Ad Widget

முதலமைச்சர் இரணைதீவிற்கு விஜயம்!! போராட்டம் நடாத்தும் மக்களுடன் சந்திப்பு!!

இரணைதீவில் தமது பூர்வீகக் காணிகளில் மீள்குடியமர்த்த வலியுறுத்தி போராட்டம் நடத்திவரும் மக்களை வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் இன்று நேரில் சென்று சந்தித்து அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டு வருகிறார்.

வடக்கு மாகாண அமைச்சர் கலாநிதி க. சர்வேஸ்வரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பொ.ஐங்கரநேசன், பா.கஜதீபன் மற்றும் முதலமைச்சரின் செயலாளர் ஆகியோரும் முதலமைச்சருடன் இரணைதீவுக்குச் சென்றுள்ளனர்.

இரணை தீவு மக்கள் போர் காலப்பகுதியான 1992ஆம் ஆண்டு கடற்படையினரால் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் கடந்த 26 ஆண்டுகளாக கிளிநொச்சி இரணை மாதா நகரில் வசித்து வருகின்றனர்.

தமது வாழ்வாதாரத் தொழிலான கடற்றொழிலை முழுமையாக முன்னெடுக்க முடியாது அந்த மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்தனர்.

இந்த நிலையில் இரணைதீவிலுள்ள தமது பூர்வீக காணிகளில் மீள்குடியமர அனுமதிக்குமாறு வலியுறுத்தி அந்த மக்கள் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தின் ஒராண்டு நிறைவான கடந்த மாத இறுதியிலிருந்து அந்த மக்கள் இரணை தீவில் தங்கியிருந்து தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts