கன்னி உரையில் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார் வடமாகாணசபை உறுப்பினர் ஜெயசேகரம்!

அறிவுரீதியாகவும், இராஜதந்திர ரீதியிலும் தமிழ் மக்களுக்கான தீர்வு நோக்கி எமது தலைவர்கள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். அதிலே நாம் வெற்றியடைவோம். ஆனால், அபவிருத்தியை நோக்கிப் பயணிப்பதையும், தன்னிறைவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற இரண்டும் வடமாகாணசபையினால் சாதிக்கமுடியும். ஆனால் நாம் அதனைச் சாதிக்கத் தவறிவிட்டோம் என வடமாகாண சபை உறுப்பினராகப் பதவி ஏற்றுள்ள ஜெயசேகரம் தனது கன்னி உரையில் தெரிவித்துள்ளார்....

கிளிநொச்சியில் சீமெந்து தொழிற்சாலை? : வடமாகாணசபையில் முரண்பட்ட விவாதம்

கிளிநொச்சி- பொன்னார்வெளி கிராமத்தில் கடற்படையின் ஒத்துழைப்புடன் சீமெந்து தொழிற்சாலை அமைக்கப்படுவதாக மாகாண மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் முன்வைத்த குற்றச்சாட்டை எதிர்கட்சி உறுப்பினர் வி.தவநாதன் மறுத்துள்ளார். கட ந்த ஆட்சியில் எதிர்த்தவர்கள் இந்த ஆட்சியில் ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
வடமாகாணசபையின் 101வது அமர்வு நேற்றைய தினம் நடைபெற்றிருந்தது. இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தில்...
Ad Widget

25 தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் நியமனம்

வடமாகாண பொது சேவை ஆணைக்குழுவினால் நேர்முக தேர்வுமூலம் தெரிவுசெய்யப்பட்ட 25 தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. வடமாகாண ஆளுநர் றெஜிநோல்ட் குரேயினால் வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதனிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வட மாகாண உயர் அதிகாரிகள், தெரிவு செய்யப்பட்ட தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

குப்பையில் இருந்து மின்சாரத்தை உற்பத்திசெய்யும் நடவடிக்கை ஆரம்பம்!

குப்பையில் இருந்து மின்சாரத்தை உற்பத்திசெய்யும் இலங்கையின் முதலாவது இரண்டு கருத்திட்டங்களின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று (வியாழக்கிழமை) கெரவலபிடியவில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. கழிவுகளை முறையாக அகற்றாத காரணத்தினால் கடந்த காலத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி இருந்தது. இதற்கு நிலையான தீர்வை வழங்கும் நோக்கிலேயே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குப்பைகளை வளமாக மாற்றி மாற்றுத்...

நாட்டில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது : யாழில் மங்கள

அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரை ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைக்கு உட்படுத்தியுள்ளமை நாட்டின் ஜனநாயகத்தை மேலும் உறுதிபடுத்துவதாக அமைந்துள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இலங்கை சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகள், மூன்று தசாப்தங்களின் பின்னர் நேற்று (வியாழக்கிழமை) காங்கேசன்துறையில் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்....

தமிழ் வளர்க்கும் “கலைத்திரள்” : மலையத்திலிருந்து மாணவர்களுக்கான கவிதை கட்டுரை போட்டி

ஊவா வெல்லச பல்கலைக் கழக மாணவர்கள் நாடாத்தும் "மலைத்தென்றல்" கலை கலாச்சார நிகழ்வின் ஓர் அங்கமாக "கலைத்திரள்" - அகில இலங்கை ரீதியிலான பாடசாலை மாணவர்களுக்கான கவிதை கட்டுரை போட்டிகளை நாடாத்துகின்றனர். பாடசாலை ரீதியில் நடைபெறும் இந்தப்போட்டிகளின் ஊடாக தெரிவுசெய்யப்படும் மாணவர்களுக்கான பதக்கங்கள், பரிசில்கள் மற்றும் சானிற்தழ்கள் மலைத்தென்றல் நிகழ்வில் வழங்கப்படும். கட்டுரைப் போட்டிக்கான தலைப்புக்கள்...

ஆவா குழுவினருக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளதா என விரிவான விசாரணை!!

வடக்கில் செயற்பட்டு வரும் ஆவா குழுவினருக்கும், விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவினருக்குமிடையில் தொடர்புள்ளதாக என்பது தொடர்பாக விரிவான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஆவா குழுவினருக்கு நிதியளிக்கும் தனிநபர்களோ அல்லது குழுக்களையோ கண்டறிவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் விடுதலைப் புலிகளின் புலனாய்வு அமைப்பினர் இக்குழுவினரோடு தொடர்பிலுள்ளார்களா...

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு!

கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வட மத்திய ஆகிய நான்கு மாகாணங்களில் இன்று(10) மாலை மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஏனைய பிரதேசங்களிலும் வானத்தில் மேகக் கூட்டம் நிறைந்து காணப்படும். சப்ரகமுவ, மத்திய, மேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள், காலி, மாத்தறை மாவட்டங்களில் மாலை 2 மணிக்கு பின்னர் இடியுடன்...

செஞ்சோலை சிறுவர் இல்ல பிள்ளைகள் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் சந்திப்பு

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸவரனை செஞ்சோலை சிறுவர் இல்ல பிள்ளைகள் சந்தித்து கலந்துரையாடினார்கள். இதன்போது செஞ்சோலைப் பிள்ளைகளின் தேவைகள் குறித்து வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸவ்ரன் கேட்டறிந்து கொண்டார். வடமாகாண சபையின் 101வது அமர்வைப் பார்வையிட இன்றையதினம் வந்த சிறுவர்கள் முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடியதுடன், தமக்கான தேவைகள் தொடர்பிலும் கோரிக்கைகளை முன்வைத்தனர். கல்வி உதவிகள் மற்றும் கல்வி கற்பதற்கான...

வடக்கில் மயானங்களுக்கு அருகில் குடியிருப்புக்களை அமைக்காதிருக்க நடவடிக்கை

வட மாகாணத்தில் மயானங்களை சுற்றி 200 மீற்றர் சுற்றுவட்டத்திற்குள் குடியிருப்புகள் உருவாக்கப்பட கூடாது. அதற்கான நடவடிக்கைகளை மாகாண உள்ளூராட்சி அமைச்சு எடுக்க வேண்டும் என மாகாண சபையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 வடமாகாண சபையின் 101வது அமர்வு இன்று பேரவை செயலக சபா மண்டபத்தில் நடைபெற்ற போது, நீர்வேலி பகுதியில் மயனாம் ஒன்றை அண்மித்திருக்கும் குடியிருப்பாளர்கள், மாகாண...

வடக்கில் மீண்டும் காலூன்றியது இலங்கை சுங்கம்

ஆயுதப் போராட்டத்தால் வடக்கில் முடக்கப்பட்டிருந்த இலங்கை சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகள், மூன்று தசாப்தங்களின் பின்னர் இன்று (வியாழக்கிழமை) மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடக்கின் பல இடங்களில் அதன் உப அலுவலகங்கள் திறந்துவைக்கப்படவுள்ள நிலையில், இன்றைய தினம் காங்கேசன்துறையில் அதன் முதலாவது உப அலுவலகம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர பிரதம அதிதியாக...

சாரதிகள் தவறிழைப்பின் 25,000 ரூபா அபராதம் விதிக்க அனுமதி

வாகன சாரதிகள் இழைக்கும் தவறுகளுக்காக குறைந்த பட்சம் 25,000 ரூபா வரையான அபராதத்தை விதிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதன்படி, மதுபோதையில் வாகனம் செலுத்துதல், உரிய வாகன அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதி இல்லாமல் வாகனம் செலுத்துதல், ரயில் கடவைகளை கவனயீனமாக கடத்தல் போன்ற தவறுகளுக்காகவே இவ்வாறு அபராதம் விதிக்க அனுமதி கிட்டியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...

தெற்கிற்கு தப்பியோடும் ‘ஆவா’ தலைவர்கள்!

வடக்கில் நடத்தப்பட்டு வரும் அதிரடி தேடுதல் நடவடிக்கைக்கு பின்னர், ஆவா குழுவின் முக்கிய தலைவர்கள் தெற்கு பகுதிகளுக்கு தப்பியோடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மைய காலமாக யாழில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள், வாள்வெட்டுச் சம்பவங்கள் என்பன பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசேட அதிரடிப்படையினரின் துணையுடன் வடக்கில் பொலிஸார் சல்லடை போட்டு தேடி வருகின்றனர். இந்நிலையில், அங்கிருந்து...

மாணவி வித்தியா படுகொலை வழக்கு : விஜயகலா மகேஸ்வரனிடம் வாக்குமூலம்!!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. வித்தியா கொலை வழங்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிக்குமாரை காவல்துறையில் பொறுப்பளிக்காது தப்பவிட்டமை தொடர்பில் விஜயகலாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீண்டநேரம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நேற்று பிற்பகல் 3 மணியளவில் அவர்...

வேலை கோரும் பட்டதாரிகள் வடமாகாண ஆளுனரை சந்தித்து அவசர வேண்டுகோள்!

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் வடமாகாண ஆளுனரை சந்தித்து அவசர வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளனர். அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கான வெற்றிடங்களை நிரப்பும் முகமாக அரச வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டு உள்ளது. அதில் 35 வயதிற்கு உட்பட பட்டதாரிகளே நியமனத்தில் உள்வாங்க படுவார்கள் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனால் பலர் பாதிக்கப்பட உள்ளதாக தெரிவித்து 35 வயதிற்கு மேற்பட்ட வேலை...

“மலிங்கவை விட வேகமாக பந்து வீச முடியும்” ; மார்தட்டும் தமிழன்

கிளிநொச்சி – புலோப்பளை பகுதியில் வசித்துவரும் செபஸ்ரியாம்பிள்ளை விஜயராஜ் என்ற இளம் கிரிக்கெட் வீரர் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளரான லசித் மலிங்கவை விட வேகமாக பந்து வீச முடியும் என சவால் விடுத்துள்ளார். கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியில் கல்வி பயின்ற விஜயராஜ் பாடசாலை காலங்களிலேயே மாகாண மட்ட கிரிக்கெட் போட்டிகளில் பிரகாசித்த கிரிக்கெட் வீரர்...

வெளியானது ஆவா தலைவன் விக்டரின் வாக்கு மூலம் : ”நானும் மனோஜும் இணைந்தே இரு பொலிஸாரை வெட்டினோம்”

ஆவா குழுவில் இருந்து என்னுடன் முரண்பட்டுக்கொண்டு வேறு குழுவை உருவாக்கச் சென்ற ' தனு ரொக்' என்பவரை வெட்டவே நாம் சென்றோம். அவரது வீட்டில் அவர் இருக்கவில்லை. இதனால் நாம் மீள திரும்ப முட்பட்ட போது, பொலிஸார் இருவர் மோட்டார் சைக்கிளில் வருவதை அவதானித்தோம். அவர்கள் எம்மை மடக்கிப் பிடிக்கவே வருவதாக எண்ணியே அவர்களை பின்...

யாழில் ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது

சுன்­னாகம் பகு­தியில் கடந்த 2016 ஆம் ஆண்டு சிவில் உடையில் கட­மையில் இருந்த உளவுத் துறை பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் இருவர் மீது வாள் வெட்டுத் தாக்­கு­தலை நடத்­திய குழு­வி­னரில் இருந்­த­தாக கூறப்­படும் மூன்று ஆவா குழு சந்­தேக நபர்­களை சுன்­னாகம் பொலிஸார் நேற்று கைது செய்­தனர். கொக்­குவில் பகு­தியில் பொலிஸார் இரு­வரை வெட்டி காய­ப்படுத்­தி­யமை தொடர்பில்...

தமிழ் மொழியில் எமது பிள்ளைகள் கல்வி கற்பது எமக்கு மகிழ்ச்சி!! : மன்னார் சிங்கள கம்மான மக்கள்

‘எமது பிள்ளைகள் பல அயலிலுள்ள கிராமங்களுக்குச் சென்று தமிழ் மொழியிலேயே கல்வி கற்கின்றனர். இது எமக்கு மகிழ்ச்சி தருகின்ற போதும் நாங்கள் வாழும் கிராமத்தில் பாலர் பாடசாலை ஒன்றையும் அமைத்துத் தாருங்கள்` என மன்னார் மறிச்சுக்கட்டிப் பிரதேச சிங்கள கம்மான மக்கள்அமைச்சர்களான ராஜித சேனாரத்ன மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அமைச்சர் ரிஷாட்...

ஆவா குழுவின் மற்றுமொரு உறுப்பினர் தெல்லிப்பளையில் கைது!!

வாள் வெட்டு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆவா குழுவின் மற்றுமொரு உறுப்பினர், கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. தெல்லிப்பளை பகுதியில் வைத்து நேற்று பொலிஸ் தீவிரவாத புலனாய்வுப் பிரிவினர் இவரைக் கைதுசெய்துள்ளனர். இவர் தற்போது யாழ் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. முன்னதாக, ஆவா குழுவின் தலைவர் எனக் கருதப்பட்டவர்...
Loading posts...

All posts loaded

No more posts