- Monday
- May 11th, 2026
மது போதையில் பெனாயில் குடித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ரத்னாயக்க (வயது 45) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடந்த சனிக்கிழமை இரவு யாழ்.நகரப் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் மது அருந்தியுள்ளனர்....
யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக வழிப்பறி மற்றும் சங்கிலி அறுப்பில் ஈடுபட்டு வந்த ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் தென்மராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் வழிப்பறி மற்றும் தங்கச்சங்கிலி அறுப்பு போன்றன அண்மைக் காலங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தன. இவ்வழிப்பறி தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை...
எதிர்வரும் வரவு செலவு திட்ட யோசனையின் போது கூட்டமைப்பு நிபந்தனைகளுடன் கூடிய ஆதரவை அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஈ.பி.ஆர்.எப் கட்சியின் கிளிநொச்சி கிளையினரின் நிர்வாக தெரிவு ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,...
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்கரை பகுதியில் இந்திய மீனவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் கடற்படையினரால் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இலங்கை கடற்படையின் ராட்சத ரோந்துக் கப்பலானது தமிழ்நாடு மீனவர்களது படகுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தமிழக மீனவர்களது படகில் பயணித்த மீனவர் ஒருவர் காணாமல் போயிருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி...
நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நாடு முழுவதிலும் பல இடங்களில் இன்று (திங்கட்கிழமை) மழையுடன் கூடிய வானிலை காணப்படுமென அத்திணைக்களம் அறிவித்துள்ளது. குறிப்பாக வடக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பலத்த...
அனுராதபுரம் சிறைச்சாலையில் விடுதலை கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்ற சிவப்பிரகாசம் சிவசீலன் (32) என்ற அரசியல் கைதியின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைகள் முற்றுப்பெற்று, தீர்ப்பளிக்கப்படுகின்ற நிலையில் அவருடைய வழக்குத் தவணைகளுக்கு இராணுவ தரப்பினர் வருகை தருவதில் காட்டுகின்ற அசிரத்தையும் அக்கறையின்மையும் அவருடைய விடுதலையைத் தாமதிக்கச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில்...
இலங்கையில் முதல் முறையாக நாய்களிடமிருந்து பரவக் கூடிய ஒருவகை நோய் இனங்காணப்பட்டுள்ளமையால் மக்களை அவதானமாக செயற்படுமாறு பேராதனை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். குறித்த நோய் இதுவரை காலமும் தென்னாபிரிக்கா நாடுகளிலேயே அதிகளவு பரவலாக காணப்பட்டு வந்த நிலையில், தற்போது இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அண்மையில் கண் நோயால் பாதிக்கப்பட்ட நாயொன்று பேராதனை...
இந்திய துனணத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்திய கல்வி கண்காட்சி பெப்ரவரி மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இக்கண்காட்சி மூலம் இலங்கையின் வடக்கு மாகாணத்திலுள்ள மாணவர்கள் இந்தியாவில் கல்வி வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் பாலச்சந்தர் குறிப்பிட்டார். இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்றது. இதன்...
மண்டைதீவு உட்பட வடபுலத்தில் இராணுவம் நிலை கொண்டிருந்த அனைத்து இடங்களிலும் மனித புதைகுழிகள் உள்ளன என்று ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும், முன்னாள் வடக்கு மாகாண சபை அமைச்சருமான திருமதி அனந்தி சசிதரன் தகவல் வெளியிட்டுள்ளார். இராணுவம் நிலை கொண்டிருந்த அனைத்து இடங்களிலும் சர்வதேச கண்காணிப்புடன் மனித புதை குழி தொடர்பான ஆய்வுகள் செய்யப்பட...
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இந்த சிறப்பு விடுமுறைக்கான கட்டளையை கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கியுள்ளார். இதுதொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஜனவரி 15ஆம் திகதி செவ்வாய்கிழமை கொண்டாடப்படும் தமிழர்களின்...
சிங்கள மக்கள் மத்தியில் பேரினவாதத்தைத் தூண்டும் நடவடிக்கையில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஈடுபடுவதை உடன் கைவிட வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். அரசியலமைப்பு நிர்ணய சபை பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நேற்று(வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கூடியது. இதன்போது புதிய அரசியலமைப்பிற்கான நிபுணர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களின்...
தென்மராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட நாவற்குழியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் அதிபர் மற்றும் ஆசிரியர்களை மாணவர்கள் சிலர் தாக்க முற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து பாடசாலை மாணவர்கள் ஒன்று திரண்டு ஆசிரியர்கள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி பாடசாலைக்கு முன்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, குறிப்பிட்ட சில மாணவர்கள் பாடசாலையின் ஒழுக்க...
புதிய ஆளுநர்களை சந்தித்து மக்கள் சேவையிலும் அபிவிருத்தி பணிகளிலும் ஆளுநர்களின் பொறுப்பு என்னவென்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெளிவுபடுத்தியுள்ளார். மக்களுக்கான சேவைகளை முறையாகவும் வினைத்திறனாகவும் வழங்குவதோடு அரசாங்கத்தின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக அனைத்து புதிய ஆளுநர்களும் நேரடியாக தலையிடுவார்கள் என்று தான் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் இடம்பெற்ற ஆளுநர்களுடனான...
நீண்ட காலமாக, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு, விரைவில் நற்செய்தி கிடைக்கும் என நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார். மனைவி, பிள்ளைகளைப் பிரிந்து, 11 மாதங்கள் சிறையிலிருந்த அர்ஜுன் அலோசியஸுக்குப் பிணை வழங்க முடியுமென்றால், 11 வருடங்களுக்கு மேலாக சிறைச்சாலையில் வாடும் அரசியல் கைதிகளுக்கு ஏன் பிணை வழங்க முடியாது? என நாடாளுமன்றத்தில்...
காலநிலை மாற்றத்தின் காரணமாக வட மாகாணமானது கடுமையான சவால்களை எதிர்நோக்குகின்றது என நகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அந்தவகையில் அடுத்த 30 முதல் 40 ஆண்டுகளில் வடக்கு மாகாணமானது அரை பாலைவனமாக மாறும் என அவர் மேலும் கூறியுள்ளார். நாடாளுமன்றில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்...
“இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் சர்வதேச குற்றங்களே. எனவே, இதை விசாரித்துப் பாதிக்கப்பட்ட தரப்புக்கு நீதி வழங்க சர்வதேச விசாரணையே வேண்டும்.” இவ்வாறு சபையில் இன்று வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன். “சர்வதேச விசாரணையால் நாட்டின் இறைமை ஒருபோதும் பாதிக்கப்படாது” எனவும்...
அரசியலமைப்பை ஏற்க முடியுமா என்பதை மூவின மக்களே தீர்மானிக்கவேண்டிய நிலையில், அரசியலமைப்பிற்கும் தேர்தலுக்கும் தொடர்பில்லை. எனவே பொதுத் தேர்தலொன்றை நடத்துவதற்கான அவசியம் இல்லை என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) கூடிய அரசியலமைப்புச் சபையில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்....
கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்திற்கு எதிராக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. கிழக்கு மக்கள் ஒன்றியம் எனும் தலைப்பில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. ‘ஜனாதிபதியே பொருத்தமற்ற ஹிஸ்புல்லாவை நீக்கி கிழக்கு மக்களை பாதுகாத்திடு’ எனும் தொனிப்பொருளில் இந்த ஹர்த்தாலில் பங்குகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான சுவரொட்டிகளும் பல்வேறு பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன....
அரசியலமைப்பு உருவாக்க செயற்பாடுகளிலிருந்து இறுதிவரை பின்வாங்கப் போவதில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) கூடிய அரசியலமைப்பு சபையில் புதிய அரசியலமைப்பு குறித்த யோசனையை முன்வைத்து உரையாற்றிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இதனை குறிப்பிட்டார். அரசியலமைப்பு உருவாக்கத்தில் உள்ள பிரதான தமிழ் கட்சி...
இலங்கை விமானப் படையின் அன்டனோ – 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தியமையால் 37 பேரின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்தனர் என்ற குற்றத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு 185 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து அநூராதபுரம் மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. 185 ஆண்டுகள்...
Loading posts...
All posts loaded
No more posts
