- Sunday
- May 17th, 2026
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான பிரசார சுவரொட்டிகளை ஒட்டினால், அவற்றிற்கு மேல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுவரொட்டி ஒட்டப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பில் சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடை விதித்துள்ளது. இந்நிலையில், இத்தடையை மீறி சுவரொட்டிகள் ஒட்டினால், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல் அடங்கிய சுவரொட்டி அவற்றிற்கு...
புளொட்டின் முன்னாள் உறுப்பினர் தங்கியிருந்த வீட்டிலிருந்து பயன்படுத்தக்க துப்பாக்கிகள், அவற்றுக்குப் பயன்படுத்தும் மகசின்கள்,ரவைகள் மற்றும் வாள்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். அவற்றைப் பதுக்கிவைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் புளொட்டின் முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டார் என்றும் பொலிஸார் கூறினர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள வீடொன்றிலிருந்தே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டன. அந்த வீட்டின்...
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வட, வட மத்திய கிழக்கு மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களிலேயே அதிக மழைவீழ்ச்சி காணப்படும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகர மேயர் வேட்பாளராக இம்மானுவேல் ஆர்னோல்ட் போட்டியிடவுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என இலங்கை தமிழரசு கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறும் வட்டாரங்களின் வேட்பாளர்களின்...
வடக்கு – கிழக்கில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுக்களைத் தயாரிக்கும் பணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது. வேட்பு மனுக்களைக் கையளிக்கும் இறுதி நாள் வரும் 21 ஆம் திகதி (வியாழக்கிழமை) நண்பகல் 12 மணியாகும். இந்த நிலையில் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான தமிழரசுக் கட்சி, புளொட் மற்றும் ரெலொ ஆகியவற்றின் உயர்மட்டத்தினர் நேற்றிரவு...
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான தேர்தலில் மூத்த ஊடகவியலாளரை என்.வித்தியாதரனை மேயர் வேட்பாளராக நிறுத்தி பொது அணி ஒன்றைக் களமிறக்கும் பேச்சுகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிய முடிகிறது. இந்தப் பொது அணியில் சமூக அமைப்புகள், தமிழ் கட்சிகள் சில, வர்த்தக சங்கங்கள் ஆகியன ஒன்றிணைந்துள்ளன எனவும், அவர்களின் ஆதரவுடனேயே வித்தியைக் களமிறக்க பேச்சுகள் இடம்பெறுகின்றன. தமிழர்...
கிளிநொச்சி-யாழ்ப்பாணம் வீதியில் ஆனையிறவு தட்டுவாங்கொட்டி பிரதேத்தில், திங்கட்கிழமை மாலை 6:40க்கு இடம்பெற்ற விபத்தில், இளைஞர்கள் இருவர் பலியாகியுள்ளனர். ஆனையிறவு, தட்டுவாங்கொட்டி பிரதேசத்தைச் சேர்ந்த சிங்கராசா செந்தில்நாதன் (வயது 28), யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த நல்லத்தம்பி துஷாந்தன் (வயது 36) ஆகிய இருவருமே இவ்வாறு பலியாகியுள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கையின் இறுதிக்கட்ட போரின் போது படையினரிடம் சரணடைந்தவர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிடுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இக்கோரிக்கையை விடுத்துள்ளனர். தமிழர் தாயகப் பகுதியில் யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் குறித்த உண்மையை வெளிப்படுத்துமாறு கோரி முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள், 300 நாட்களை கடந்துள்ளன. இந்நிலையில், இலங்கை...
உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதனை அறிவித்துள்ளார். உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பான வர்தமானி எதிர்வரும் 26 ஆம் திகதி வெளியாகும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இணைத்தால் கட்சியைவிட்டுத் தான் வெளியேறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் எச்சரித்துள்ளார். தமிழ் தேசிக் கூட்டமைப்பின் மத்திய குழுக் கூட்டத்திலேயே இந்த எச்சரிக்கையை அவர் முன்வைத்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான சமத்துவம், சமூக...
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதிக்குள் நுழைந்த வாள்வெட்டுக் குழுவினர், அப்பகுதி மக்களால் துரத்தித் துரத்தி தாக்கப்பட்டுள்ளனர். யாழ். மக்களை அண்மைய காலமாக அச்சுறுத்தி வரும் வாள்வெட்டுக் குழுவினர், நேற்று முன்தினம் (சனிக்கிழமை) வாள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சகிதம் கோண்டாவில் பகுதிக்குள் நுழைந்தனர். இதன்போது ஊர்மக்கள் ஒன்றிணைந்து வாள்வெட்டுக் குழுவினரை சரமாரியாக தாக்கி விரட்டியுள்ளனர். இதற்கு ஈடுகொடுக்க...
முல்லைத்தீவில் பரவி வரும் ஒருவகை காய்ச்சலால், ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 20 நாட்களுக்குள் இந்த உயிரிழப்புகள் சம்பவித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இக்காய்ச்சல் தொடர்பில் தீவிர ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.
யாழ்ப்பாணம் மாநகர சபை வேட்பாளராக, இலங்கை தமிழரசுக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இம்மானுவேல் ஆர்னோல்ட் போட்டியிடவுள்ளார். இதனையடுத்து தான் வகித்து வந்த மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகும் கடித்தை, கடந்த 14ஆம் திகதி வடக்கு மாகாண அவைத்தலைவரிடம் கையளித்துள்ளதாக கட்சியின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு மாகாணத்தின் ஒரேயொரு மாநகர சபையாக உள்ள யாழ். மாநகர...
கட்சிகளைப் பொருட்படுத்தாது தகுதியானவர்களுக்கு வாக்களிக்குமாறு, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். உங்கள் பகுதியை உள்ளன்புடன் நேசிக்கும் ஒருவரைத் தேர்ந்தெடுங்கள். அவருக்கு இருக்கும் தகுதி நேர்மையும் திறமையுமே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், அவர் ஊழலை வெறுப்பவராகவும் மக்களை நேசிப்பவராகவும் அவர் இருக்க வேண்டும் எனவும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார். மேலும், எந்தக் கட்சி என்பது முக்கியமல்ல,...
இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் இன்று அதிகாலை (உள்நாட்டு நேரம்) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இது ரிக்டர் அளவில் 6.5ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. ஜாவா சுமத்ரா தீவுக்கு மேற்கே கடலுக்கு அடியில் 91 கிலோ மீற்றர்...
யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த ஜெயந்தி சீவரத்தினம் (வயது 46) என்ற குடும்பப் பெண் கனடாவில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டார் என ரொரண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். "கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மல வேர்ன் பகுதியில் அந்தப் பெண் உடலில் கடுமையான காயங்களுடன் மல்வேர்ன் வீதியில்...
யாழ் மாவட்டத்திலுள்ள சகல உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செலுத்தியுள்ளது. சாவகச்சேரி நகரசபைக்கான வேட்புமனுவை கையளிப்பதற்கான காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் மாவட்டத்திலுள்ள ஏனைய பதினாறு சபைகளிற்குமான கட்டுப்பணத்தையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெள்ளிக்கிழமை செலுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை...
இலங்கை அரசாங்கம் உடனடியாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என தன்னிச்சையான தடுத்து வைத்தல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கை குழு வலியுறுத்தியுள்ளது. தன்னிச்சையான தடுத்து வைத்தல்கள் தொடர்பிலான ஐ.நாவின் மூவரடங்கிய தூதுக்குழு கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்திருந்தது. இந்த நிலையில் தமது விஜயம் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில்...
மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) மாகாண ஆளுனர் ரோஹித்த போகொல்லாகமவை சந்தித்து கலந்துரையாடினர். கடந்த முறை வழங்கப்பட்ட பட்டதாரிகளது ஆசிரியர் நியமனத்தின் போது இடம்பெற்றிருந்த முறைகேடுகள் குறித்தும், எஞ்சிய பட்டதாரிகளின் நிலை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த ஆளூனர்,...
ஒன்றிணைந்த வீதி முதலீட்டு திட்டம், யாழ் கிளிநொச்சி நீர் விநியோகத்திட்டம் என்பனவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான மூன்று ஒப்பந்தங்களை இலங்கை அரசாங்கமும், ஆசிய அபிவிருத்தி வங்கியும் கைச்சாத்திட்டுள்ளன. இதன் பெறுமதி 27 கோடி அமெரிக்க டொலர்களாகும். ஒன்றிணைந்த வீதி முதலீட்டு திட்டம். தெற்கு, மத்திய. சப்ரகமுவ வடமேல் வடமத்திய மாகாணங்களிலும், மேல் மாகாணத்தின் களுத்துறை மாவட்டத்திலும் 2014 ஆம்...
Loading posts...
All posts loaded
No more posts
