வவுனியாவில் பண்டார வன்னியனின் நினைவு தினம் அனுஷ்டிப்பு!

வன்னி இராச்சியத்தின் இறுதி மன்னனான பண்டாரவன்னியன் முல்லைத்தீவு கோட்டையை கைப்பற்றியதை நினைவு கூறும் 214 ஆவது ஆண்டு நினைவு தினம் வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.

குறித்த அனுஷ்டிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) காலை வவுனியாவில் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள அவரின் நினைவுத்தூபிக்கு அருகில் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, நினைவுத்தூபியினை நிறுவிய வவுனியா சட்டத்தரணி மு.சிற்றம்பலம் தலைமையில் மலர் மாலை அணிவித்து ஞாபகார்த்த நினைவு அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோஹன புஸ்பகுமார, வட மாகாணசபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், ஜி.ரி.லிங்கநாதன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related Posts