காணாமல்போனோர் விவகாரத்திற்கு சர்வதேச வழக்கின் மூலம் தீர்வு – ஜஸ்மின் சூக்கா

காணாமல்போனோர் விடயத்தை இலங்கை தொடர்ந்தும் அலட்சியம் செய்தால் இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்வதன் மூலம் உரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்போம் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனது அலுவலகத்தில் காணாமற்போனவர்களின் உறவினர்களுடன் ஸ்கைப் மூலம் ஜஸ்மின் சூக்கா மேற்கொண்ட...

முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த பேரவலத்தின் நினைவாக புத்தக வெளியீடு

முள்ளிவாய்க்கால் நினைவாக, “முள்ளிவாய்க்கால் பதிவுகள்” எனும் நூல் யாழில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில், கொள்கை ஆய்வுக்கான நிலையமான “அடையாளம்” அமைப்பினது ஏற்பாட்டிலேயே நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை இவ்வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாதிக்கப்பட்ட மக்கள் மாத்திரமே கலந்துகொண்டனர் என்பதும் அரசியல் பிரமுகர்கள்...
Ad Widget

இரணைதீவு மக்களுக்கு வெற்றி!!! : மீள்குடியேற்றத்திற்கு அனுமதி!

கிளிநொச்சி – இரணைதீவில் தங்கியிருந்து தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள 190 குடும்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்ற அமைச்சின் தீர்மானத்தின் பிரகாரம், மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். இம்மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கரிசனை கொண்டுள்ளதாக தெரிவித்த அவர், படிப்படியாக சகல பிரச்சினைகளையும் தீர்த்துவைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென குறிப்பிட்டுள்ளார்.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் நாளை நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்!!

அமைச்சரவை அனுமதித்துள்ள 6.5 வீத கட்டண அதிகரிப்பை நிராகரித்துள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர், நாளை (புதன்கிழமை) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். இதற்காக சகல பேருந்து தொழிற்சங்கங்களுடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர். 20 சதவீத கட்டண அதிகரிப்பை கோரியிருந்த நிலையில், அமைச்சரவையின் தீர்மானம் ஏமாற்றமளித்துள்ளதாகவும் அதன் பிரகாரம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் தனியார் பேருந்து உரிமையாளர்கள்...

தமிழினப் படுகொலையில் உயிர்நீத்தோரை அஞ்சலிக்க வடக்கில் “தீபமேந்திய ஊர்தி”

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் வகையில் “தீபமேந்திய ஊர்தி பவனி” வல்வெட்டித்துறையில் மண்ணிலிருந்து இன்று (15) காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியது. இளைஞர்களால் ஆரம்பிக்கப்படும் தீப ஊர்திப் பவனி வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தைச் சென்றடைகிறது. தமிழினப் படுகொலையில் உயிர்நீத்த மக்களுக்கு...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு பொலிஸாரின் லீவுகள் இடைநிறுத்தம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மே 18ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் வடக்கு மாகாண பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் சகல தர நிலை பொலிஸ் உத்தியோகத்தர்களினும் விடுப்புகள் இன்று நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன. வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரால் இன்று காலை அறிவிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகத்தில் மே...

பேருந்து கட்டண அதிகரிப்பிற்கு அனுமதி! நாளை முதல் அதிகரிப்பு!!

தனியார் பேருந்து கட்டணத்தை 6.5 வீதத்தால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாளை முதல் இக்கட்டண அதிகரிப்பு அமுலுக்கு வரவுள்ளது. இதன் பிரகாரம் தற்போது நடைமுறையிலுள்ள ஆகக்குறைந்த பேருந்து கட்டணமான 10 ரூபாவில் எவ்வித மாற்றமும் ஏற்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில், பேருந்து கட்டண அதிகரிப்பு...

‘முன்னோக்கி நகர்வோம்’ வேலைத்திட்டம் யாழில் ஆரம்பித்து வைப்பு!

மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த வட.மாகாணத்தினை மையப்படுத்தி ‘முன்னோக்கி நகர்வோம்’ எனும் தொனிப்பொருளிலான வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்.கைலாசபிள்ளையார் ஆலய பின் வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே மேற்படி வேலைத்திட்டம் வட.மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச்செயற்திட்டம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்...

இன்று குமுதினிப்படுகொலை 33ஆவது வருட நினைவுநாள்

1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு 33 வருடங்கள் ஆகும். நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழி மறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள்,...

இ.போ.ச. பஸ் கட்டணமும் அதிகரிக்கும் அபயாம் !

இலங்கை போக்குவரத்து சபையினரும் பஸ் கட்டணங்களை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தியுள்ளது. பஸ் கட்டணங்களை அதிகரிக்காவிடத்து போக்குவரத்து சபை மீண்டும் நட்டமீட்டும் நிறுவனமாக மாறும் ஆபத்துள்ளதாக அச் சபையின் பிரதானி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தில் இலங்கை போக்குவரத்து சபை 12 மில்லியன் ரூபா இலாமீட்டியுள்ளது. ஆகவே தற்போது எரிபொருள் விலை அதிகரித்துள்ளமையினால் அதனை தொடர்ந்தும்...

அரசாங்கம் ஜெனிவாவில் வழங்கிய வாக்குறுதியை கடைப்பிடிக்கவில்லை: முதலமைச்சர்

சொந்த காணிகளில் மக்கள் குடியமர்த்தப்படுவார்கள் என அரசாங்கம் அன்று ஜெனிவாவில் வழங்கிய வாக்குறுதியை முறையாக கடைப்பிடிக்கவில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி காணி அதிகாரங்களும் முழுமையாக மத்திய அரசிடம் காணப்படுவதால் எம்மால் ஒரு காணிகளைக் கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். கிளிநொச்சி இரணைதீவு மக்களை நேற்று(திங்கட்கிழமை) சந்தித்த...

யாழில்.பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையில் சிறப்பு பொலிஸ் செயலணி

யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றாக ஒழிக்கும் வகையில் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஷான் பெர்னாட்டோவினால் சிறப்பு பொலிஸ் செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. குறித்த செயலணியின் பணிகள் அனைத்தும் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான விழிப்புணர்வு சுவரொட்டிகள் குடாநாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் ஒட்டப்படவுள்ளன. கடந்த காலங்களில்...

வடக்கு.வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஓர் அறிவித்தல்

வேலையற்ற பட்டதாரிகளின் தொழில் உரிமை போராட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட நீர்த்தாரைப் பிரயோகத்திற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நாளை (புதன்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளது. “அனைத்து வேலையற்ற பட்டதாரிகளிற்கும் நியமனம் வழங்குதல் வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட போது குறித்த நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதனை கண்டிக்கும் முகமாக நாளை புதன் கிழமை காலை...

வேலையற்ற பிரச்சினைக்கு தீர்வு – பிரதமர் அறிவிப்பு

வேலையற்ற பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு அரசாங்கம் பொதுத்துறையில் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் குறித்த விடையம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். தனியார் மற்றும் பொதுத் துறைகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என தெரிவித்த...

வடக்கு மாகாண மக்களுக்கு மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளரின் அறிவித்தல்!!

வாகன வரி அனுமதிப் பத்திரம் பெறப்படாத வாகனங்கள் மற்றும் பயன்பாட்டில் இல்லாத வாகனங்களின் அனைத்து பதிவுகளும் நீக்கப்படும் என வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் அறிவித்துள்ளார். அதன்படி கடந்த 2017 டிசம்பர் 31ஆம் திகதி வரை 5 வருடங்களாக வாகன வரி அனுமதிப் பத்திரம் பெறப்படாத வாகனங்களே இவ்வாறு இரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....

சாவகச்சேரியில் நினைவுத் தூபி அமைக்க நடவடிக்கை

உள்நாட்டு யுத்தத்தின் போது நடத்தப்பட்ட தாக்குதல்களில் உயிரிழந்த பொதுமக்களின் நினைவாக, சாவகச்சேரி பொதுச்சந்தையில் தூபியொன்று கட்டியெழுப்பப்படவுள்ளதாக சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் அ.பாலமயூரன் தெரிவித்துள்ளார். தமிழ் இனப்படுகொலை நினைவு வாரத்தின் மூன்றாம் நாள் அஞ்சலி நிகழ்வுகள் நேற்று (திங்கட்கிழமை) மாலை சாவகச்சேரி சந்தையில் இடம்பெற்றபோதே இதனைத் தெரிவித்தார். சாவகச்சேரி நகர சபையின் தலைவர் சிவமங்கை...

திருடனின் கத்திக் குத்துக்கு இலக்காகிய முதியவர் உயிரிழப்பு!!

திருடனின் கத்திக் குத்துக்கு இலக்காகிய முதியவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடி வடக்கு பிள்ளையார் கோவிலுக்கு அருகிலுள்ள வீட்டுக்குள் கடந்த 10ஆம் திகதி வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு திருடன் ஒருவன் புகுந்துள்ளான். அந்த வீட்டில் தம்பதியரான சிவலோகநாதன் செல்வராசா (வயது – 62 ) செல்வராசா இராஜேஸ்வரி (வயது -58)...

முதலமைச்சர் இரணைதீவிற்கு விஜயம்!! போராட்டம் நடாத்தும் மக்களுடன் சந்திப்பு!!

இரணைதீவில் தமது பூர்வீகக் காணிகளில் மீள்குடியமர்த்த வலியுறுத்தி போராட்டம் நடத்திவரும் மக்களை வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் இன்று நேரில் சென்று சந்தித்து அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டு வருகிறார். வடக்கு மாகாண அமைச்சர் கலாநிதி க. சர்வேஸ்வரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பொ.ஐங்கரநேசன், பா.கஜதீபன் மற்றும் முதலமைச்சரின் செயலாளர் ஆகியோரும் முதலமைச்சருடன் இரணைதீவுக்குச்...

வாள்வெட்டுக் கும்பல்களுடன் தொடர்பைப் பேணிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தருக்கு இடமாற்றம்

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய அப்பு என்ற பொலிஸ் உத்தியோகத்தர் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் மன்னார் பொலிஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். வாள்வெட்டுக் கும்பல்களுடன் தொடர்புகளைப் பேணி, பொலிஸாரின் விசாரணை நகர்வுகள் தொடர்பான தகவல்களை அவற்றுக்கு வழங்கினார் என்ற குற்றச்சாட்டையடுத்தே இந்த இடமாற்றத்துக்கு உத்தரவிட்டார் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர். “யாழ்ப்பாணத்தில்...

அரசையும் தமிழ்க் கூட்டமைப்பையும் குறை கூறுவதில்தான் விக்னேஸ்வரன் காலத்தைக் கழித்துள்ளார் – மாவை

அரசையும் தமிழ்க் கூட்டமைப்பையும் குறை கூறுவதில்தான் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் காலத்தைக் கழித்துள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குற்றம் சுமத்தியுள்ளார். வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக என்னை முன்னிலைப்படுத்தினால் அது குறித்து நல்ல முடிவெடுப்பேன். கடந்த முறை விட்ட தவறை இந்தத் தடவையும் விடமாட்டேன் போரால் பாதிக்கப்பட்ட...
Loading posts...

All posts loaded

No more posts