- Monday
- May 18th, 2026
எதிர்காலத்தில் தனியார் துறையில் அதிக வேலைவாய்ப்புக்களை உருவாக்க எதிர்ப்பார்க்கின்றோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தை வலுமிக்கதாக உருவாக்குவதே தமது நோக்கம். விரைவில் அதனை மேற்கொள்வோம் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அது போன்று பொருளாதாரத்தை வலுப்படுத்த...
பொலித்தீன்களை தடைசெய்யும் புதிய சட்டம் அமுல்படுத்தப்படவுள்ள நிலையில், அதற்கு மாற்றீடாக, உக்கக்கூடிய பொலித்தீன் வகையொன்று இனங்காணப்பட்டுள்ளதாக, மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. மாற்றீடாக அறிமுகப்படுத்தப்படும் புதிய பொலித்தீன் 100 நாட்களுக்குள் உக்கி அழியக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பொலித்தீனை நவம்பர் முதலாம் திகதியிலிருந்து விற்பனை நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என மத்திய சுற்றாடல் அதிகாரசபை...
ஜனாதிபதியுடனான சந்திப்புக்களின் போதும், பல்வேறு கடிதத் தொடர்புகள் மூலமாகவும் அரசியல் கைதிகளின் விடுதலையை வடமாகாண முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். தற்போது அரசியல் கைதிகள் தொடர்பான சில விபரங்களை வடமாகாண ஆளுநரிடம் முதலமைச்சர் கோரியிருக்கின்றார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான தொடர் நடவடிக்கைகளில் தான் ஈடுபடவுள்ளதாகவும் முதலமைச்சர் தன்னிடம் தெரிவித்தார் என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாண சபை...
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் அண்மையில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பிரதேசங்களில் ஒன்றான இந்திராபுரம் கிராமத்தில் நேற்று மாலை ஏற்பட்ட வெடி விபத்தின் போது பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் காயமடைந்துள்ளனர். கிளிநொச்சி பளை இந்திராபுரம் எனும் புதிதாக மீள் குடியேற்றம் செய்த இடத்தில் குப்பைக்கு தீ வைத்தபோது மர்மபொருள் வெடித்ததில் இருவரும் காயமடைந்துள்ளனா்....
வடக்கின் யுத்தத்தினால் கணவர்களை இழந்த பெண்களின் வாழ்வாதார உதவிகள் என்பது தற்போதைய அரசிலும் கட்டியேழுப்ப முடியாத நிலையில் இருந்து கொண்டு இருக்கின்றது. அதற்கான நடவடிக்கையினை மத்திய அரசின் மகளிர் அமைச்சு எடுக்க முன்வர வேண்டும் என்று மகளிர் விவகாரம், புனர்வாழ்வு அளித்தல் சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும்,தொழில் முனைவோரும், மேன்பாடும், வார்த்தகமும், வாணிபம்...
இலங்கையில் புதிய நீதி அமைச்சராக தலதா அத்துக்கோரள இன்று, வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். 54 வயதான தலதா அத்துக்கோரள இலங்கையில் முதலாவது பெண் நீதி அமைச்சராவார். அவர் தற்போது வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார். சட்டத்தரணியான இவர்...
அநுராபுர சிறைச்சாலையில் மூன்று அரசியல் கைதிகள் முன்னெடுத்த தொடர் உண்ணாவிரத போராட்டம் இன்றுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் அருட் தந்தை சக்திவேல் தெரிவித்தார். குறித்த மூன்று அரசியல் கைதிகளால் முன்னெடுக்கப்பட்டு வந்த இந்த உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்து இன்றும் 5 ஆவது நாளாக நடைப்பெற்று வந்த நிலையிலேயே...
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊற்றுபுலம் பகுதியில், இராணுவ வீரர்கள் இருவர் மீது வாள்வெட்டு நடத்தினர் என்ற சந்தேகத்தின் பேரில், அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என, கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில், இராணுவத்தில் சேவையாற்றி விடுமுறையில் சென்ற இருவரே, காயமடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இருவரில் ஒருவர், மேலதிக...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கை துரிதப்படுத்துமாறு கோரியும், அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமைக் காரியாலயத்திற்கு முன்னால் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தினை தேசிய மகளிர் வழக்கறிஞர்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரால், ‘இதுவா நல்லாட்சி’, ‘நீதியரசர் இளஞ்செழியனை சுட...
வன்னி இராச்சியத்தின் இறுதி மன்னனான பண்டாரவன்னியன் முல்லைத்தீவு கோட்டையை கைப்பற்றியதை நினைவு கூறும் 214 ஆவது ஆண்டு நினைவு தினம் வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது. குறித்த அனுஷ்டிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) காலை வவுனியாவில் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள அவரின் நினைவுத்தூபிக்கு அருகில் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, நினைவுத்தூபியினை நிறுவிய வவுனியா சட்டத்தரணி மு.சிற்றம்பலம் தலைமையில் மலர் மாலை...
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான திருத்தச் சட்ட மூலத்தில் அரச ஊழியர்களை பாதிக்கும் வகையிலான திருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுபவர்கள், தேர்தலுக்கு ஒரு வருட காலத்திற்குள் அரச சேவையில் ஈடுபட்டிருக்க முடியாதென உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டம் தொடர்பில் அரசாங்கம் முன்வைத்த திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது....
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி இடம்பெறவிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பொது அறிவு பாடத்துக்கான பரீட்சையை, 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்துவதற்கு, கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது என, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். எதிர்வரும் 2ஆம் திகதி, முஸ்லிம்கள் ஹஜ் பெருநாள் தினத்தை கொண்டாடுவதால், அன்று இடம்பெறவிருந்த மேற்குறிப்பிட்ட பாடத்துக்கான பரீட்சையைப் பிற்போடுமாறு,...
யாழ்ப்பாணம் சித்தங்கேணி பகுதியில் காணியொன்றில் உள்ள பாவனையற்ற கிணற்றுக்குள் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை அயலவர்களால் குறித்த சடலமானது கண்டுபிடிக்கப்படடுள்ளது. அருகில் இருக்கின்ற வீடுகளில் உள்ளவர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக தூர்வாடை வீசியதையடுத்து இது தொடர்பாக தேடிப்பார்த்துள்ளனர். இதன்போது குறித்த காணிக்குள் இருந்த பாவனையற்ற கிணற்றுக்குள் பெண்ணொருவரின் சடலம் இருப்பதும், அதிலிருந்தே துர்வாடை...
கிளிநொச்சி ஊற்றுப்புலத்தை சேர்ந்த இரண்டு தமிழ் இராணுவத்தினர் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இருவரினதும் இடது கைகளில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளதுடன், கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்த இராணுவ வீரர்களின் நிலமையில் கவலையில்லை என்றும், வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்ட நபர்களை...
யாழ்.பண்ணை குறுசடி தீவில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்ததுடன், சிறுமி உட்பட ஏனைய 5 பெண்களும் உயிருடன் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்.பண்ணை குறுசடி தீவில் அமைந்துள்ள அந்தோனியார் ஆலயத்திற்கு நேற்று (வியாழக்கிழமை) சென்ற வேளையிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இந்த அனர்த்தத்தில் சிக்குண்டு ரி. குயின்சன் (வயது...
காங்கேசன் துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் சுன்னாகம் பகுதியில் வைத்து தண்டவாளத்தில் நின்ற இளைஞன் மீது மோதியதில் குறித்த இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளான். குறித்த சம்பவம் நேற்று ( வியாழக்கிழமை) மாலை சுண்ணாகம் ரயில் நிலையத்திற்கு அண்மையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிசார் மேற்கொண்டு...
இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினையை தீர்க்க வித்தியாசமான ஒரு நடைமுறை பின்பற்றப்படும் என கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா தெரிவித்துள்ளார். கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற முதல் செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் இந்திய மீனவர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளை...
இலங்கையின் பொருளாதாரத்தின் வளர்ச்சி காணப்படுவதாக உலக வர்த்தக ஸ்தாபனம் தொவித்துள்ளது. மொத்தமாக 164 நாடுகளின் பொருளாதார அபிவிருத்தி பற்றி உலக வர்த்தக ஸ்தாபனம் கவனம் செலுத்தியிருந்தது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் கொடுக்கல் வாங்கல்கள் திருப்திகரமாக உள்ளதென ஸ்தாபனத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2016ஆம் ஆண்டில் தெளிவான வளர்ச்சி தென்படுவதை ஆய்வுகள் புலப்படுத்துவதாக...
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை எவ்வித நிபந்தனைகளும் இன்றி விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி, வடக்கு மாகாண சபையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 103வது அமர்வு இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகின்ற நிலையில், மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இக் கவனயீர்ப்பு போராட்டம்...
வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்கள் ஒன்றியத்தின் கிளிநொச்சி கிளை, நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.பி.நடராஜ் தலைமையில், கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. வடக்கு கிழக்கில் உள்ள மலையக சமூகத்தை ஒன்று திரட்டி, அவர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதே இவ்வமைப்பின் நோக்கம் என ஒன்றியத்தின் இணைப்பாளர்கள்...
Loading posts...
All posts loaded
No more posts
