அமைச்சரவை அனுமதித்துள்ள 6.5 வீத கட்டண அதிகரிப்பை நிராகரித்துள்ள தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர், நாளை (புதன்கிழமை) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதற்காக சகல பேருந்து தொழிற்சங்கங்களுடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
20 சதவீத கட்டண அதிகரிப்பை கோரியிருந்த நிலையில், அமைச்சரவையின் தீர்மானம் ஏமாற்றமளித்துள்ளதாகவும் அதன் பிரகாரம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.