Ad Widget

பொதுத் தேர்தலுக்கு அவசியமில்லை: சம்பந்தன்

அரசியலமைப்பை ஏற்க முடியுமா என்பதை மூவின மக்களே தீர்மானிக்கவேண்டிய நிலையில், அரசியலமைப்பிற்கும் தேர்தலுக்கும் தொடர்பில்லை. எனவே பொதுத் தேர்தலொன்றை நடத்துவதற்கான அவசியம் இல்லை என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) கூடிய அரசியலமைப்புச் சபையில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”புதிய அரசியலமைப்பு அனைத்து மக்களையும் ஒன்றுசேர்க்கும்.

மக்களை ஒன்றிணைத்தல், அதிகார பரவலாக்கல் போன்ற பல நன்மைகள் புதிய அரசியலமைப்பில் உண்டு. தலைநகரில் அதிகாரம் குவிந்துள்ளதால் அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. எனவே, மாகாண மற்றும் பிரதேச ரீதியில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசியலமைப்பு நிறைவேற்றப்பட வேண்டும். அதன் பின்னர் மக்கள் கருத்துக்கணிப்புக்கு செல்ல வேண்டும். ஆனால் பொதுத் தேர்தல் அவசியமில்லை.

அரசியலமைப்பை ஏற்க முடியுமா என்பதை மூவின மக்களும் தீர்மானிக்கட்டும். அதற்கும் தேர்தலுக்கும் தொடர்பில்லை” எனத் தெரிவித்தார்.

Related Posts