யாழில் இளைஞனைக் காணவில்லையென முறைப்பாடு!

சாவகச்சேரி பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள உணவகத்தில் பணியாற்றிய இளைஞனை காணவில்லை என தந்தை முறைப்பாடு செய்துள்ளார். யாழ்.சுழிபுரம் கிழக்கை சேர்ந்த மனோரஞ்சன் சஜிந்தன் (சயந்தன்) எனும் இளைஞனே காணமற்போயுள்ளார். குறித்த இளைஞன் மறவன்புலவு பகுதியில் தற்காலிகமாக தங்கி இருந்து உணவகத்திற்கு வேலைக்கு சென்று வந்துள்ளார். அந்தவகையில், கடந்த 19ஆம் திகதி வேலைக்கு சென்றவர் இதுவரை...

அரசாங்கம் ஏமாற்றுகிறது என்றால் கூட்டமைப்பு ஏன் ஆதரவளிக்கிறது? – அனந்தி

அரசாங்கம் ஏமாற்றுகிறது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கூறுவார்களாயின் அந்த அரசிற்கான ஆதரவை ஏன் தொடர்ந்தும் வழங்க வேண்டுமென முன்னாள் வட.மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் கேள்வியெழுப்பியுள்ளார். அத்துடன் அரசாங்கத்துக்கு வழங்கும் ஆதரவை விலக்கிக்கொள்ள கூட்டமைப்பினர் தயாராக வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கூட்டமைப்பின் செயற்பாடுகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்....
Ad Widget

வடக்கில் வைத்தியசாலை வெற்றிடங்களுக்கு தகுதியானவர்கள் நியமிக்கப்பட வேண்டும்!

வடக்கில் நிலவும் வைத்தியசாலைகளுக்கான வெற்றிடங்களில் தகுதியான உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் சுகாதாரம், போசனை, சுதேச வைத்திய அமைச்சு, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர் வலய அபிவிருத்தி அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில்...

மண்ணின் வளங்களைக் காப்பாற்றுகின்ற மாணவர்கள் போராளிகளுக்கு நிகரான பசுமைக் காவலர்கள் – பொ. ஐங்கரநேசன

மண்ணின் எல்லைகளைக் காப்பாற்றப் போராடிய மறவர்களை விடுதலைப் போராளிகள் என்று கொண்டாடுகின்றோம். அதேபோன்றுதான் மண்ணின் வளங்களைக் காப்பாற்றுகின்ற மாணவர்களும் போற்றப்படவேண்டியவர்கள். இவர்கள் விடுதலைப் போராளிகளுக்கு நிகரான பசுமைக் காவலர்கள் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். சிறுப்பிட்டி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை மாணவர்களால் உற்பத்தி செய்யப்பட்ட...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் போராட்டத்துக்கு அழைப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் வரும் 27ஆம் திகதி காலை 10.30 மணிக்கு இடம்பெறுவதோடு இவ்விடயம் குறித்து ஊடகவியலாளர் சந்திப்பும் நடத்தப்படவுள்ளது. பொது நிர்வாக சுற்று நிருபங்களை பாரபட்சமாக நடைமுறைப்படுத்துதல், ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவுக்கு நியாயமற்ற நிபந்தனைகள் விதிப்பு, ஊழியர்கள் மீதான அச்சுறுத்தல்கள் உட்பட பல்வேறு...

வட மாகாணத்தில் தொண்டராசிரியர்களாகப் பணியாற்றுபவர்களுக்கு நிரந்தர நியமனம்!

வட மாகாணத்தில் தொண்டராசிரியர்களாகப் பணியாற்றும் 491 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஆசிரியர் சேவை வகுப்பு 03 இன் இரண்டாம் தரத்திற்கு இவர்கள் உள்வாங்கப்படவுள்ளதாக தேசிய கொள்கைகள், பொருளாதார விவகார, வட மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மூன்று வருடங்களுக்கு மேல் தொண்டர் ஆசிரியராகப் பணியாற்றியவர்களுக்கே நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சு...

யாழ். குடாநாட்டின் நீர் பிரச்சினைக்கு தீர்வாக பாரிய திட்டம் – ஆளுநர் அறிவிப்பு

யாழ்.குடாநாட்டின் நீர்த் தேவையை பூர்த்தி செய்வதற்கு வடமராட்சி களப்பில் இருந்து நீரை எடுப்பதற்கான பாரிய திட்டம் மிக விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக வட. மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகன் தெரிவித்துள்ளார். இது யாழ்ப்பாண மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி எனவும் அவர் கூறியுள்ளார். ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தொிவிக்கும்போதே ஆளுநர்...

வெப்பமான காலநிலை தொடரும்!!! – மக்கள் பாதிப்பு

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. குறிப்பாக வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, அநுராதபுரம், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் இன்று (புதன்கிழமை) அதிக வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என அத்திணைக்களம் எச்சரித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்...

இராணுவத்தினர் மீதான குற்றங்கள் நிருபிக்கப்படுமாயின் தண்டனை நிச்சயம் – வடக்கு ஆளுநர்

யுத்த குற்றச்சாட்டு தொடர்பாக சாட்சிகளோடு சந்தேகத்திற்கு இடமின்றி நிருபிக்கப்படுமாயின் தரம் பார்க்காது இராணுவத்தினர் தண்டிக்கப்படுவார்களென வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது. எதை...

உலகை அதிரவைத்த புலிகளின் தாக்குதல்!

ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் ஆனது, இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற் கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26 ஞாயிற்றுக்கிழமை மாலை நேரம் அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. 35 நாட்களின் பின்னர் தமிழீழ...

தமிழ் மக்கள் மீது இராணுவம் இரசாயன குண்டுத்தாக்குதல் நடத்தியது – மாவை

இறுதி யுத்தத்தில் பொதுமக்களை இலக்கு வைத்து அரசாங்கம் தாக்குதல் நடாத்தியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் மீண்டும் குற்றம் சுமத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இதன்போது தொடர்ந்தும்...

“நீர் பிறக்கும்போது அரசியல்வாதியாகப் பிறக்கவில்லை” – யாழ் மாநகர துணை முதல்வர் ஈசனை விரட்டிய பொது மக்கள்

கொழும்புத்துறையில் யாழ் மாநகரசபை முதல்வரின் ஒத்துளைப்போடு தனியார் சிலரால் மூடப்பட்ட வீதியை மீண்டும் திறக்கக்கோரி போராடிவரும் மக்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சந்தித்து கலந்துரையாடியபோது அதனை அறிந்து அங்கு வந்து குழப்பத்தில் ஈடுபட்ட குறித்த பிரதேசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த யாழ் மாநகர சபை உறுப்பினரும் துணை முதல்வருமான...

புலமை பரிசில் பரீட்சை தொடர்பில் ஜனாதிபதியின் முக்கிய தீர்மானம்

தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சை காரணமாக மாணவர்களுக்கு முகங்கொடுக்க நேருகின்ற அழுத்தங்களை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். பொலன்னறுவையில் இடம்பெற்ற “மைத்ரி கைவினை கலா மண்டபத்தை“ மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்....

யாழ்.மேயருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை குறித்து அங்கஜன் சந்தேகம்!

குடும்ப பிரச்சினை காரணமாக யாழ்.மேயருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கிளிநொச்சியில் மக்கள் சந்திப்பொன்றில் ஈடுபட்டிருந்தார். கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள செருக்கன் பிரதேச மக்களுடன் குறித்த சந்திப்பு நேற்று பகல் 1 மணியளவில் இடம்பெற்றது. செருக்கன் பகுதியில் வாழும்...

கல்வியினை மீளவும் மத்திய அரசாங்கத்திடம் கொடுப்பதை ஏற்க முடியாது – சீ.வீ.கே

மாகாணங்களுக்கு ஓரளவாவது அதிகாரம் அளிக்கப்பட்ட கல்வியினை மீளவும் மத்திய அரசாங்கத்திடம் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவரது அலுவலகத்திலநேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். மாகாணங்களுக்கு ஓரளவாவது அதிகாரம் வழங்கப்பட்டவையாக கல்வி, சுகாதாரம், கூட்டுறவு போன்ற...

ஜெனீவா தீர்மானம் குறித்து சர்வதேச சமூகம் இலங்கைக்கு உத்தரவிட முடியாது – ஆளுநர்

ஜெனீவா தீர்மானத்தை நிறைவேற்றுவது குறித்து சர்வதேச சமூகம் இலங்கைக்கு உத்தரவிட முடியாது என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கையராகிய நாமே நாட்டின் சுயாதீன தன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டார். வடக்கு மாகாண ஆளுநரின் கொழும்பு கிளை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...

ஐ.நா.வின் கண்காணிப்புடன் வாக்கெடுப்பு நடத்துவதே சரியான தீர்வு – சிவாஜிலிங்கம்

இந்த நாட்டில் ஒருமித்து வாழ்வதா? அல்லது தனித்து வாழ்வதா? என வடக்கு கிழக்கு மக்களிடம் ஐ.நா. கண்காணிப்புடன் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அத்துடன் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையகத்தின் செயற்பாடு தமிழர்களுக்கு பாரிய தோல்வியைக் கொடுத்துள்ளதுடன், யுத்தம் முடிந்து 10 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் தமிழா்கள் நீதியை...

ஏப்ரல் இறுதிவரை மின்வெட்டுத் தொடரும் – மின்சார சபை விளக்கம்

ஏப்ரல் இறுதியில் பருவகால மழைவீழ்ச்சி ஏற்படும்வரை நாடுமுழுவதும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுத்தப்படும்” என்று மின்சார சபை அறிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அதிகரித்த வெப்பத்துடனான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தியாகும் நீர்வீழ்ச்சிகளின் நீர் வரத்துக்கு குறைவடைந்துள்ளது. அதனால் கிடைக்கின்ற மின் உற்பத்தியைக் கொண்டு மின் வழங்கலை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலைக்கு இலங்கை மின்சார சபை தள்ளப்பட்டுள்ளது. ஏப்ரல்...

சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தாதியர்கள் அறிவிப்பு

சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தாதியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 2 தினங்களுக்கு இந்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தாதியர்கள் அறிவித்துள்ளனர்.

எமது நிலங்களை விட்டுக்கொடுக்க இடமளிக்கமாட்டோம் – மாவை

காங்கேசன்துறையில் அமைந்துள்ள ராஜபக்ஷ அரண்மனையை மையமாகக்கொண்டு மேலும் 62 ஏக்கர் நிலப்பரப்பை அபகரிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு மற்றும் துறைமுகங்கள், கப்பற்துறை அலுவல்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம்...
Loading posts...

All posts loaded

No more posts