- Wednesday
- August 26th, 2026
புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலைக்கு அருகில் கடற்படையின் பவல் வாகனம் மோதியதில் பாடசாலை சிறுமி சம்பவ இடத்தில் உயிரிழந்த சம்பவம் இன்று(24) காலை 7:30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஊர்காவற்துறை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவத்தில் உயிரிழந்த சிறுமி புங்குடுதீவு பகுதியினை சேர்ந்த திருவானந்தன் கேசனா வயது(09) என பொலிஸார் கூறினர். உயிரிழந்த இந்த சிறுமி தனது...
ஆணைக்கோட்டை வீதியில் வயோதிபப் பெண் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கொலை நடைபெற்ற இடத்தில் கண்டெக்கப்பட்ட தடயப்பொருட்கள் தொடர்பிலும் பாரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருட்டுச்சம்பவம் ஒன்றிற்க்காக இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸாரின் ஆரம்ப கட்ட...
நேற்று மாலை கரடிப்போக்கு பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிற்குள் வைத்து சிறுவன் ஒருவனை சிவில் உடையில் இருந்த சிறைக்காவலர்கள் இருவரும் சிறைக்காவலர்களது சீருடையில் இருந்த இருவரும் சரமாரியாக தாக்கியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கரடிப்போக்கு சந்தியில் நேற்று மாலை சிறைக்காவலர்கள் பயணித்த சிறைச்சாலைப் பேருந்தும் துவிச்சக்கரவண்டி ஒன்றும் விபத்துக்குள்ளாகி இருந்த நிலையில் துவிச்சக்கர வண்டியில்...
அரசாங்கத்தின் மந்தகதியிலான செயற்பாடுகள் தமிழ் மற்றும் சிங்கள மக்கள் மத்தியிலுள்ள கடும்போக்காளர்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல உந்துசக்தியாக அமைகின்றது என இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நேற்று மாலை இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் பிரிவுத் தலைவருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் இல்லத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத்...
வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், நேற்றயதினம் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுழற்சி முறையிலான இந்த உண்ணாவிரதப்போராட்டம் 334 ஆவது நாளாக தொடரும்நிலையில், சாகும்வரையிலான உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தாயகத்தில் கையளிக்கப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை...
கதிர்காமத்தில் பொலிஸாரின் ஆணையைமீறி பயணித்த மோட்டார் சைக்கிள் சாரதி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு காரணம் பொலிஸாருக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படாமையே என சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். கதிர்காமத்தில் அண்மையில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்த காரணத்தினால் அங்கு பதற்ற...
தொடரூந்து இயந்திர சாரதிகள் சங்கத்தினர் 4 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதனால், 10 தொடரூந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. ஒப்பந்த அடிப்படையில் சேவையாற்றும் தொடரூந்து இயந்திர சாரதிகளின் சேவை காலம் நீடிக்கப்படாமை மற்றும் புதிய தொடரூந்து இயந்திர சாரதிகள் இணைத்து கொள்ளப்படாமை உள்ளிட்ட 4 கோரிக்கைகளை முன்வைத்து தொடரூந்து இயந்திர சாரதிகள் சங்கத்தினர் நேற்று...
பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பதுளையிலுள்ள பாடசாலை அதிபர் ஒருவரை தனக்கு முன்னால் மண்டியிட்டு மன்னிப்புக் கோருமாறு நிர்ப்பந்தித்தமை தொடர்பில், குறித்த அதிபரால் முதலமைச்சருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டது. அதன்பின்னர் இன்று காலை சட்டத்தரணி சகிதம் பதுளை பொலிஸில் சரணடைந்த ஊவா முதல்வர், நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட...
மக்கள் பசியோடு இருக்கையில் கட்டடங்களைக் கட்டியெழுப்புவதாலும் உரிமைகள் பற்றிப் பேசுவதாலும் எந்தவொரு பிரயோசனமும் இல்லை என்று வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். “தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 2 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு...
வடக்கில் இனப்பரம்பலை மாற்றியமைக்க திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் : வடக்கு முதல்வர் குற்றச்சாட்டு
இனப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்குடன் வடக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். முதலமைச்சர் வாரந்தோறும் வழங்கிவரும் கேள்வி பதில் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாராந்த கேள்வி பதில் அறிக்கை வருமாறு, வாரத்திற்கொரு கேள்வி இவ்வாரம் கொழும்பில் இருந்து கிடைத்திருக்கும் கேள்விக்குப் பதில் தரப்படுகின்றது. கேள்வி – தமிழ்க்...
யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட 3 ஆம் வருட சிங்கள மாணவர்கள் 4 பேர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 4ஆம் வருட மாணவர்கள் இருவரைத் தாக்கிய குற்றச்சாட்டிலேயே அவர்கள் விளக்கமறியில் வைக்கப்பட்டனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட 4ஆம் வருட சிங்கள மாணவர்கள் இருவருக்கு 3ஆம் வருட சிங்கள மாணவர்கள் கடந்த...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின், யாழ்.மாநகர சபைத் தேர்தலுக்கான விஞ்ஞாபனம் நேற்று (திங்கட்கிழமை) பிற்பகல் வெளியிடப்பட்டது. வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில், நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. ‘சுத்தமான பசுமை மாநகரம்’ என்ற தொனிப்பொருளினாலான குறித்த தேர்தல் விஞ்ஞாபனத்தை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராஜா வெளியிட்டு வைக்க, தமிழ்...
காணாமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகள் விவகாரங்களில் அரசு மெத்தனமாக இருந்தாலும், தமிழ் மக்களின் எதிர்கால நன்மை கருதி நாங்கள் பொறுமை காக்கின்றோம் என புளொட் அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். வவுனியா திருநாவற்குளத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் எஸ்.காண்டீபனின் தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு...
தேர்தல் காலத்தில் பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கான பிணை விண்ணப்பங்கள் நிராகரிப்பட்டதுடன் தேர்தல் களத்தில் உள்ள வேட்பாளர்களும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால், அவர்களையும் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள ஒருவரின் பிணை மனு மீதான விசாரணை யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெற்ற போது...
பூநகரி- நாச்சிக்குடா வலப்பாடு என்ற இடத்தில் 12 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்று (திங்கட்கிழமை) விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்ட போதே யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இந்த உத்தரவை பிறப்பித்தார்....
கொழும்பில் உள்ள அமெரிக்க நிலையம் மறு அறிவத்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைநிரப்பு பிரேரணை நிறைவேற்றப்படாமை காரணமாக அமெரிக்க அரசாங்கம் முடங்கியுள்ளமையினாலேயே இந்த நிலையம் மூடப்பட்டுள்ளது. எனினும் கடவுச்சீட்டு மற்றும் வீசா சேவைகள், தூதரகத்தின் ஊடாக தொடர்ந்தும் இடம்பெறும் என...
இலங்கையின் பிரபல பாடகரும் நடிகருமான பொப்பிசைச் சக்கரவர்த்தி A .E .மனோகரன் காலமானார். நீண்ட காலமாக சென்னையில் வசித்து வந்த அவர் நேற்று இரவு 7.20 அளவில் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் பாடிய சுராங்கனி.. சுராங்கனி.. சுராங்கனிக மாலுகெனாவா… என்ற பாடல் இலங்கை, இந்திய ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது இந்திய தமிழ் சினிமாவில்...
இலங்கை அரசாங்கம் போதிய நிதியை வழங்காததால், வடக்கு மாகாண சபையின் பெரும்பாலான அபிவிருத்தித் திட்டங்கள் முடங்கிப் போனதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “2016ஆம் ஆண்டு வடக்கு மாகாணசபை 12,000 மில்லியன் ரூபாவைக் கோரியிருந்தது. ஆனால், மத்திய அரசாங்கம் 2,500 மில்லியன்...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு அமைவாக வடக்கு கிழக்கின் அபிவிருத்திக்கென சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டதே தவிர, தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டை போல சொந்தத் தேவைக்கு அந்த நிதி ஒதுக்கப்படவில்லையென தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கடந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்தமைக்காக, தன்னைத் தவிர கூட்டமைப்பின் ஏனைய...
நாட்டின் அரசியல்வாதிகளில் நூற்றிற்கு 50 சதவீதமானவர்கள் மக்களின் பணத்தை திருடுகின்றனர் என்றும், இதனால் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதில் இடர்பாடுகளை எதிர்கொள்வதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவடிவேம்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி தொடர்ந்து குறிப்பிடுகையில்- ”அபிவிருத்தி அடைந்த...
Loading posts...
All posts loaded
No more posts
