Ad Widget

மன்னார் மனித எச்சம் – கார்பன் அறிக்கை வெளியிடப்படாமைக்கான காரணம்!

மன்னார் மனித எச்சங்களின் ஆறாவது மாதிரியிலிருந்து போதிய அளவான மரபணு பொருட்களைப் பிரித்தெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், குறித்த அறிக்கை இதுவரையில் வெளியிடப்படவில்லையென காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது.

தற்போது குறித்த மாதிரியின் மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், விரைவில் அதன் அறிக்கையும் நீதிமன்றிற்கும், சட்ட வைத்திய அதிகாரி மற்றும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக முன்னிலையாகும் சட்டத்தரணிக்கும் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த 6 மாதிரிகளில் 5 மாதிரிகளின் கார்பன் பரிசோதனை அறிக்கை ஏற்கனேவே சட்டவைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷவினால் மன்னார் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

எனினும் குறித்த அறிக்கை உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்படும் வரையில், அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விபரங்களை வெளியிட முடியாது என்று மன்னார் நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts