இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலையை நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் இறுதித் தீர்மானம் ஒன்றை பெற்றுக்கொள்ளும் முகமாக நிதியமைச்சர் மங்கள சமரவீர மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் 92 ஒக்டோன் பெற்றோலின் விலை 8 ரூபாயாலும் (அதன் புதிய விலை 145 ரூபாயாகும்), 95 ஒக்டோன் பெற்றோலின் விலை 7 ரூபாயாலும் (அதன் புதிய விலை 155 ரூபாயாகும்) அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் டீசல் விலை 9 ரூபாவாலும் (அதன் புதிய விலை 118 ரூபாயாகும்), சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவாலும் (அதன் புதிய விலை 129 ரூபாயாகும்) அதிகரிக்க ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.