண்டும் ஆரம்பிக்குமாறு கோரிக்கை!

யாழில் 512ஆவது படைமுகாம் அமைந்துள்ள சிங்கள பாடசாலையினை மீளவும் ஆரம்பிக்க நடவடிக்கைமேற்கொள்ள வேண்டுமென சர்வமத குழுவின் செயலாளர் வணபிதா டானியல் டிக்சன், அஸ்கிரிய மகாநாயக்க தேரரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழிற்கு விஜயம் மேற்கொண்ட அஸ்கிரிய மகாநாயக்க தேரர் யாழ்.மாவட்ட செயலகத்தில் சர்வமத குழுவினரை சந்தித்து கலந்துரையாடினார். அந்த சந்திப்பின் போது, இந்துமத குருமார்கள், ஓய்வூதியம் மற்றும்...

அனைத்தையும் மனித உரிமை மீறல்களாக கருதமுடியாது: ராஜித

யுத்தத்தின்போது இடம்பெற்ற அனைத்து சம்பவங்களையும் மனித உரிமை மீறல்களாக கருதமுடியாது என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருப்பதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது, பிறேஸிலில் இலங்கைக்கான...

வடக்கு மாகாண பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனம்!

வடக்கு மாகாணத்தில் கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பரீட்சைப் பெறுபேறுகள் தற்பொழுது வெளியாகியுள்ளன. வடக்கு மாகாணத்தின் பொதுச்சேவை ஆணைக்குழுவால் நடத்தப்பட்ட இந்தப் பரீட்சையில் வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் மட்டும் பரீட்சைகளுக்காக உள்ளீர்க்கப்பட்டிருந்தனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும். தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு அவர்களுக்கான நியமனக் கடிதங்களை மிக விரைவில் வழக்கப்படவுள்ளதாக...

உரிமையை பற்றி பேசும் அரசியல்வாதிகள் உயிர் வாழ்வதை பற்றி சிந்திக்க வேண்டும்

எப்பொழுதும் உரிமை உரிமை என பாலர் பாடசாலை முதல் எல்லா மேடைகளிலும் பேசுகின்ற அரசியல்வாதிகள் மக்களின் வறுமையை நீக்கி அவர்கள் மூன்று வேளை சாப்பிடுவதற்கும் வழி செய்ய வேண்டும் என கிளிநொச்சி பொன்னகர் மத்தி, அக்கராயன் கரிதாஸ் குடியிருப்பு மக்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் உரிமையை பெற்றுத் தருகின்ற நேரத்தில் நாங்கள் உயிரோடு இருப்போமா என்ற நிலையில்...

வடமாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 30 வருட காலமாக நிலவிய மோதல் காரணமாக வடமாகாணத்தில் கடும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவியது. இதில் சிங்கள மொழி ஆசிரியர் பற்றாக்குறை பாரிய பிரச்சினையாக அமைந்திருந்தது. இந்த பிரச்சினைக்கு தீர்வாக மோதல் நிலவிய காலப்பகுதியில் இருந்து வடமாகாணத்தில் சிங்கள மொழியில் பாடசாலைகளில்...

வடமாகாண வைத்தியசாலைகள் அபிவிருத்தி

வடக்கு மாகாணத்தில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. வடமாகாணத்தில் உள்ள மக்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்குதல் மற்றும் பொதுமக்கள் மீள குடியமர்த்தப்படும் பிரதேசங்களில் சுகாதார அடிப்படை வசதிகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளது. இதற்கமைவாக இந்த பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட வைத்தியாசாலைகளை அபிவிருத்திசெய்வதற்கான திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கமைவாக நெதர்லாந்து அரசாங்கத்தின்...

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நாட்படினது பல மாவட்டங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இன்று (புதன்கிழமை) இடம்பெற்றன. முல்லைத்தீவு நகரில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம், சிவனேசன், ரவிகரன், புவனேஸ்வரன் உள்ளிட்ட அரசியல்வாதிகளும் பங்கு கொண்டிருந்தனர். நகர மத்தியில் இருந்து மாவட்ட செயலகம் முன்பாக...

காணாமல்போன உறவுகளால் ஐ.நா. செயலாளருக்கு மகஜர் கைளிப்பு!

சர்வதேச காணாமல்போனோர் தினத்தில் இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் ஐ.நா. செயலாளருக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. யாழ்.நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பமான குறித்த பேரணி யாழ்.ஐ.நா.அலுவலகத்தினைச் சென்றடைந்து அங்கு ஐ.நா.செயலாளர் அன்ரோனியோ குட்டரஸிற்கான மகஜர் கையளிக்கப்பட்டது. வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் சிவில் சமூகங்கள் இணைந்து மேற்படி ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தன.

இலங்கை அணி மீது தண்ணீர்ப் போத்தல் வீசியோரை கைது செய்ய நடவடிக்கை!!!

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையில், கண்டி-பல்லேகல சர்வதேச மைதானத்தில், கடந்த 27ஆம் திகதியன்று இடம்பெற்ற போட்டியின் போது, இலங்கை கிரிக்கெட் அணியினரை இலக்குவைத்துத் தண்ணீர்ப் போத்தல்களை வீசிய, இரசிகர்களைத் தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளனர். பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்பின் பேரிலேயே, இந்த சம்பவம் தொடர்பிலான விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை அணியின் வீரர்களை நோக்கி, தண்ணீர்ப்...

சுவிஸ்குமாரின் பரபரப்பு வாக்குமூலம்: சிக்கலில் ஸ்ரீகஜன்

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான பிரதான சந்தேகநபர் எனக் கருதப்படும் சுவிஸ்குமாரை கொழும்பிற்கு தப்பிச்செல்ல யாழ். உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன் உதவினார் என ஏற்கனவே குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையில், ஸ்ரீகஜன் குறித்து பல முக்கிய விடயங்களை நீதிமன்றத்தில் சுவிஸ்குமார் தெரிவித்துள்ளார். யாழ்.மேல் நீதிமன்றத்தில் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் முன்னிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரண்டாவது...

பிரதேச செயலாளர்கள் இருவருக்கு திடீர் இடமாற்றம்!

கிளிநொச்சி மாவட்டத்தின் இரு பிரதேச செயலாளர்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. கரைச்சி பிரதேச செயலாளர் கோ.நாகேஸ்வரன் கண்டாவளைக்கும், கண்டாவளை பிரதேச செயலாளர் த.முகுந்தன் கரைச்சிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேவைக் காலத்தைக் கருத்திற்கொண்டு, பொதுச் சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைவாக உள்வாட்டலுவல்கள் அமைச்சினால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

யாழ். சர்வதேச திரைப்பட விழா எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பம்!

யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்படவிழா எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. குறித்த திரைப்பட விழா யாழ்ப்பாணம் மெஜஸ்டிக் திரையரங்கில் எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் திகதி முதல் 20ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. மூன்றாவது தடவையாக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள இந்த சர்வதேச திரைப்படவிழாவில் 25 நாடுகளைச் சேர்ந்த 100 திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளதுடன் குறுந்திரைப்படங்களும் ஆவணப்படங்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இளம் படைப்பாளர்களையும்,...

இலங்கை மக்களை மலேரியா தாக்கும் அச்சுறுத்தல் உள்ளது!

இலங்கையில் உள்ள மக்கள் அனைவரும் மறைமுகமாக மலேரியா தாக்கத்திற்கு உள்ளாகக்கூடிய சந்தர்ப்பம் மிக மிக அதிகமாக உள்ளதாக மலேரியா நோய் தடுப்பு பிரிவின் மன்னார் மாவட்ட பிராந்திய வைத்திய அதிகாரி டாக்டர் கே.அரவிந்தன் தெரிவித்துள்ளார். மலேரியா நுளம்பின் தாக்கம் மற்றும் அதன் பரவல் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில்...

வித்தியா கொலை வழக்கின் தீர்ப்பு செப்டெம்பரில்!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டெம்பர் மாத இறுதிக்குள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த வழக்கின் விசாரணை நேற்று (செவ்வாய்க்கிழமை) யாழ்.நீதிமன்ற கட்டடத் தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய...
Loading posts...

All posts loaded

No more posts