Ad Widget

தமிழ் மக்கள் மீது இராணுவம் இரசாயன குண்டுத்தாக்குதல் நடத்தியது – மாவை

இறுதி யுத்தத்தில் பொதுமக்களை இலக்கு வைத்து அரசாங்கம் தாக்குதல் நடாத்தியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் மீண்டும் குற்றம் சுமத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘இறுதி யுத்தத்தில் பொதுமக்களை ஒரே இடத்தில் கூடுமாறு இராணுவம் அறிவித்தது.

இவ்வாறு ஒரே இடத்தில் கூடியவர்கள் மீது இராணுவம் கொத்தணிக் குண்டுத்தாக்குதல் அதேபோன்று இரசாயன தாக்குதல் மேற்கொண்டது.

இதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. பல தொண்டு நிறுவனங்கள் இதுகுறித்து சாட்சியமளித்துள்ளன.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் இராணுவம் யுத்தக்குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டுள்ளது என்பது நிரூபணமாகியுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

Related Posts