கை குண்டு வெடித்ததில் சிறுவன் படுகாயம்!

யாழ்.புத்தூர் பகுதியில் கை குண்டை எடுத்து விளையாடியபோது அக்குண்டு வெடித்ததில் பாடசாலை சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் புத்தூர் மேற்கு நிலாவரை பகுதியில் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாடசாலை சிறுவன் ஒருவன் தோட்டத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது பயன்பாடற்ற காணி ஒன்றிலிருந்தே...

தவராசா அவர்கள் தெரிவித்த கருத்துக்கு தமிழ் மக்கள் கூட்டணி பதில்

முன்னைய வடமாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் திரு.தவராசா அவர்கள் அண்மைய உச்ச நீதிமன்றத் தீர்மானத்தை முன்வைத்து வருங்காலத்தில் அரசியல் இலாபம் பெற முயற்சிக்கின்றார். முன்னரும் அவரின் தேவையற்ற குற்றச்சாட்டுக்களுக்குப் பதில் அளித்திருக்கின்றோம். இப்பொழுது அவர் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முன்வைத்து மீண்டும் பழைய பல்லவியைப் பாட முயன்றுள்ளார். குறித்த உச்ச நீதிமன்ற வழக்கு சூழல் மற்றும் இயற்கையியல்...
Ad Widget

நகுலேஸ்வரத்தை புனிதபூமியாக்க ஜனாதிபதியுடன் கலந்தாலோசிக்கப்படும்

நல்லை ஞானசம்பந்தர் ஆதீன பிரதம குருக்கள் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மற்றும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் யாழ் நல்லை ஞானசம்பந்தர் ஆதீனத்தில் இடம்பெற்றது. யாழ் மாவட்டம் உள்ளிட்ட வடமாகாணத்தில் இந்துக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சனைகள் தொடர்பில் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டதுடன், வடமாகாணத்தில் அண்மைக்காலமாக மதங்களுக்கிடையில் தோற்றுவிக்கப்பட்டுள்ள...

யாழில் போராட்டத்தின் பின் வீடு திரும்பியவர் திடீர் மரணம்!

யாழ்ப்பாணம், மருதனார் மடத்தில் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர், வீடு திரும்பிய பின்னர் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றும் யாழ்.சுன்னாகத்தைச் சேர்ந்த நாகேந்திரம் சுபா தர்சன் (வயது-40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அண்மைக்காலமாக இந்து சமயத்துக்கும், இந்துக்களுக்கும் எதிராக அதிகரித்து...

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி வெளியானது!

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் ஏப்ரல் மாதச் சம்பளம் முன்கூட்டியே வழங்கப்படவுள்ளது. இதற்கமைய அவர்களுக்கான சம்பளம் இன்று (செவ்வாய்கிழமை) வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டைக் கொண்டாடவுள்ள அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கு புத்தாண்டு பண்டிகை முற்பணம் 10 ஆயிரம் ரூபாய் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையிலேயே அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் ஏப்ரல் மாதச் சம்பளம் இன்றைய...

யாழ். நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட சந்தேகநபர் தப்பி ஓட்டம்!

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த அழைத்துவரப்பட்ட சந்தேகநபர் ஒருவர் நீதிமன்றக் கட்டடத் தொகுதியின் கீழ் தளத்தின் ஊடாகப் பாய்ந்து பின் வாயிலூடாக தப்பித்து ஓடியுள்ளார். யாழ்ப்பாணம், கொட்டடி முத்தமில் வீதியைச் சேர்ந்த பாலராசா விஜிகாந்த என்ற சந்தேகநபரே நேற்று (திங்கட்கிழமை) இவ்வாறு பொலிஸாரின் பிடியிலிருந்து தப்பித்துள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர். கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ்...

யாழில் உப்பளம் உற்பத்தி நீரேற்றும் நிகழ்வு

யாழ்ப்பாணத்தில் 200 மில்லியன் ரூபாய் நிதியில் உப்பளம் உற்பத்தி நீரேற்றும் நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா வாமதேவன் தலைமையில் நேற்று (திங்கட்கிழமை) காலை 8 மணியளவில் உப்பளத்திற்கு நீரேற்றும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தனங்கிளப்பு, அறுகுவெளிப் பகுதியில் உப்பு உற்பத்தி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு, இந்த உப்பு...

இரணைமடு விசாரணை குழுவின் இறுதி அறிக்கை – ஆளுநரின் உத்தரவு

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த டிசெம்பர் மாதம் ஏற்பட்ட இடருக்கு இரணைமடுக் குளத்தின் பராமரிப்பு முகாமைத்துவத்தின் தவறு காரணம் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனை அடுத்து குறித்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால் வழங்கிய அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை உடன் நடைமுறைப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநரால் மாகாண பிரதம செயலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி பொறியியலாளர் ரகுநாதன்...

மீண்டும் பணிப்புறக்கணிப்பு – நாட்டு மக்களுக்கு நெருக்கடி!

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக சில ரயில் மற்றும் தனியார் பேருந்து சேவையாளர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இன்று நள்ளிரவு ஆரம்பிக்கப்படவுள்ள இந்த பணிப்புறக்கணிப்பு எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார். குறித்த பணிப்புறக்கணிப்புக்கு ரயில் இயந்திர சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள்...

முதலாவது வடமாகாண வட்ட மேசை கலந்துரையாடல்

"வடக்கு மாகாண பொருளாதார அபிவிருத்தி" என்ற தலைப்பில் ஆளுனரின் வட்டமேசை மாநாடு யாழ் பொது நுாலகத்தில் இன்று(4) இடம்பெற்றது வடக்கு மாகாண மத்தியவங்கி முகாமையாளர் சிவதீபன் , சிரேஸ்ர விரிவுரையாளர் அகிலன் கதிர்காமர் , ஆளுனர் சுரேன் இராகவன் , மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரி திரு. செல்வின் ஆகியோர் உட்பட பலதரப்பினர் பங்கேற்றிருந்தனர்...

கிளிநொச்சி உணவக உாிமையாளருக்கு ஒரு வருட சிறைத்தண்டணை!!

கிளிநொச்சியில் ஆளுநா் கலந்து கொண்ட நிகழ்வில் வழங்கப்பட்ட உணவுக்குள் புழுக்கள் காணப்பட்ட விவகாரத்தில் உணவக உாிமையாளருக்கு ஒரு வருட சிறைத் தண்டணை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் ஆளுநர் செயலக ஊழியர்களால் பெறப்பட்ட உணவுப் பொதிகளில் கானப்பட்ட கத்தரிக்காய் கறியில் புழு காணப்பட்டது. ஆளுநரின் பணிப்பின் பெயரில் குறித்த விடயம் கிளிநொச்சி நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது....

07 போக்குவரத்து குற்றங்களுக்கு 25,000 ரூபா அபராதம்!!

போக்குவரத்து குற்றங்களுக்கான குறைந்த பட்ச அபராதத் தொகையை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் வர்த்தமானி பத்திரம் வௌியிடப்பட்டுள்ளது.அதன்படி, 1) செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல். 2) மதுபானம் அல்லது போதைப்பொருள் பாவித்து வாகனம் செலுத்துதல். 3) தொடருந்து வீதியினுள் பாதுகாப்பின்றி வாகனத்தை செலுத்துதல். 4) செல்லுபடியாகும் வாகன காப்புறுதி இன்றி வாகனம் செலுத்தல்....

வாள்வெட்டு வன்முறையாளர்களுக்கு, பிணை வழங்குவது சமூகத்துக்கு அச்சுறுத்தல்! – நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல்

வாள்வெட்டு வன்முறைகள் பாரதூரமானவை. அவை சமூகத்தை பீதிக்குள்ளாக்குபவை. அவற்றில் ஈடுபடுவோருக்கு பிணை வழங்குவது சமூகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவே அமையும் எனச் சுட்டிக்காட்டிய யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல், வன்முறையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் சார்பான பிணை விண்ணப்பத்தை நிராகரித்துள்ளார். யாழ்ப்பாணம் கொக்குவில் கருவப்புலம் வீதியில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு...

முகாம்களில் எலும்புக்கூடுகள் காணப்படுவதாக காணாமல்போனோரின் உறவுகள் சந்தேகம்

யுத்த காலத்தின்போது மன்னாரில் விசாரணைகள் இடம்பெற்ற முகாம்களில் எலும்புக்கூடுகள் காணப்படலாம் என்று சந்தேகம் வெளியிட்ட காணாமலாக்கப்பட்டோரின் மன்னார் மாவட்ட சங்கத்தின் தலைவி மனுவல் உதயச்சந்திரா, இதன் காரணமாகவே முகாம்களை நிரந்தரமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார். மன்னாரில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “யுத்தம்...

மகாவலி அபிவிருத்தியினூடாக காணிகள் அபகரிக்கப்படுகின்றன – சுரேஸ்

மகாவலி அபிவிருத்தியினூடாக காணிகள் அபகரிக்கப்படுவதாக ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். அத்தோடு மகாவலி அபிவிருத்தி அதிகார சபை வடக்கில் இருக்குமாக இருந்தால், தமிழர்களது காணிகளுக்கு பாரிய ஆபத்தாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், வடக்கிற்கு மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை தேவையற்ற ஒன்றாகும் எனவும் அவர் கூறியுள்ளார். யாழில், நேற்று (வெள்ளிக்கிழமை)...

சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட 26 பேர் கிளிநொச்சியில் கைது!

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட சிறுவன் உள்ளடங்கலாக 26 பேர் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் வைத்து குறித்த 26 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் சட்டவிரோதமாக கனடாவுக்கு செல்லவிருந்த நிலையிலேயே கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய...

சி.வி. மூடி மறைத்த விடயங்கள் இப்போது வெளிவந்துள்ளன – தவராசா

நொதேன் பவர் நிறுவனத்தின் அசமந்ததால் சுன்னாகம் நிலத்தடி நீரில் எண்ணெய் கலக்கப்படவில்லை என வடக்கு மாகாண முன்னாள் முதலைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மூடி மறைத்த விடயங்கள் நீதிமன்ற தீர்ப்பின் ஊடாக வெளிக்கொணரப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கடசித் தலைவர் சி.தவராசா தெரிவித்தார். யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்....

2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

2019ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 119 வாக்குகளும் எதிராக 74 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. ஆளும்கட்சி மற்றும் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. மக்கள் விடுதலை முன்னணியும் கூட்டு எதிர்க் கட்சியான மஹிந்த ஆதரவு...

வரட்சியால் பாதிக்கப்பட்ட யாழ். மாவட்டத்துக்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

வரட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்டத்துக்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வரட்சிப் பாதிப்புக்குள்ளான ஏனைய மாவட்டங்களுக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிதித் தொகை அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்களிடம் வழங்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும...

யாழிலிருந்து ஹட்டன் நோக்கிப் புறப்பட்ட பேருந்து மீது தாக்குதல் – இருவர் காயம்

யாழ்ப்பாணத்திலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த பேருந்து மீது கொடிகாமம் பகுதியில் இனந்தெரியாதோரால் கல்வீச்சுத் தாக்குதலொன்று நடத்தப்பட்டுள்ளது. இதன்போது பேருந்தில் பயணம் செய்த இருவர் காயமடைந்துள்ளனர். கொடிகாமம் சந்திக்கு அருகிலுள்ள கைகாட்டிச் சந்திக்கு அருகில் வைத்து, மறைந்திருந்து மேற்கொள்ளப்பட்ட இந்த கல்வீச்சுத் தாக்குதலில் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்துள்ளன. இச்சம்பவம் குறித்து கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading posts...

All posts loaded

No more posts