- Monday
- May 11th, 2026
வாள்வெட்டு சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் உட்பட ஐந்து பேரையும் பிணையில் விடுவிக்க மல்லாகம் மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார். உடுவில் அம்பலவாணார் வீதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் கடந்த வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் புகுந்து 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று அடாவடியில் ஈடுபட்டது. 3 மோட்டார்...
வடக்கில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த 850 தமிழ் பொலிஸார் புதிதாக இணைக்கப்படவுள்ளனர். இதற்காக தமிழ் இளைஞர்கள் யுவதிகள் முன்வந்து இணைய வேண்டும் என வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் தெரிவித்தார். யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே...
தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வாக மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியலமைப்பு தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பல அரசியல் கட்சித் தலைவர்களுக்கிடையில் நேற்று (வியாழக்கிழமை) முக்கிய சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது கலந்துரையாடப்பட்ட விடயம் தொடர்பாக...
யாழ்ப்பாண பல்கலைக்கழக தொழிநுட்ப பீடத்தில் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் குறித்து பொலிஸார் பாரபட்சமாக நடப்பதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, ‘யாழ்ப்பாண பல்கலைக் கழக தொழில்நுட்ப பீடத்தில் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற பகிடிவதை சம்பவம் தொடர்பாக பெற்றோரிடமிருந்தும், பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாகவும் முறைப்பாடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து...
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அவர்கள் இழந்ததை மீளவும் வழங்க முடியாத போதும் அவர்களது கருத்துக்களுக்கேனும் செவிமடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவின் 30 வருட கால அரசியல் பயண பூர்த்தியை முன்னிட்டு நேற்று (வியாழக்கிழமை) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச...
யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான யாழ்.இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை அதிபர் மிகப் பெரும் நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன், வடமாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்றை நேற்று அனுப்பிவைத்துள்ளார். வடமாகாணக் கல்வி அதிகாரிகளின் முறைகேடுகளுக்கு...
காலாவதியான தண்ணீர்ப் போத்தல்களை விற்பனைக்கு வைத்திருந்த ஹோட்டல் முகாமையாளருக்கு நீதிவானால் 4 ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்டுள்ள குடிதண்ணீர்ப் போத்தல்களை அழிக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார். புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை மதிப்புறுத்தும் நிகழ்வு யாழ்ப்பாண நகர் ஆசீர்வாதம் வீதியிலுள்ள பிரபல்யமான விடுதி மண்டபத்தில் கடந்த 22ஆம் திகதி இடம்பெற்றது. வங்கி ஒன்றால் நடத்தப்பட்ட...
தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது எனத் தெரிவித்து வயோதிபர் ஒருவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று (புதன்கிழமை) தஞ்சமடைந்துள்ளார். இணுவில் பகுதியைச் சேர்ந்த 60-65 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவரே தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகத் தெரிவித்து யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று தஞ்சமடைந்திருந்தார். இந்நிலையில், அவரை...
சுற்றுலாப் பயணிகளை கவரும்விதமாக வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து புதிய விசா நடைமுறையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது. அந்த வகையில், பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் நுழைவிசா இன்றி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள முடியும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த நடைமுறை வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் திகதியிலிருந்து ஆறு மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும்...
முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்ட ‘காணி உரிமைக்கான மக்கள் ஊர்வலம்’ யாழ்ப்பாணத்தைச் வந்தடைந்துள்ளது. இந்த ஊர்வலம் இன்று (புதன்கிழமை) காலை யாழ்ப்பாணத்தைச் வந்தடைந்தது. இதன்போது யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களின் காணி உரிமையை வெற்றி கொள்வோம் எனும் தொனிப்பொருளில் கையொப்பம் திரட்டும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டது. மேலும் தமது...
இணுவில் கிழக்குப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த இளைஞர் ஒருவர், அங்கு வசித்துவரும் முதியவரை கத்தியால் குத்திவிட்டு தப்பித்துள்ளார். கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதியில் கத்திக்குத்துக் காயங்களுக்குள்ளான முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று நண்பகல் 11 மணியளவில் இடம்பெற்றது என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்....
யாழ்ப்பாணத்திலுள்ள மருந்தகங்களின் நிலைமையினை நேரில் ஆராயும் பொருட்டு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், யாழ். நகரிலுள்ள சில மருந்தகங்களிற்கு திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். இதன்போது மருந்தக உரிமையாளர்களுடன் சினேகபூர்வமாக கலந்துரையாடிய ஆளுநர், கடையடைப்பு நாளானாலும் மக்களின் அத்தியாவசிய தேவையினை பூர்த்தி செய்யும் நோக்கில் மருந்தகங்கள் திறந்திருந்தமையை பாராட்டினார். அத்தோடு வட மாகாணத்தில் உள்ள அனைத்து...
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட வளாகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் உள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரனினால் நேற்று(செவ்வாய்கிழமை) மாலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பகிடிவதை குறித்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டினைத்...
இலங்கை நாடாளுமன்றத்தில் 2018 ஆண்டில் வாயே திறக்காமல் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்துள்ளனர். இவர்களின் பட்டியலை நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளை கணிப்பிடும் மந்திரி இணையத்தளம் (Manthri.lk) வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரவு, அவர்கள் விவாதங்களில் கலந்துகொள்வது உள்ளிட்ட விடயங்களின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த உறுப்பினர்கள் தமக்கு வாக்களித்த மக்களின் பிரச்சனைகள் குறித்தோ அல்லது...
கிளிநொச்சியில் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வட. மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொசான் பெர்னாண்டோ நேற்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டுள்ளார். யாழ்.ஊடக அமையத்தினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே மேற்படி உத்தரவை கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அவர் விடுத்துள்ளார். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டப்...
வடக்கு மாகாணத்தில் உள்ள 248 பாடசாலைகளை மூடுவதற்கான அபாயம் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி 50 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பாடசாலைகளை மூடுவதற்கு மாகாண கல்வித் திணைக்களம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 50 இற்குக் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் இந்த ஆண்டு இறுதிக்குள், முன்னேற்றங்களை காண்பிக்காவிட்டால், அவற்றை மூடுவதற்கு மாகாண கல்வித் திணைக்களம் முடிவு...
வடக்கு மாகாண ரீதியாக நாளைமறுதினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்படும் பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்படும் போராட்டம் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஆகியோர் தெரிவித்ததாவது:-...
யாழ். நகரக்குளக் காணி குத்தகைக்கு வழங்கப்பட்ட விவகாரத்திலும் சரி அதனைச் சூழ அமைக்கப்பட்ட கடைத் தொகுதி விவகாரமானாலும் சரி முறைகேடுகளை ஏற்படுத்தியவர் யாழ் மாநகரின் முன்னாள் ஆணையாளர் சி.வி.கே சிவஞானமே. இன்று இச்சபையில் இந்த விவகாரம் விவாதிக்கப்படுவதற்கும் அவரே காரணமானவர் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாநகரசபை உறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான றெமீடியஸ்...
யாழ் மாநகர எல்லைக்குள் தமிழருக்கு மட்டும்தான் காணி நிலங்களோ அன்றி கட்டடங்களோ வழங்கப்படவேண்டும் என்ற சட்டவரையறை எதுவும் கிடையாது. ஏனைய தென்னிலங்கையைச் சேர்ந்த எவரும் வந்து இங்கு தமது செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும். இது தமிழருக்கு மட்டுமான பகுதி அல்ல என யாழ் மாநகரசபை முதல்வர் ஆர்னோல்ட் வலியுறுத்தியுள்ளார். நேற்றையதினம் மாநகர சபையில் யாழ் நகரக்குளப்...
மன்னார் மனித எச்சங்களின் ஆறாவது மாதிரியிலிருந்து போதிய அளவான மரபணு பொருட்களைப் பிரித்தெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், குறித்த அறிக்கை இதுவரையில் வெளியிடப்படவில்லையென காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது. தற்போது குறித்த மாதிரியின் மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், விரைவில் அதன் அறிக்கையும் நீதிமன்றிற்கும், சட்ட வைத்திய அதிகாரி மற்றும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக முன்னிலையாகும் சட்டத்தரணிக்கும் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக...
Loading posts...
All posts loaded
No more posts
