- Monday
- August 24th, 2026
ஊடகவியலாளா் நவரத்தினம் பரமேஸ்வரன்(55) மீது நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்கட்சி தலைவராக இருந்த அமிர்தலிங்கத்தின் மகன்( வெளிநாட்டு பிரஜை) மற்றும் மாணிப்பாய் பிரதேசத்தை சேர்ந்த கௌரிகாந்தன் ஆகியோரே தன் மீது தாக்குதலை மேற்கொண்டதாக பரமேஸ்வரன் யாழ் பொலீஸ் நிலையத்தின் முறைபாடு பதிவு செய்துள்ளாா். இது தொடர்பில் ஊடகவியலாளா் பரமேஸ்வரனிடம் தொடர்பு கொண்டு கேட்ட...
வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள், தமது உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தாத ஒரு போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கத்தின் 32ஆவது ஆண்டு நினைவு தினம், தாவடியில் அமைந்துள்ள அவரது நினைவுத் தூபியில் நேற்று (03) இடம்பெற்றது. இந்த நிகழ்வில்...
பொலிகண்டி ஒற்றுமை விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டி, பொலிகண்டி ஒற்றுமை விளையாட்டுக் கழக கடற்கரை மைதானத்தில் நேற்று (03) மாலை நடைபெற்றது. இதன்போதே வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “விளையாட்டுப் போட்டிகள், அதில் பங்குபற்றுபவர்களின் சோர்வைப் போக்கி உற்சாகத்தையும் சுறுசுறுப்பையும் ஏற்படுத்துவது மட்டுமன்றி, பார்வையாளர்களாக வீற்றிருக்கின்றவர்களுக்கும்...
வவுனியா குருமன்காட்டு சந்திக்கு அருகாமையில் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள வலுவூட்டல் நிலையமொன்றிற்குள் வாள்களுடன் புகுந்த குழுவொன்று கடையை சூறையாடியதுடன் விற்பனை நிலைய உரிமையாளரையும் வெட்டிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம்தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்றிரவு 10.20 மணியளவில் வவுனியா குருமன்காடு புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள உடல் வலுவூட்டல் நிலையமொன்றிற்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அதன்...
அனைத்து மாகாண சபைகளினதும் தேர்தலை ஒரே தினத்தில் நடத்துவதற்கான அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தம் இன்று வட மாகாண சபையில் சமர்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பான விவாதம் இன்று (04) மேற்கொள்ளப்படும் என வட மாகாண சபை தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். 20 வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக வடக்கு மாகாண சபையின் ஆதரவை பெற்றுக் கொடுப்பது...
இலங்கையின் இராணுவத்தளபதிகள் மற்றும் இராணுவத்தினரின் விடயங்களில் சர்வதேசம் தலையிட முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 66ஆவது ஆண்டு நிறைவு விழா பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது முன்னாள் இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக...
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவினது பதிவு நீதிமன்றத்தையும், நீதிமன்றத்தின் நடவடிக்கைகளையும் அவமதிப்பதாக அமைவதால், முதலில் சட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். “சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உடன் பதவி விலக வேண்டும்” என தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் தளத்தில்...
மறைந்த முன்னாள் எதிர்கட்சி தலைவர் அ.அமிர்தலிங்கத்தின் 90வது பிறந்தநாள் நினைவுப் பேருரையும் ‘இலட்சிய இதயங்களோடு’ நூல் வெளியீடும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் மாலை 4 மணிக்கு ஆரம்பமாகியது. இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் கலந்து கொண்டு மங்கள...
ஒலிபெருக்கிச் சத்தத்தைக் குறைக்க சொன்ன குடும்பத்தாரை மாங்குளம் பொலிஸார் அச்சுறுத்தியதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் செல்வபுரம் முறிகண்டியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள இந்து ஆலயம் ஒன்றில் வழிபாட்டிற்கு பொலிசாரிடம் ஒலிபெருக்கி அனுமதி கோரியிருந்தனர். குறித்த அனுமதியினால் குறித்த பகுதியில் அதிக ஒலி காணப்பட்டது. ஒலிபெருக்கியின் சத்தத்தினை...
வட மாகாண முதலமைச்சர் பக்கச்சார்பாகவும், சட்டத்திற்கு எதிராகவும் செயற்பட்டு வருவதாக வடமாகாண முன்னாள் மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் தெரிவித்தார். மன்னாரில் அவரது அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வடமாகாண முதலமைச்சர் மற்றும்...
65000 பொருத்து விடுகளுக்கு எதிரான மனுவை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார். வடக்கு கிழக்கில் 65000 பொருத்து வீடுகளை அமைப்பது குறித்து அமைச்சர் சுவாமிநாதனுக்கும் பிரான்ஸ் நிறுவனத்திற்கும் இடையிலான உடன்படிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த மனுவையே சுமந்திரன் வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார். பிரான்ஸ் நிறுவனத்துடன்...
உயர்தரப் பரீட்சை வினாத்தாளை வெளியில் கசியவிட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவனுக்கு பரீட்சை எழுதுவதற்கு வாழ்நாள் தடை விதித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். தற்போது இடம்பெற்றுவரும் கல்விப்பொதுத்தர உயர்தரப் பரீட்சையில் இரசாயனவியல் பரீட்சையின் வினாத்தாள் வெளியானமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவனுக்கே குறித்த வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,...
மியன்மாரில் இடம்பெற்று வரும் இனப் படுகொலையை உடனே நிறுத்தக்கோரி யாழ்ப்பாணத்தில் கண்டனப் ஆர்ப்பாட்டம் இன்று காலை இடம்பெற்றது. மியன்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து யாழ் மையப் பேருந்து நிலையத்தில் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாகாணசபை உறுப்பினர்கள் , இளைஞர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
பருத்தித்துறையில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை 3 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீ அணைப்பு படையினர் நீண்ட போராட்டத்தின் பின்னர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். எனினும் தீயினால் விற்பனை நிலையம் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் விற்பனை நிலையத்திற்கு திட்டமிட்டு...
‘எம் அரசியல் தீர்வின் அடிப்படைகளும் சிறிலங்காவின் உத்தேச அரசியலமைப்பு முயற்சியும் ‘ தமிழ் மக்கள் பேரவையின் கருத்துப்பகிர்வும் பிரகடனமும். செப்டம்பர் 5 – காலை 9 மணி; யாழ் வீரசிங்கம் மண்டபம் தமிழ் மக்கள் பேரவையானது, துறைசார் நிபுணர்களின் உதவியுடன் சர்வதேச நாடுகளின் அரசியல் அனுபவங்களிற்கேற்ப ,தமிழர்களின் இருப்பை பாதுகாக்கும் அரசியற்கோரிக்கைகளையும் ஒரு தீர்வு யோசனையாக...
தன்னை அமைச்சர் பதவியிலிருந்து, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நீக்கியமையை எதிர்த்து, வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரன் மனுத்தாக்கல் செய்துள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றிலேயே அவர் மனுத் தாக்கல் செய்துள்ளார். தன்னைப் பதவி நீக்கியதற்கு எதிராகத் தடை விதிக்கும்படியும், வடமாகாண சபையின் உறுப்பினர்களான குணசீலன் மற்றும் சிவநேசன் ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டமைக்கு எதிராகத் தடை விதிக்குமாறும் அந்த...
முல்லைத்தீவு - துணுக்காயில் இருந்து கிளிநொச்சி அக்கராயன் வழியாக யாழ்ப்பாணம் வரை நடைபெற்ற பஸ் சேவைகள் கடந்த ஆறாண்டுகளாக நடைபெறாததன் காரணமாக போக்குவரத்தில் ஈடுபடுகின்ற மக்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். துணுக்காய், உயிலங்குளம், ஆலங்குளம், தென்னியங்குளம், கோட்டைக்கட்டியகுளம், அம்பலப்பெருமாள்குளம், அக்கராயன், ஸ்கந்தபுரம், முக்கொம்பன், பூநகரி வழியாக யாழ்ப்பாணத்திற்கும் ஸ்கந்தபுரம் கிளிநொச்சி வழியாக யாழ்ப்பாணத்திற்கும் பஸ் சேவைகள் நடைபெற்றன....
இலங்கை தமிழ் பெண்மணி கெத்சி சண்முகத்திற்கு ஆசியாவின் நோபல் பரிசாக கருதப்படும் மகசேசே விருது வழங்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் கலாச்சார நிலையத்தில் இந்த விழா இடம்பெற்றது. இதன்போது இலங்கையின் உளவள ஆலோசகர் கெத்சி சண்முகம் தமக்கான விருதை பெற்றுக்கொண்டார். பிலிப்பைன்ஸ் நாட்டின் புகழ்பெற்ற அதிபரான ரமோன் மகசேசே நினைவாக ஆண்டு தோறும் ஒவ்வொரு துறையிலும் சிறந்து செயல்படுவோருக்கு...
உணவுப் பொதியொன்றின் விலை இன்று முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக, அகில இலங்கை உணவக உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. 20 மைக்ரோன் அல்லது அதனை விட குறைந்த அளவுடைய பொலித்தீன் பாவனை அண்மையில் அரசாங்கத்தால் தடைவிதிக்கப்பட்டதை தொடர்ந்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த தடை சட்டம் நேற்று முதல் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகலாவிய முஸ்லிம்கள் புனித ஹஜ் பெருநாளை இன்று கொண்டாடுகின்றனர். இதனை முன்னிட்டு நாட்டின் அனைத்து பாகங்களிலும் உள்ள பள்ளிவாசல்களில் விசட பெருநாள் தொழுகைகள் இடம்பெறுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஹஜ் பெருநாள் சமத்துவத்தின் அடிபடையிலான உயரிய சமூக நீதிக்கு...
Loading posts...
All posts loaded
No more posts
