- Thursday
- May 14th, 2026
யாழ் கோட்டையில் இருந்து இராணுவத்தை நீக்கவேண்டும் என்ற முதலமைச்சரின் கருத்துக்கு வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, யாழ்ப்பணம் ஒல்லாந்தர் கோட்டையில் இராணுவத்தினர் நிரந்தரமாக முகாமிடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்...
தமிழ் மக்களை எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஏமாற்றி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தமிழ் தேசிய கூட்டமைப்பு, எதிர்க்கட்சி...
சுழிபுரம் சிறுமி கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சிலர் இன்னமும் கைது செய்யப்படாமையால் சுதந்திரமாக நடமாடி திரிவாதாக சிறுமியின் உறவினர்கள் குற்றம் சாட்டுவதாக அவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்தார். குறித்த வழக்கு விசாரணையானது மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நேற்று (புதன்கிழமை) நீதவான் ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது....
யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பின்னர் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு எழுத்துமூலம் ஆட்சேபனையை, மனுதாரர்கள் சார்பில் நேற்று (புதன்கிழமை) முன்வைக்கப்பட்ட வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி...
யாழ்ப்பாண மாநகர சபை அமர்வில் பங்கேற்கவும், அங்கு வாக்களிக்கவும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மாநகர சபையின் உறுப்பினர் கே.வி.குகேந்திரனுக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (புதன்கிழமை) இடைக்காலக் தடை உத்தரவினை பிறப்பித்துள்ளது. இரட்டைக் குடியுரிமை கொண்டவர் என்பதால் இலங்கை தேர்தல் விதிகளுக்கு அமைவாக அவர் மாநகர சபை உறுப்பினராக தெரிவு செய்ய முடியாது என...
விடுதலைப்புலிகள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் தெரிவித்த கருத்துகள் தொடர்பில் அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காதமைக்கு ஒன்றிணைந்த எதிரணியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஒன்றிணைந்த எதிரணியினர் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டு நேற்று (புதன்கிழமை) காலி – சீனிகம தேவாலயத்தில் தேங்காய் உடைத்துள்ளனர். இதன் போது ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேச...
மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் விபரங்களை வழங்குமாறு, நீதிமன்றத்திடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார். மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு முதற்கட்டமாக 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களது விபரமே கோரப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், அமைச்சரவை இணைப் பேச்சாளரும்...
யாழ். ஒல்லாந்தர் கோட்டையில் இராணுவத்தினர் நிரந்தரமாக முகாமிடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாதென, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஒல்லாந்தர் கோட்டையை இராணுவத்தினருக்கு வழங்குவது தொடர்பாக முதலமைச்சரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”யாழ். ஒல்லாந்தர் கோட்டையை இராணுவத்திற்கு கொடுப்பததென்ற விடயம் சட்டமாக வரவில்லை. ஆனால், பலராலும் பேசப்படுகின்றது....
ஐயாயிரம் ரூபா கள்ள நோட்டுடன் சிறுவனொருவன் யாழ் நகர்ப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த விசேட தகவலின் அடிப்படையிலையே நேற்று மாலை யாழ் பொம்மைவெளிப் பகுதியில் வைத்து குறித்த சிறுவனை கைது செய்துள்ளனர். இதன் போது ஐயாயிரம் ரூபா கள்ள நோட்டுக்கள் மூன்று பொலிஸரால் மீட்கப்பட்டுள்ளது. கைது...
யாழ்ப்பாணம் – காரைநகர் வீதி கல்லுண்டாய் பகுதியில் வாள், கம்பியுடன் நடமாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர் என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று (10) செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றது. “கல்லுண்டாய் பகுதியில் மானிப்பாய் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்தனர். இரண்டு மோட்டார் சைக்கிள் சமாந்தரமாக வந்தன. அவற்றில் 4 பேர் பயணித்தனர்....
வவுனியா பேருந்து ஒன்றில் பாடசாலை மாணவி ஒருவருடன் தகாத முறையில் செயற்பட்ட இராணுவ சிப்பாய் ஒருவரை மடக்கி பிடித்த பொதுமக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இருப்பினும் பொலிஸார் இராணுவ சிப்பாயை தப்பிக்க விட்டதாக தெரிவித்து, பொலிஸாருடன் பொதுமக்கள் முரண்பாட்டில் ஈடுபட்டிருந்தனர். குறித்த சம்பவமானது நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார், இதனால் மன்னார் வீதியில் போக்குவரத்துக்கு இடையூறு...
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலையை நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் இறுதித் தீர்மானம் ஒன்றை பெற்றுக்கொள்ளும் முகமாக நிதியமைச்சர் மங்கள சமரவீர மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 92 ஒக்டோன் பெற்றோலின் விலை 8...
முல்லைத்தீவில் அனுமதி பத்திரமின்றி இயங்கிவரும் மருந்தகத்தில் பெற்றுக் கொண்ட மருந்தினால் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தால் அவற்றை மூடுவதற்கு வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் உத்தரவிட்டிருக்கும் நிலையில், மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் அதற்கு எதிர்ப்பை வெளிக்காட்டியிருந்தனர். இதன் காரணமாக அமைச்சர் சபையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளார். வடக்கு மாகாண சபையின் 126 வது அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை)...
வடமாகாணப் பாடசாலைகளின் கற்பித்தல் நடவடிக்கைகளில் பல மாற்றங்களை விரைந்து முன்னெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியிருக்கின்றது என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண கல்வித் திணைக்களத்தால் துரையப்பா விளையாட்டு அரங்கில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற பாடசாலைகளுக்கிடையேயான தடகளப் போட்டி நிறைவு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர்...
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பௌத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம தெரிவித்துள்ளார். பௌத்தசாசன அமைச்சில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சமீப காலமாக இடம்பெற்ற கொலைகள் மற்றும் ஏற்கனவே சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களின் திட்டமிடப்பட்ட போதைப்பொருள் இறக்குமதி என்பவற்றை கருத்திற்கொண்டு அமைச்சரவை அமைச்சர்கள்...
வீதிப் போக்குவரத்து விதிகளை மீறும் 33 தவறுகளுக்காக விதிக்கப்படும் தண்டப்பணம் இந்த மாதம் 15ஆம் திகதி தொடக்கம் அதிகரிக்கப்படவுள்ளதாக பொலிஸ் வாகன போக்குவரத்து பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்தார். வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அதிக வேகத்துடன் வாகனங்களை செலுத்துவதற்கான தண்டப்பணம் ரூபா 25 ஆயிரம் ரூபாவரை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகுமம் அவர்...
தனியார் கல்வி நிலையத்துக்கு வந்த பதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரின் விளக்கமறியலை வரும் 14 நாள்களுக்கு நீடித்து மல்லாகம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா இன்று உத்தரவிட்டார். “கொலை வழக்குகளின் சந்தேகநபர்களுக்கே நீதிமன்றால் பிணை வழங்கப்படுகிறது. இத்தகைய சாதாரண சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க நீதிமன்று மறுக்கலாமா? வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்...
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு பத்திரமொன்றை தாக்கல் செய்யவிருப்பதாக, பா.டெனீஸ்வரனின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார். வடக்கு அமைச்சராக டெனீஸ்வரன் தொடர்ந்து நீடிப்பார் என்ற மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று செயற்பட வடக்கு முதல்வர் மறுத்து வருகின்றமை தொடர்பாகவே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க மறுத்து வடக்கு முதல்வர் நீதிமன்ற...
விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த விடயத்திற்கு பின்னணியில் சொல்லப்படாத ஒரு உண்மை இருப்பதாகவும், அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகள் எவற்றையும் நிறைவேற்றவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முதியங்கன ரஜமகாவிகாரைக்கு நேற்று (திங்கட்கிழமை) விஜயம் செய்த மஹிந்த ராஜபக்ஷ ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறியுள்ளார். மேலும் விஜயகலா மகேஸ்வரன், விடுதலைப்...
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரன் மற்றும் ஊடகவியலாளர் இசைப்பிரியா ஆகியோரின் படுகொலையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படத்துக்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஈழன் இளங்கோ இயக்கியுள்ளார். இதற்கிடையே இப்படத்தை திரையிடும் முயற்சியில் கடந்த மார்ச் மாதம் தணிக்கை பெறுவதற்காக இலங்கை தலைநகர் கொழும்பில் இருக்கும்...
Loading posts...
All posts loaded
No more posts
